மூன்று மரணங்கள்
2023 மே 31 (வேத பகுதி: ரூத் 1,3 முதல் 5 வரை) “நகோமியின் புருஷனாகிய எலிமெலேக்கு இறந்துபோனான்; அவளும் அவளுடைய இரண்டு குமாரரும் மாத்திரம் இருந்தார்கள்” (வசனம் 3). எலிமெலேக்கும் அவனுடைய குடும்பமும் எந்த எதிர்பார்ப்புடன் மோவாப் தேசத்துக்கு வந்தார்களோ அது அங்கே நிறைவேறவில்லை. இவன் தன் கடவுளை விட்டு, தன் நாட்டை விட்டு, தன் இனத்தை விட்டு மோவாப்புக்கு வந்தான். சிறப்பானதைப் பெற்றுக்கொள்ளும்படி வந்தான், ஆனால் இருப்பதையும் இழந்தான். முடிவில் தன் உயிரை இழந்தான்.…