மாறிப்போகாத தேவ அழைப்பு
2023 பெப்ரவரி 28 (வேத பகுதி: யோசுவா 24,32 முதல் 33 வரை) “இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலேயிருந்து கொண்டுவந்த யோசேப்பின் எலும்புகளை அவர்கள் சீகேமிலே … அடக்கம்பண்ணினார்கள்” (வசனம் 32). தேவன் தம்முடைய வாக்குறுதியைக் காப்பாற்றுவதில் உண்மையுடன் நடந்துகொள்வார் என்று யோசேப்பு உறுதியாக நம்பினான். அவன் பலவித இன்னல்களைச் சந்தித்தபோதும், தன் வாழ்வில் தேவனுடைய வார்த்தைகள் நிறைவேறின என்பதை அனுபவத்தில் கண்டவன். எனவே, தன்னுடைய மரண நேரத்தில், “தேவன் உங்களைச் சந்திக்கும்போது, என் எலும்புகளை இவ்விடத்திலிருந்து கொண்டுபோவீர்களாக”…