December

துயரமான முடிவு

2023 டிசம்பர் 31 (வேத பகுதி: 1 சாமுவேல் 31,1 முதல் 13 வரை) “அப்படியே அன்றையதினம் சவுலும், அவன் மூன்று குமாரரும், அவன் ஆயுததாரியும், அவனுடைய எல்லா மனுஷரும் ஒருமிக்கச் செத்துப்போனார்கள்” (வசனம் 6). தாழ்மையோடு தொடங்கிய சவுலின் அரசாட்சி கில்போவா மலைச் சரிவின் மேடுகளில் அவமானத்தோடு நிறைவுற்றது. ஒரு கோழைத்தனமான முதியவராக, தனது வாழ்க்கையை முடிக்கும்படி தன் ஆயுததாரியிடம் கெஞ்சி, அதுவும் இயலாததால் தன் உயிரைத் தானே முடித்துக்கொண்டு மாண்டுபோனார். தாவீது அமலேக்கியரை வென்று,…

December

சமநிலைப் பிரமாணம்

2023 டிசம்பர் 30 (வேத பகுதி: 1 சாமுவேல் 30,21 முதல் 31 வரை) “அதற்குத் தாவீது: என் சகோதரரே, கர்த்தர் நமக்குத் தந்ததை நீங்கள் இப்படிச் செய்ய வேண்டாம்” (வசனம் 23). தாவீது இழந்தவற்றையும் அமலேக்கியரிடமிருந்த கொள்ளைப் பொருட்களையும் மீட்டுவரும்போது, அதைப் பங்கு பிரிப்பதில் சற்றுச் சலசலப்பு ஏற்பட்டது. நாம் காலை முதல் மாலை வரை சண்டையிட்டோம் ஆகவே நமக்கு மட்டுமே இவை சொந்தம் என்று அந்த இருநூறுபேரும் கூறினார்கள். ஆயினும் கர்த்தருடைய உள்ளத்தைக் கொண்டிருந்த…

December

கொஞ்சப் பெலமும் பெரிய வல்லமையும்

2023 டிசம்பர் 29 (வேத பகுதி: 1 சாமுவேல் 30,9 முதல் 20 வரை) “தாவீது அவனை நோக்கி: நீ யாருடையவன்? நீ எவ்விடத்தான் என்று கேட்டதற்கு, அவன்: நான் ஒரு அமலேக்கியனுடைய வேலைக்காரனாகிய எகிப்து தேசத்து பிள்ளையாண்டான்; மூன்று நாளைக்குமுன் நான் வியாதிப்பட்டபோது, என் எஜமான் என்னைக் கைவிட்டான்” (வசனம் 13). தாவீதும் அவனுடன் இருந்த அறுநூறு பேரும் சிக்கலாகைக் கொள்ளையடித்த கூட்டத்தைத் தேடிச் சென்றார்கள். சற்று முன்னர்தான் இந்த அறுநூறு பேரும் தாவீதைக் கல்லெறியும்…

December

கர்த்தருக்குள் நமது பெலன்

2023 டிசம்பர் 28 (வேதபகுதி: 1 சாமுவேல் 30,1 முதல் 8 வரை) “தாவீது மிகவும் நெருக்கப்பட்டான்; … தாவீது தன் தேவனாகிய கர்த்தருக்குள்ளே தன்னைத் திடப்படுத்திக்கொண்டான்” (வசனம் 6). தாவீது பெலிஸ்தியர்களோடு இணைந்து, சவுலுக்கு விரோதமாகவும், தன் நண்பன் யோனத்தானுக்கு விரோதமாகவும், தன் சொந்த மக்களாகிய இஸ்ரவேலருக்கு விரோதமாகவும் போரிடாதபடிக்குக் கர்த்தர் தமது கிருபையால் அவனைத் தடுத்துக்கொண்டார். தாவீது போருக்குச் சென்றிருந்தால், இஸ்ரவேல் நாட்டிற்கு தாவீது ராஜாவாவதில் மிகப் பெரிய சிக்கல் ஏற்பட்டிருக்கும். பல தருணங்களில்…

December

கிருபையின் பெருக்கம்

2023 டிசம்பர் 27 (வேத பகுதி: 1 சாமுவேல் 29,1 முதல் 11 வரை) “அப்பொழுது பெலிஸ்தரின் பிரபுக்கள்: இந்த எபிரெயர் என்னத்திற்கு என்றார்கள்” (வசனம் 3). தாவீது இருக்கக்கூடாத இடத்திலே இருந்தான். இவன் பெலிஸ்தியர்களோடு இணைந்து எபிரெயர்களை எதிர்க்கும்படி போருக்குப் புறப்பட்டான். தேவனோ தமது அளவில்லாத கிருபையை அவன்மீது காட்டினார். அவரது கனிவான இரக்கம் அவன்மீது பாய்ந்தோடியது. தேவனுடைய கிருபையினாலே இரட்சிப்பைப் பெற்றிருக்கிற நாம் பாவம் செய்யும்போது, தேவன் அதிலிருந்து வெளியே கொண்டுவரும்படி இவ்விதமான காரியங்களைச்…

