September

வீண் வைராக்கியம்

2023 செப்டம்பர் 30 (வேத பகுதி: 1 சாமுவேல் 14,38 முதல் 45 வரை) “அப்பொழுது சவுல்: யோனத்தானே, நீ சாகத்தான்வேண்டும் … என்றான்” (வசனம் 44). நம்முடைய வார்த்தைகளில் நாம் எவ்வளவு கவனமாயிருக்க வேண்டும் என்பதற்கு சவுலின் அவசரத் தீர்மானங்களும் திடீர் ஆணைகளும் ஒரு எச்சரிக்கையாயிருக்கின்றன. போர் முடியும் வரை ஒருவரும் உணவு உண்ணக்கூடாது என்று தேவையில்லாத ஆணையைப் பிறப்பித்து, மக்கள் சோர்ந்துபோவதற்கும், உடினடியாக எதிரிகளைத் தொடர்ந்துபோய் அழிக்கமுடியாதபடிக்கும், கர்த்தருடைய பிரமாணத்தை மீறுவதற்கும் காரணமாயிருந்தான். இப்பொழுது…

September

மறைவான குற்றங்கள்

2023 செப்டம்பர் 29 (வேத பகுதி: 1 சாமுவேல் 14,35 முதல்  37 வரை) “சவுல் தேவனிடத்தில் விசாரித்தான்; அவர் அந்த நாளிலே அவனுக்கு மறு உத்தரவு அருளவில்லை” (வசனம் 37). உபவாசத்தைக் குறித்து சவுல் போட்ட ஆணையால் மிகுந்த பசியோடும் களைப்போடும் இருந்த வீரர்கள் விலங்குகளின் மாம்சத்தை இரத்தத்தோடு புசிக்கத்தொடங்கினார்கள் என்று நேற்றைய தினம் சிந்தித்தோம். மக்களைப் பாவத்திலிருந்து தடுக்க நினைத்து, தேவன் சொல்லாத அல்லது வேதம் கூறாத சட்டதிட்டங்களை மக்கள்மீது திணிக்கும்போது, அவர்கள் அதைக்…

September

தவறான தீர்மானங்கள்

2023 செப்டம்பர் 28 (வேத பகுதி: 1 சாமுவேல் 14,25 முதல்  34 வரை) “ஜனங்கள் காட்டிலே வந்தபோது, இதோ, தேன் ஒழுகிக்கொண்டிருந்தது; ஆனாலும் ஒருவனும் அதைத் தன் கையினாலே தொட்டுத் தன் வாயில் வைக்கவில்லை; ஜனங்கள் அந்த ஆணையினிமித்தம் பயப்பட்டார்கள்” (வசனம் 26). சவுல் தலைமையிலான இஸ்ரவேலருக்கும் பெலிஸ்தியருக்கும் இடையிலான போர் இன்னும் முழுமையாக முடிவடையவில்லை. இப்பொழுது போரில் ஈடுபட்ட இஸ்ரவேல் மக்கள் அனைவருக்கும் உணவு தேவை, அவர்கள் பசியாயிருக்கிறார்கள். அவர்கள் கூடிவந்த இடத்தில், காட்டில்…

September

அதிகார எல்லை மீறுதல்

2023 செப்டம்பர் 27 (வேத பகுதி: 1 சாமுவேல் 14,23 முதல் 24 வரை) “இப்படிக் கர்த்தர் அன்றையதினம் இஸ்ரவேலை ரட்சித்தார்” (வசனம் 23). கர்த்தர் யோனத்தானைப் பயன்படுத்தினார், அவனுடைய உதவியாளனைப் பயன்படுத்தினார், சவுலையும் வீரர்களையும் பயன்படுத்தினார். பெலிஸ்தியர்களோடு உறவுவைத்திருந்த சிலரையும் பயன்படுத்தினார், பயந்து ஒளிந்து கொண்டிருந்த இஸ்ரவேலரையும் பயன்படுத்தினார், மேலும் பெலிஸ்தியர்களையே பெலிஸ்தியர்களுக்கு விரோதமாகவும் பயன்படுத்தினார். ஆகவே வெற்றிக்கு மூலகாரணர் கர்த்தராகவே இருக்கிறார். ஆயினும் கர்த்தர் வெற்றியைத் தரவேண்டுமாயின், யோனத்தானைப் போல விசுவாசமும், தைரியமும் கொண்ட…

September

முன்மாதிரியற்ற தலைவன்

2023 செப்டம்பர் 26 (வேத பகுதி: 1 சாமுவேல் 14,20 முதல் 22 வரை) “சவுலும் அவனோடிருந்த ஜனங்களும் கூட்டங்கூடிப் போர்க்களத்திற்குப் போனார்கள்” (வசனம் 20). நீண்ட தயக்கத்துக்குப் பிறகு, “சவுலும் அவனோடிருந்த ஜனங்களும் கூட்டங்கூடிப் போர்க்களத்திற்குப் போனார்கள்” (வசனம் 20). யோனத்தான் தன் உதவியாளனுடன் தன்னந்தனியாய் போனபோது, சவுல் மரத்தின் அடியில் காத்துக்கிடந்தான், பெலிஸ்தியர் தோல்வி கண்டபோது, யார் காரணம் என வீரர்களை எண்ணிக்கொண்டிருந்தான், யுத்தம் அதிகரித்தபோது ஆசாரியனை அழைத்து தேவ சித்தத்தைத் தேட முயன்றுகொண்டிருந்தான்.…

