கிரயத்துக்குக்கொள்ளப்படுதல்
2023 யூன் 30 (வேத பகுதி: ரூத் 4,7 முதல் 10 வரை) “ரூத்தை எனக்கு மனைவியாகக் கொண்டேன்; அதற்கும் இன்றைய தினம் நீங்கள் சாட்சி என்றான்” (வசனம் 10). நெருங்கிய உறவினனாகிய சுதந்தரவாளியானவன் ரூத்தை என்னால் மீட்க இயலாது என்று ஒதுங்கிக்கொண்டான். இதற்கு அடையாளமாகத் தன்னுடைய காலணியைக் கழற்றி போவாசிடம் அளித்துவிட்டான் (வசனம் 8). அதாவது தன்னுடைய மீட்கும் உரிமையை போவாசுக்கு வழங்கிவிட்டான். நியாயப்பிரமாணம் பாவம் இன்னதென்று அறியப்பண்ணுமே தவிர அதற்கு பாவத்திலிருந்து மீட்பதற்கு வலிமை…