January

புனிதமான பலன்

January 10

Divine Recompense

He that watereth shall be watered also himself. (Proverbs 11:25)
If I carefully consider others, God will consider me, and in some way or other He will recompense me. Let me consider the poor, and the Lord will consider me. Let me look after little children, and the Lord will treat me as His child. Let me feed His flock, and He will feed me. Let me water His garden, and He will make a watered garden of my soul. This is the Lord’s own promise; be it mine to fulfill the condition and then to expect its fulfillment.

I may care about myself till I grow morbid; I may watch over my own feelings till I feel nothing; and I may lament my own weakness till I grow almost too weak to lament. It will be far more profitable for me to become unselfish and out of love to my Lord Jesus begin to care for the souls of those around me. My tank is getting very low; no fresh rain comes to fill it; what shall I do? I will pull up the plug and let its contents run out to water the withering plants around me. What do I see? My cistern seems to fill as it flows. A secret spring is at work. While all was stagnant, the fresh spring was sealed; but as my stock Rows out to water others the Lord thinketh upon me. Hallelujah!

ஜனவரி 10

புனிதமான பலன்

எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும் (நீதி.11:25).

நான் மற்றவர்களைக் குறித்து அக்கறையோடு சிந்தித்துப் பார்த்தால் கடவுளும் என்னைப்பற்றிச் சிந்தித்துப் பார்ப்பார். ஏதாவது ஒரு விதத்தில் நமக்குப் பலன் அருளுவார். ஏழைஎளியவர்கள் மேல் நான் அக்கறை கொண்டால் கடவுள் என்மேல் அக்கறை கொள்வார். நான் சிறு பிள்ளைகளைப் பராமரித்தால் கடவுள் என்னை அவர் பிள்ளைபோல் நடத்துவார். அவர் மந்தைக்கு உணவுஅளித்தால் அவர் எனக்கு உணவு அளிப்பார். அவர் தோட்டத்துக்கு நீர் பாய்ச்சினால் என் ஆன்மாவை நீர் பாய்ச்சப்பட்ட தோட்டம் ஆக்குவார். இவை கடவுளின் வாக்குறுதிகள். இப்பரம ஒப்பந்தத்தில் என் பங்கை நிறைவேற்றி இந்த வாக்குறுதிகளின் நிறைவேறுதலை எதிர்நோக்கி இருப்பேனாக.

நான் நோய்நிலை அடையும்வரை என்னைப்பற்றியே கவலைப்பட்டுக் கொண்டிருக்கலாம். நான் உணர்வற்றவன் ஆகும்வரை என் உள்ளுணர்வுகளைக் காத்துப் பேணிவரலாம். நான் வருந்தக்கூடப் பெலனற்றவன் ஆகும்வரை என் தளர்ச்சியைக் குறித்துத் துயரப்படலாம். நான்தன்னயமற்றவனாகி, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின்மேல் எனக்குள்ள அன்பினால் என்னைச் சுற்றியுள்ளவர்களின் ஆத்துமாக்களுக்காகக் கவலைப்படுவது எனக்கு ஆதாயமாயிருக்கும். என் நீர்த்தேக்கத் தொட்டியில் தண்ணீர் குறைந்து கொண்டே போகிறது. அதை நிரப்பத்தக்கதாக மழைபெய்யவில்லையே! நான் என்ன செய்யலாம்? அதன் அடைப்புக் கட்டையை இழுத்து விட்டு என்னைச் சுற்றி வாடிக்கொண்டிருக்கும் செடிகளுக்குத் தண்ணீர்பாயச் செய்யலாம். அப்போது நான் பார்ப்பது என்ன? என் தொட்டியிலிருந்து நீர் வெளியேறிக் கொண்டிருக்கும் போதே அதுநிரப்பப்படுகிறது. மறைவாயுள்ள நீரூற்று ஒன்று இயங்கத் தொடங்குகிறது. நீர் வெளியேறாமல் இருக்கும் போது நீரூற்று அடைக்கப்பட்டிருந்தது. ஆனால் மற்றவைகளுக்கு நீர் பாய்ச்ச என் தொட்டியிலிருந்து தண்ணீர் வெளியேறும் போது ஆண்டவர் என்னை நினைவு கூருகிறார். அல்லேலூயா!

10. Januar

„Wer andere tränkt, der wird auch getränkt werden.“ Spr. 11, 25.

Wenn ich sorgsam an andere denke, so wird der Herr an mich denken; und in der einen oder anderen Weise wird Er mich belohnen. Wenn ich mich des Dürftigen annehme, so wird der Herr sich meiner annehmen. Wenn ich auf kleine Kinder acht habe, so wird der Herr mich als sein Kind behandeln. Wenn ich seine Herde weide, so wird Er mich weiden. Wenn ich seinen Garten begieße, so wird Er aus meiner Seele einen wohl begossenen Garten machen. Dies ist des Herrn eigene Verheißung; meine Sache sei es, die Bedingung zu erfüllen und dann zu erwarten, dass Er die Verheißung erfüllt.

Ich mag um mich selber sorgen bis zur Krankhaftigkeit, ich mag meine Gefühle beobachten, bis ich nichts mehr fühle, und ich mag meine eigene Schwachheit beklagen, bis ich fast zu schwach zum Klagen werde. Es wird mir viel nützlicher sein, uneigennützig zu werden und aus Liebe zu meinem Herrn anzufangen, für die Seelen derer um mich her zu sorgen. Mein Wasserbehälter wird sehr leer; kein frischer Regen kommt, ihn zu füllen; was soll ich tun? Ich will den Hahn drehen und das Wasser auslaufen lassen, die welkenden Pfl anzen um mich her zu tränken. Was sehe ich? Meine Zisterne scheint sich zu füllen während des Fließens. Eine geheime Quelle ist tätig. Solange alles stillstand, war der frische Born versiegelt; aber wenn mein Vorrat ausfl ießt, andere zu tränken, so denkt der Herr an mich. Halleluja!