January

யோசுவாவின் கீழ்ப்படிதல்

2023 ஜனவரி 31 (வேத பகுதி: யோசுவா 11,1 முதல் 11 வரை) “யோசுவா கர்த்தர் தனக்குச் சொன்னபடியெல்லாம் செய்து…” (வசனம் 9). ஆத்சோரின் அரசன் யாபீன் தனக்குக் கீழாக இருந்த அனைத்து அரசர்களையும் அவர்களுடைய இராணுவத்தையும் கூட்டி மேரோம் ஏரி அருகே யோசுவாவுக்கு விரோதமாக போருக்கு வந்தான். கடற்கரை மணலைப் போன்ற வீரர்கள், குதிரைகள், இரதங்கள் ஆகியவற்றோடு வந்தான். ஆனால் போருக்கு முந்தைய இரவில் தெய்வீக வாக்குறுதியைப் பெற்றுக்கொள்ளவில்லை என்றால் யோசுவாவின் இருதயம் சோர்வடைந்திருக்கலாம். யோசுவா…

January

வெற்றிக்குப் பின் சுயபரிசோதனை

2023 ஜனவரி 30 (வேத பகுதி: யோசுவா 10,28 முதல் 43 வரை) பின்பு யோசுவா இஸ்ரவேலனைத்தோடும்கூடக் கில்காலிலிருக்கிற பாளயத்துக்குத் திரும்பினான்” (வசனம் 43). யோசுவா வெற்றிமேல் வெற்றி அடைந்தான். கர்த்தர் அவனுக்கு முன்பாகச் சென்றார். கானான் தேசத்திலுள்ள ஒவ்வொரு அரணான பட்டணங்களையும் கைப்பற்றினான். அதன் அரசர்களும், இராணுவமும், குடிமக்களும் யோசுவாவின் படைக்கு முன் சிதறி ஓடினார்கள். கர்த்தர் அவர்கள் அனைவரையும் அவன் கையில் ஒப்புக்கொடுத்தார். யுத்தம் கர்த்தருடையதாக இருந்தது. போரை கர்த்தர் நடத்தினாரா அல்லது யோசுவாவின்…

January

வெற்றியை நிரந்தரமாக்குதல்

2023 ஜனவரி 29 (வேத பகுதி: யோசுவா 10,15 முதல் 27 வரை) “ஜனங்களெல்லாரும் சுகமாய் மக்கெதாவிலிருக்கிற பாளையத்திலே, யோசுவாவினிடத்திற்குத் திரும்பி வந்தார்கள். இஸ்ரவேல் புத்திரருக்கு விரோதமாக ஒருவனும் தன் நாவை அசைக்கவில்லை” (வசனம் 21). கர்த்தர் இஸ்ரயேலுக்காக யுத்தம் பண்ணும்போது அவருக்கு எதிராக யார் நிற்க முடியும்? யோசுவாவுக்கு விரோதமாக வந்த ஐந்து அரசர்களையும் கர்த்தர் புறமுதுகிட்டு ஓடச் செய்தார். இந்த எமோரியர்களின் ஐந்து அரசர்களும் மக்கெதா என்னுமிடத்திலுள்ள ஒரு குகையில் ஒளிந்துகொண்டார்கள். எதிர்காலத்தில் ஆட்டுக்குட்டியானவருடைய…

January

நீண்ட பகல் பொழுது

2023 ஜனவரி 28 (வேத பகுதி: யோசுவா 10, 1 முதல் 14 வரை) “இப்படிக் கர்த்தர் ஒரு மனிதனுடைய சொல்கேட்ட அந்த நாளையொத்த நாள் அதற்கு முன்னுமில்லை, அதற்குப் பின்னுமில்லை; கர்த்தர் இஸ்ரவேலுக்காக யுத்தம்பண்ணினார்” (வசனம் 14). யோசுவாவும் இஸ்ரயேல் மக்களும் எரிகோவின் மீதும் ஆயியின் மீதும் பெற்ற மாபெரும் வெற்றிக்குப் பின்னர், கர்த்தர் அவர்களுக்குச் சற்று ஓய்வைக் கொடுத்தார். கிபியோனியர் தாங்கள் அழிக்கப்படாதபடிக்கு சரணடைந்தார்கள். நம்முடைய கிறிஸ்தவ அனுபவத்திலும் இது உண்மையாயிருக்கிறது. சில நேரங்களில்…

January

கிபியோனியர் பெற்ற நன்மை

2023 ஜனவரி 27 (வேத பகுதி: யோசுவா 9,16 முதல் 27 வரை) “அவர்களோடே உடன்படிக்கை பண்ணி, மூன்றாம் நாள் சென்றபின்பு, அவர்கள் தங்கள் அயலார் என்றும் தங்கள் நடுவே குடியிருக்கிறவர்கள் என்றும் கேள்விப்பட்டார்கள்” (வசனம் 16). எரிகோவின் வெற்றிக்குப் பின்னர், ஆயி பட்டணத்தைப் பிடித்துக்கொண்ட பின்னர் இஸ்ரயேல் மக்களின் அடுத்த இலக்கு கிபியோன். ஆனால் மூன்று நாட்கள் கழித்து இவர்கள் கிபியோனியர் என்றும், தாங்கள் அழிக்க வேண்டிய பட்டணங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், தாங்கள் வஞ்சிக்கப்பட்டோம் என்பதும்…

