December

உதவி செய்தலும் கேட்டலும்

2023 டிசம்பர் 11 (வேத பகுதி: 1 சாமுவேல் 25,4 முதல் 9 வரை)  “உம்முடைய மேய்ப்பர் எங்களோடேகூட இருந்தார்கள்; அவர்கள் கர்மேலில் இருந்த நாளெல்லாம் நாங்கள் அவர்களை வருத்தப்படுத்தவில்லை; அவர்களுடைய பொருள் ஒன்றும் காணாமற்போனதும் இல்லை” (வசனம் 7). தாவீது காடுகளில் அலைந்து திரிந்தபோது, நாபாலின் ஆட்டு மந்தைக்கு உதவி செய்திருந்தான்.  தாவீதின் உதவி செய்யும் மனப்பான்மை நமக்கு அவசியமாயிருக்கிறது. இன்றைக்கும் நம்மைச் சுற்றிலும் உதவி தேவைப்படுகிறவர்கள் இருக்கிறார்கள். “ஆதலால், ஒருவன் நன்மைசெய்ய அறிந்தவனாயிருந்தும், அதைச்…

December

பொருத்தமற்ற தம்பதி

2023 டிசம்பர் 10 (வேத பகுதி: 1 சாமுவேல் 25,2 முதல் 3 வரை) “அந்த மனுஷனுக்கு நாபால் என்றும், அவன் மனைவிக்கு அபிகாயில் என்றும் பெயர்; அந்த ஸ்திரீ மகா புத்திசாலியும் ரூபவதியுமாயிருந்தாள்; அந்தப் புருஷனோ முரடனும் துராகிருதனுமாயிருந்தான்” (வசனம் 3). நாபால் என்னும் ஒரு மனிதன் நமக்கு அறிமுகமாகிறான். நாபால் என்பதற்கு மதியீனன் என்று பொருள். இவன் தன் பெயருக்கு ஏற்றாற்போலவே மதியீனமாகவே நடந்துகொண்டான். இவன் ஒரு செல்வந்தன்; இவனுக்கு மூவாயிரம் செம்மறியாடுகளும், ஆயிரம்…

December

மன்றாட்டு மனிதன்

2023 டிசம்பர் 9 (வேத பகுதி: 1 சாமுவேல் 25,1) “சாமுவேல் மரணமடைந்தான்” (வசனம் 1). சாமுவேல் பழைய ஏற்பாட்டு காலத்தில் வாழ்ந்த ஓர் அற்புதமான நபர். ஒரு நியாயாதிபதியாகவும் ஒரு தீர்க்கதரிசியாகவும் அறியப்பட்டதற்கு அப்பால் மக்களுக்காக ஆண்டவரிடத்தில் மன்றாடிய ஒரு பரிந்துரை ஜெபவீரன் என்று அவனைக் குறித்து கூறுவோமானால் அது மிகையான பாராட்டு அல்ல. ஜெபத்தின் மூலமாக மக்களின் மனதில் ஓர் அழுத்தமான முத்திரையைப் பதித்தவர் இந்த சாமுவேல். இப்பொழுது தன்னுடைய ஜெபத்தை நிறுத்திவிட்டு, ஜெபத்துக்கு…

December

தாவீது மேன்மையடைதல்

2023 டிசம்பர் 8 (வேத பகுதி: 1 சாமுவேல் 24,16 முதல் 22 வரை) “தாவீது இந்த வார்த்தைகளைச் சவுலோடே சொல்லி முடிந்தபின்பு, சவுல்: என் குமாரனாகிய தாவீதே, இது உன்னுடைய சத்தமல்லவா என்று சொல்லி, சத்தமிட்டு அழுது …” (வசனம் 16). தாவீது, சவுலின் அரச பதவிக்குக் கொடுத்த மரியாதையும், அவன்மீது கொண்டிருந்த அன்பும் அவனுடைய இதயத்தை மென்மையாக்கி, அவனில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தின. அதிகாரப் பெருமையோடும், ஆள் பலத்தோடும் வந்திருந்த சவுலின் கண்களில் கண்ணீர்…

December

கர்த்தரிடம் விட்டு விடுவோம்

டிசம்பர் 7 (வேத பகுதி: 1 சாமுவேல் 24,9 முதல் 11 வரை) சவுலை நோக்கி தாவீது உமக்கு பொல்லாப்பைச் செய்ய பார்க்கிறான் என்று சொல்லுகிற மனுஷனுடைய வார்த்தைகளை ஏன் கேட்கிறீர் (வசனம் 9) கெபியில் இருந்து வெளியேறிய சவுலிடம் தாவீது தன் பேச்சை தொடங்கிய முறை மிகவும் அற்புதமானது. தனிப்பட்ட முறையில் நீர் என் மேல் விரோதம் காட்டவில்லை. ஆனால் உம்மை சுற்றி இருக்கும் மக்கள் என்னை தவறாக சித்தரிக்கிறார்கள் என்றான்.  மேலும் நான் உன்னிடம்…