September

முடிவெடுப்பதில் தெளிவின்மை

2023 செப்டம்பர் 25 (வேத பகுதி: 1 சாமுவேல் 14,18 முதல் 19 வரை) “அப்பொழுது சவுல் அகீயாவை நோக்கி: தேவனுடைய பெட்டியைக் கொண்டுவா என்றான்; தேவனுடைய பெட்டி அந்நாட்களில் இஸ்ரவேல் புத்திரரிடத்தில் இருந்தது” (வசனம் 18). பெலிஸ்திய இராணுவத்தில் குழப்பம் உண்டாகி, அவர்கள் தங்களுக்குள் ஒருவரையொருவர் தாக்கி அழித்துக்கொண்டிருந்த வேளையில், சவுல் இதற்குக் காரணமானவர் யார், இதற்குத் தலைமை தாங்கியவர் யார், என்று சவுல் ஆட்களை எண்ணிக்கொண்டிருந்த செயல் சற்று விநோதமானதே (வசனம் 17). தன்னோடிருந்த…

September

தேவனுடைய வல்லமை

2023 செப்டம்பர் 24 (வேத பகுதி: 1 சாமுவேல் 14,15 முதல் 17 வரை) “அப்பொழுது பாளயத்திலும் வெளியிலும், சகல ஜனங்களிலும், பயங்கரம் உண்டாகி, … பூமியும் அதிர்ந்தது; அது தேவனால் உண்டான பயங்கரமாயிருந்தது” (வசனம் 15). யோனத்தானும் அவனுடைய ஆயுததாரியும் கர்த்தர் எவ்வளவு பெரியவர் என்றே சிந்தித்தார்களே தவிர, எதிரிகள் எவ்வளவு பெலமுள்ளவர்கள் என்று சிந்திக்கவில்லை. இதுவே அவர்கள் முதல் கட்டத்திலேயே எதிரிகளை அடித்து வீழ்த்துவதற்குக் காரணமாக அமைந்தது. இந்தத் திடீர் தாக்குதல் பெலிஸ்தியர்களை அதிர்ச்சியடையச்…

September

விசுவாசத்தின் அடையாளம்

2023 செப்டம்பர் 23 (வேத பகுதி: 1 சாமுவேல் 14,8 முதல் 14 வரை) “எங்களிடத்துக்கு ஏறிவாருங்கள் என்று சொல்வார்களானால், ஏறிப்போவோம்; கர்த்தர் அவர்களை நம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; இது நமக்கு அடையாளம் என்றான்” (வசனம் 10). செங்குத்தான பாறையில் மட்டுமல்ல, விசுவாசத்தின் படிக்கட்டிலும் முன்னேறிச் சென்று கொண்டிருக்கிற யோனத்தான், கர்த்தர் உண்மையிலேயே தன்னை வழிநடத்துகிறாரா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள விரும்பினான். விசுவாசம் என்பது ஒரு குருட்டு நம்பிக்கையன்று, அது பகுத்தறிவு மிக்க பாதையாகும். இந்தத் தருணத்தில், அவன்…

September

இணைந்து பயணித்தல்

2023 செப்டம்பர் 22 (வேத பகுதி: 1 சாமுவேல் 14,7) “அப்பொழுது அவன் ஆயுததாரி அவனைப் பார்த்து: உம்முடைய இருதயத்தில் இருக்கிறபடியெல்லாம் செய்யும்; … நானும் உம்மோடேகூட வருகிறேன் என்றான்” (வசனம் 7). தேவனுடைய மக்களாகிய நாம் எப்பொழுதெல்லாம் நமக்கு எதிராக பலமடங்கு எதிரிகளும், எதிர்ப்புகளும் இருப்பதாக உணருகிறோமோ அப்பொழுதெல்லாம் இந்த யோனத்தான் என்னும் இளைஞனின் உறுதியையும், நம்பிக்கையும் நினைவுகூருவோம். எல்லாரும் ஒன்று சேர்ந்து இருந்தாலும், தனித்து நிற்பதன் வாயிலாக நமக்கு ஊக்கமளிக்கிறான் இந்த யோனத்தான். ஒரு…

September

விசுவாசத்தின் பலன்

2023 செப்டம்பர் 21 (வேத பகுதி: 1 சாமுவேல் 14,6) “அநேகம்பேரைக் கொண்டாகிலும், கொஞ்சம் பேரைக் கொண்டாகிலும், ரட்சிக்கக் கர்த்தருக்குத் தடையில்லை என்றான்” (வசனம் 6). இடுக்கமான வாசல் வழியாய்ச் செல்வது கடினமானதுதான். கிறிஸ்தவம் என்பது நாம் நினைத்தபடி வாழ்கிற ஒரு வாழ்க்கை அல்ல, அது கட்டுப்பாடுகளும் விதிமுறைகளும் கொண்ட வாழ்க்கை ஆகும். இந்த உலகத்தில் வாழ்கிற எல்லாரைப் போலவும் கிறிஸ்தவர்களுக்கும் துன்பங்களும் பிரச்சினைகளும் ஏற்படவே செய்கின்றன. ஆயினும் நமக்கு ஒரு நம்பிக்கை இருக்கிறது. அது யோனத்தான்…