June

ஆண்டவரே நம் தோழன்

June 20

The Lord Our Companion

Yea, though I walk through the valley of the shadow of death, I will fear no evil: for thou art with me; thy rod and thy staff they comfort me. (Psalm 23:4)

Sweet are these words in describing a deathbed assurance. How many have repeated them in their last hours with intense delight!

But the verse is equally applicable to agonies of spirit in the midst of life. Some of us, like Paul, die daily through a tendency to gloom of soul. Bunyan puts the Valley of the Shadow of Death far earlier in the pilgrimage than the river which rolls at the foot of the celestial hills. We have some of us traversed the dark and dreadful defile of “the shadow of death” several times, and we can bear witness that the Lord alone enabled us to bear up amid its wild thought, its mysterious horrors, its terrible depressions. The Lord has sustained us and kept us above all real fear of evil, even when our spirit has been overwhelmed. We have been pressed and oppressed, but yet we have lived, for we have felt the presence of the Great Shepherd and have been confident that His crook would prevent the foe from giving us any deadly wound.

Should the present time be one darkened by the raven wings of a great sorrow, let us glorify God by a peaceful trust in Him.

யூன் 20

ஆண்டவரே நம் தோழன்

நான் மரணஇருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன். தேவர்Pர் என்னோடே கூட இருக்கிறீர். உமது கோலும் உமது தடியும்என்னைத் தேற்றும் (சங்.23:4).

மரணப்படுக்கையில் இருப்பவர்களுக்கு எவ்வித நம்பிக்கை தேவை என்பதை இந்த வார்த்தைகள் விளக்குகின்றன. எத்தனையோ பேர் தங்களுடைய கடைசி நேரத்தில் மிக்கமகிழ்ச்சியுடன் அவற்றைத் திரும்ப திரும்ப சொல்லியிருக்கிறார்கள்.

உயிருடன் இருக்கும்போதே ஆவியில் தாங்கொணாத் துயர் அடைபவர்களுக்கும் இவை பொருந்தும். நம்மில் சிலர் பவுலைப் போல் ஒவ்வொரு நாளும் ஆன்ம வருத்தத்தினால் மரிக்கிறவர்களாய் இருக்கிறோம்.மோட்சப்பிரயாணத்தில் வானலோகக் குன்றுகளின் அடிவாரத்தில் பாய்ந்தோடும் ஆற்றுக்கு முன்னதாகவே மரண இருளின் பள்ளத்தாக்கை பனியன் விவரிக்கிறார். நம்மில் சிலர் இருண்டதும் பயங்கரமானதுமான மரண இருளின் பள்ளத்தாக்கைப் பலமுறை கடந்து சென்றிருக்கிறோம். வழியில்நமக்கு எதிர்ப்பட்ட கொடிய எண்ணங்கள் மனித புத்திக்கு எட்டாத திகில்கள் பயங்கரமான சோர்வு எல்லாவற்றையும் தைரியமாகத் தாங்கிக் கொள்ள ஆண்டவரே துணைபுரிந்தார் என்பதற்கு நாம் சாட்சி கூறலாம். நம் ஆவி நசுக்கப்பட்டபோது கூட ஆண்டவர் நம்மைத் தாங்கி நிலைநிறுத்திதீமையைக் குறித்து நாம் அச்சம் கொள்ளாமல் இருக்கச்செய்திருக்கிறார். நாம் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்திருக்கிறோம். ஆயினும் உயிரோடு இருந்திருக்கிறோம். ஏனெனில் சிறந்த மேய்ப்பரின் சமுகம் நம்மோடு இருந்ததை உணர்ந்து எதிரி நம்மைப் பயங்கரமாகக்காயப்படுத்தாதபடி அவர் துரட்டு கோல் நம்மைக் காப்பாற்றும் என்று திட்டமாய் நம்பியிருக்கிறோம்.

இப்பொழுது துக்கத்தினால் உங்கள் நாட்கள் இருண்டு போயிருகு;கின்றனவா? அமைதியாக இருந்து கடவுள் பேரில் நம்பிக்கை வைப்பதால் அவரை மகிமைப்படுத்துவோமாக.

20. Juni

„Und ob ich schon wandere im Tal des Todesschattens, fürchte ich kein Unglück; denn Du bist bei mir; Dein Stecken und Stab trösten mich.“ Ps. 23, 4.

Süß sind diese Worte, indem sie die Zuversicht eines Sterbebettes beschreiben. Wie viele haben sie in ihren letzten Stunden mit inniger Freude wiederholt!

Aber dieser Vers ist ebenso anwendbar auf die Angst der Seele mitten im Leben. Einige von uns sterben wie Paulus täglich durch eine Neigung zum Trübsinn. Bunyan legt das Tal des Todesschattens viel früher in die Pilgerreise hinein, als den Strom, der am Fuße der himmlischen Hügel fließt. Manche von uns sind mehrere Male durch die finstere und furchtbare Enge des „Todesschattens“ gegangen, und wir können es bezeugen, dass der Herr allein uns fähig machte, aufrecht zu stehen unter den wilden Gedanken, den geheimnisvollen Schrecken und dem furchtbaren Druck desselben. Der Herr hat uns gestärkt und uns über aller wirklichen Furcht vor Unglück empor gehalten, selbst wenn unser Geist daniedergebeugt war. Wir sind gedrückt und unterdrückt worden, aber dennoch sind wir am Leben geblieben, denn wir haben die Gegenwart des großen Hirten gefühlt und die Zuversicht gehabt, dass sein Hirtenstab den Feind hindern würde, uns eine tödliche Wunde zu versetzen.

Sollte diese jetzige Zeit eine durch die Rabenflügel eines großen Schmerzes verdunkelte sein, so lasst uns Gott verherrlichen durch ein friedevolles Vertrauen auf Ihn.