December

துக்கமான முடிவு

2023 டிசம்பர் 26 (வேத பகுதி: 1 சாமுவேல் 28:7 முதல் 25 வரை) “அப்பொழுது சவுல் தன் ஊழியக்காரரை நோக்கி: அஞ்சனம்பார்க்கிற ஒரு ஸ்திரீயைத் தேடுங்கள்” (வசனம் 7). சவுல் கர்த்தரிடத்தில் விசாரித்தபோது, அவர் அவனுக்குப் பதிலளிக்கவில்லை, அவர் மௌனமாக இருந்தார். அவர் பேசும்போது நாம் செவிகொடாவிட்டால், நாம் பேசும்போது அவர் செவிகொடுக்க மாட்டார் என்பது விசுவாசிகளின் வாழ்க்கையிலும் உண்மையாக இருக்கிறது. ஆனால் துரதிஷ்டமாக சவுல் அஞ்சனம் பார்க்கிற பெண்ணைத் தேடினான். இக்கட்டான சூழ்நிலையில் நாம்…

December

வெற்றிடம்

2023 டிசம்பர் 25 (வேத பகுதி: 1 சாமுவேல் 28,3 முதல் 6 வரை) “சவுல் கர்த்தரிடத்தில் விசாரிக்கும்போது, கர்த்தர் அவனுக்குச் சொப்பனங்களினாலாவது, ஊரீமினாலாவது, தீர்க்கதரிசிகளினாலாவது மறு உத்தரவு அருளவில்லை” (வசனம் 6). தாவீது கர்த்தரிடத்தில் எதையும் விசாரிக்காமல் பெலிஸ்தியர்களின் நாட்டிற்குச் சென்றான். ஆனால் சவுல் கர்த்தரிடத்தில் விசாரித்தும் அவர் அவனிடத்தில் எதுவும் பேசவில்லை. தாவீது பின்மாற்றத்தில் இருந்தான், சவுலோ கர்த்தரை நிராகரித்தவனாக இருந்தான். பின்மாற்றம் சரிசெய்யப்படக்கூடிய ஒன்று, ஆனால் வேண்டுமென்றே நிராகரிப்பது புதுப்பிக்கப்படக்கூடாத ஒரு நிலையாகும்.…

December

பொய்யால் வந்த வேதனை

2023 டிசம்பர் 24 (வேத பகுதி: 1 சாமுவேல் 28,1 முதல் 2 வரை) “அந்நாட்களிலே பெலிஸ்தர் இஸ்ரவேலின்மேல் யுத்தம்பண்ண, தங்கள் சேனைகளைப் போருக்குக் கூட்டினார்கள்; அப்பொழுது ஆகீஸ் தாவீதை நோக்கி: நீயும் உன் மனுஷரும் எவ்விதத்திலும் என்னோடேகூட யுத்தத்துக்கு வரவேண்டும் என்று அறியக்கடவாய் என்றான்” (வசனம் 1). தாவீது மிகப் பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டான். செய்யாததைச் செய்தேன் என்று ஆகாஷிடம் கூறிய பொய் இப்பொழுது தனது கோர முகத்தைக் காட்டத் தொடங்கியது. பாவம் தன் எதிர்வினையை…

December

பொய்யால் பெற்ற பிரியம்

2023 டிசம்பர் 23 (வேத பகுதி: 1 சாமுவேல் 27,8 முதல்  12 வரை) “ஆகீஸ் தாவீதை நம்பி: அவன் இஸ்ரவேலராகிய தன்னுடைய ஜனங்கள் தன்னை வெறுக்கும்படி செய்கிறான்; என்றைக்கும் அவன் என் ஊழியக்காரனாயிருப்பான் என்பான்” (வசனம் 12). தாவீது பெலிஸ்தியர்களின் தேசத்தில் பதினாறு மாதங்கள் குடியிருந்தான் (வசனம் 7). சவுலிடமிருந்து தப்பிக்க அடைக்கலம் தேடி ஓடியவனுக்கு தேவபக்தியற்ற அந்நிய தேசம் பழக்கமாகிப் போனது வருத்தமான காரியம். கர்த்தருடைய சித்தத்துக்கு விரோதமாக ஒரு காரியத்தை அவசரத்துக்காகவும், விளையாட்டாகவும்…

December

ஆபத்தான புகலிடம்

2023 டிசம்பர் 22 (வேதபகுதி: 1 சாமுவேல் 27,4 முதல் 7 வரை) “தாவீது காத் பட்டணத்திற்கு ஓடிப்போனான் என்று சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவன் அப்புறம் அவனைத் தேடவில்லை” (வசனம் 4). தாவீது பெலிஸ்தியர்களின் நகரமாகிய காத்துக்கு ஓடிப்போனான் என்று சவுலுக்குச் செய்தி சொல்லப்பட்டது. சவுலைப் பொறுத்தவரை தனக்குப் பிரச்சினை ஓய்ந்தது என்று தாவீதைத் துரத்துவதை விட்டுவிட்டான். ஆனால் தாவீதைப் பொறுத்தவரை தனக்கு அடைக்கலம் தேடிச் சென்று ஒரு புதிய பிரச்சினையைத் தேடிக்கொண்டான். அவன் தேவனை அறியாத…