December

அதிகாரத்தை கனம்பண்ணுதல்

டிசம்பர் 6 (வேத பகுதி: 1 சாமுவேல் 24,6 முதல் 8 வரை) கர்த்தர் அபிஷேகம் பண்ணின என் ஆண்டவன் மேல் என் கையை போடும்படியாக இப்படிப்பட்ட காரியத்தை நான் செய்யாதபடிக்கு கர்த்தர் என்னை காப்பாராக (வசனம் 6). தாவீது, சவுலின் ஆடையின் ஓரத்தை அறுத்துக் கொண்டதினிமித்தம் அவனுடைய மனது அடித்துக் கொண்டது மட்டுமின்றி, மேலும் பாவம் செய்யாதபடிக்கு கர்த்தரிடம் விண்ணப்பம் பண்ணினான். நம்முடைய மனசாட்சி ஒன்றைக் குற்றம் என்று கூறுவோமானால் உடனே நம்முடைய மனச்சாட்சியிலும் பெரியவராய்…

December

விசுவாச வாழ்க்கை

டிசம்பர் 5 (வேத பகுதி: 1 சாமுவேல் 24,3 முதல் 5 வரை தாவீதும், அவன் மனுஷரும் அந்த கெபியின் பக்கங்களில் உட்கார்ந்து இருந்தார்கள் (வசனம் 3) பரிசுத்த வேதாகமம் ஒரு கற்பனைப் புத்தகமோ அல்லது தமது பரிசுத்தர்கள் வாழ்வில் நடந்த நல்லவைகளை மட்டும் தேவனால் எழுதிக் கொடுக்கப்பட்ட வாழ்க்கை வரலாறோ அல்ல. இது தேவனால் எழுதி கொடுக்கப்பட்ட நம்முடைய வாழ்வின் அன்றாட நிகழ்வுகளை பிரதிபலிக்கிற எதார்த்தமான நூல். ஆகவே தான் சராசரி விசுவாசிகளும் இதை வாசிக்கும்…

December

மாற்றங்கள் நிறைந்த வாழ்க்கை

டிசம்பர் 4 (வேத பகுதி: 1 சாமுவேல் 24,1 முதல்  2 வரை) தாவீது என்கேதியின் வனாந்தரத்தில் இருக்கிறான் என்று சவுலுக்கு அறிவிக்கப்பட்டது. (வசனம் 1) சவுலுக்கு தாவீதின் மீதிருந்த கோபம் தணியவில்லை அவன் தொடர்ந்து தாவீதை தன்னுடைய பதவிக்கு அச்சுறுத்தலாகவே பார்த்தான். கர்த்தர் நமக்கு ஒன்றை தருவார் எனில் அதை மனிதர்களால் தடுக்க முடியாது. அதே வேளையில் கர்த்தர் தராத ஒன்றை தேடி தொடருவோமானால் அது ஒருபோதும் நமக்கு கிடைக்காது. இந்த உண்மையை சவுல் மறந்து…

December

இக்கட்டில் அரண்

டிசம்பர் 3 (வேத பகுதி: 1 சாமுவேல் 23,24 முதல் 29 வரை) சவுல் தாவீதைப் பின்தொடருகிறதை விட்டுத் திரும்பி, பெலிஸ்தரை எதிர்க்கும்படி போனான்; ஆதலால் அவ்விடத்திற்குச் சேலா அம்மாலிகோத் என்று பேரிட்டார்கள். (வசனம் 28) சீப் ஊரார் தங்களது திட்டத்தை மாற்றலாம். ஆனால் தேவன் தம்முடைய பிள்ளைகளை குறித்த தமது அநாதி திட்டத்தைப் ஒருபோதும் மாற்றுவது இல்லை. அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர். கர்த்தர் தம்முடைய இருதயத்திற்கு ஏற்றவனாகிய தாவீதை ராஜாவாக்குவதில் எவ்வித மாற்றுத்திட்டமும்…

December

விபரீதங்களைச் சகித்தல்

2023 டிசம்பர் 2 (வேத பகுதி: 1 சாமுவேல் 23,19 முதல் 23 வரை) “இப்போதும் ராஜாவே, நீர் உம்முடைய மனவிருப்பத்தின்படி இறங்கி வாரும்; அவனை ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்க, எங்களால் ஆகும் என்றார்கள்” (வசனம் 20). பென்யமீன் கோத்திரத்தானாகிய சவுல், தாவீதின்மீது கசப்புணர்வு கொண்டவனாக அவனைக் கொல்ல முயற்சிக்கிறான். ஆனால் தாவீது என்ன கோத்திரமோ அதே யூதா கோத்திரத்தைச் சார்ந்த யூத மக்களும் அவனை ஏன் பகைக்க வேண்டும்? ஒரு தீர்க்கதரிசிக்கு சொந்த ஊரில் கனம்…