விமர்சனங்களுக்கு செவிகொடுத்தல்
2023 யூலை 31 (வேத பகுதி: 1 சாமுவேல் 3,15 முதல் 18 வரை) “சாமுவேல் விடியற்காலமட்டும் படுத்திருந்து, கர்த்தருடைய ஆலயத்தின் கதவுகளைத் திறந்தான்; சாமுவேல் ஏலிக்கு அந்தத் தரிசனத்தை அறிவிக்கப் பயந்தான்” (வசனம் 15). ஏலியின் குடும்பத்தாரின்மேல் கர்த்தரால் எழுதப்பட்ட தீர்ப்பு சாமுவேலுக்குத் துக்கமாகவும் வேதனையாகவும் இருந்தது. இதுவரைக்கும் தன்னை கர்த்தருக்குள் வளர்த்து, ஊழியத்தில் பயிற்சி அளித்து வந்த ஏலியின் மேல் வந்த அவருடைய கோபத்தை நிச்சயமாகவே சாமுவேலால் எளிதாக எடுத்துக்கொண்டிருக்க முடியாது. அவன் விடியும்…