January

கிபியோனியரின் வஞ்சகம்

2023 ஜனவரி 26 (வேத பகுதி: யோசுவா  9,1 முதல் 15 வரை ) “எரிகோவுக்கும் ஆயிக்கும் யோசுவா செய்ததைக் கிபியோனின் குடிகள் கேள்விப்பட்டபோது, ஒரு தந்திரமான யோசனை பண்ணி(னார்கள்)” (வசனம் 3,4). கானானின் குடிகள் பல்வேறு இனங்களாக நாடுகளாக பிரிந்து கிடந்தார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிடுகிறவர்களாகவும் பகைமை கொண்டவர்களாகவும் இருந்தார்கள். ஆனால் தேவனுடைய மக்களாகிய இஸ்ரயேலர் வருகிறதைக் கேள்விப்பட்டபோது, ஏத்தியரும், எமோரியரும், கானானியரும், பெரிசியரும் ஏவியரும் எபூசியரும் ஒன்றுகூடி அவர்களை எதிர்க்க முடிவுபண்ணினார்கள் (வசனம் 1).…

January

வெற்றிக்குப் பின் தொழுகை

2023 ஜனவரி 25 (வேத பகுதி: யோசுவா 8,18 முதல் 35 வரை) “யோசுவா ஆயியைச் சுட்டெரித்து, அதை இந்நாள் வரைக்கும் இருக்கிறபடி என்றைக்கும் பாழாய்க்கிடக்கும் மண்மேடாக்கி(னான்) ” (வசனம் 28). யோசுவா திறமையான முறையிலும் தந்திரமான முறையிலும் போர் ஆயத்தங்களைச் செய்தான். இஸ்ரவேலர்கள் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றார்கள். ஆயினும் ஆயியின் அரசன் மீதும் அந்த மக்கள் மீதும் பெற்ற வெற்றி என்பது கர்த்தரைச் சார்ந்ததாகவே இருந்தது. ஆயி நகரத்திலிருந்து மிகக் குறுகிய தூரத்தில் முப்பதாயிரம்…

January

தோல்விக்குப் பின் மீண்டும் போர்

2023 ஜனவரி 24 (வேத பகுதி: யோசுவா 8,4 முதல் 17)  “அதிகாலமே யோசுவா எழுந்திருந்து, ஜனங்களை இலக்கம்பார்த்து, இஸ்ரவேலின் மூப்பரோடுங்கூட ஜனங்களுக்கு முன்னாலே நடந்து ஆயியின்மேல் போனான்” (வசனம் 10). தேவன் ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொருவரிடத்திலும் வித்தியாசமான முறையில் செயல்படுகிறார். எரிகோவின் கோட்டை தகர்க்கப்பட்டதுபோல ஆயி பட்டணத்துக்கு அவர் செய்யவில்லை. மக்கள் தேவனைச் சார்ந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவும், அவருக்கே எல்லாவிதமான மகிமையும் கொடுக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் ஓர் அற்புதமான முறையில் செயல்பட்டார். ஆனால் ஆயி பட்டணத்துக்கு…

January

தோல்வியிலிருந்து மீண்டெழுதல்

2023 ஜனவரி 23 (வேத பகுதி: யோசுவா 8,1 முதல் 3 வரை) “ஆயி பட்டணத்தின்மேல் போ, இதோ, ஆயியின் ராஜாவையும் அவன் ஜனத்தையும் அவன் பட்டணத்தையும் அவன் நாட்டையும் உன் கையிலே ஒப்புக்கொடுத்தேன்” (வசனம் 1). ஆகானின் காரியம் சரி செய்யப்பட்ட பிறகு கர்த்தர் தம்முடைய கோபத்தின் உக்கிரத்தை விட்டுத் திரும்பினார். இப்போது யோசுவா கர்த்தரிடமிருந்து ஓர் உற்சாகமான வார்த்தையையும், ஒரு வாக்குறுதியையும் பெற்றார். எப்பொழுது நாம் கர்த்தருடனான உறவைச் சரிசெய்கிறோமோ அப்பொழுது அவர் நம்மோடு…

January

பாவத்தால் வந்த தோல்வி

2023 ஜனவரி 22 (வேத பகுதி: யோசுவா 7,1 முதல் 26 வரை) “ஆனாலும் அவர்கள் ஆயியின் மனுஷருக்கு முன்பாக முறிந்தோடினார்கள்” (வசனம் 4). மனித இயல்பு எவ்வளவு பொல்லாததாகவும் கீழ்ப்படிய மனதற்றதாகவும் இருக்கிறது என்பதற்கு ஆகானின் செயல் நமக்குச் சுட்டிக்காட்டுகிறது. பண ஆசை எல்லாத் தீமைக்கும் மூலகாரணமாயிருக்கிறது என்றும், பொருளாசை சிலைவழிபாட்டுக்கு நிகரானது என்றும் புதிய எற்பாடு எச்சரிக்கிறது (1 தீமோத்தேயு 6,10; கொலோசேயர் 3,5). எரிகோ நெருப்பால் சுட்டெரிக்கப்பட்டபோது, ஆகான் என்னும் மனிதன் அங்கே…