ஒளிக்கும் இருளுக்குமான போர்
2023 மார்ச் 31 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 7,15 முதல் 25 வரை) “கிதியோனும் அவனோடிருந்த நூறுபேரும் அந்த ஜாமத்தின் துவக்கத்திலே பாளையத்தின் முன்னணியில் வந்து, எக்காளங்களை ஊதி, தங்கள் கையிலிருந்த பானைகளை உடைத்தார்கள்” (வசனம் 19). மாபெரும் மீதியானியரின் சேனையை முறியடிக்க கர்த்தரையே சார்ந்துகொள்ள வேண்டும் என்பதை அறிந்தவனாக, யோசுவாவைப் போலவே கிதியோனும் கர்த்தரைத் தொழுது கொண்டு போருக்கு ஆயத்தமானான் (வசனம் 15; யோசுவா 5,13 முதல் 15). நாம் விசுவாசத்தோடு செல்வோமானால், “அநேகம்பேரைக் கொண்டாகிலும்,…