கர்த்தரைக் கனம்பண்ணுவோம்
2023 அக்டோபர் 31 (வேத பகுதி: 1 சாமுவேல் 17,41 முதல் 47 வரை) “கர்த்தர் பட்டயத்தினாலும் ஈட்டியினாலும் ரட்சிக்கிறவர் அல்ல என்று இந்த ஜனக்கூட்டமெல்லாம் அறிந்துகொள்ளும்; யுத்தம் கர்த்தருடையது” (வசனம் 47). கோலியாத் தாவீதை அசட்டைபண்ணினான் (வசனம் 42), தன் தேவர்களைக் கொண்டு அவனைச் சபித்தான் (வசனம் 43). முதலில் தாவீதை அவனுடைய அண்ணன் இகழ்ந்தான், இப்பொழுது கோலியாத் இகழ்கிறான். “ஆகிலும் மாம்சத்தின்படி பிறந்தவன் ஆவியின்படி பிறந்தவனை அப்பொழுது துன்பப்படுத்தினதுபோல, இப்பொழுதும் நடந்துவருகிறது” (கலாத்தியர் 4,29)…