சிறுவர்களின் பயன்பாடு
2023 யூலை 21 (வேத பகுதி: 1 சாமுவேல் 2,18) “சாமுவேல் என்னும் பிள்ளையாண்டான் சணல்நூல் ஏபோத்தைத் தரித்தவனாய்க் கர்த்தருக்கு முன்பாகப் பணிவிடை செய்தான்” (வசனம் 18). ஏலியின் மகன்கள் எவ்வளவு மோசமானவர்களாக இருந்தார்களோ அதற்கு மாறான வகையில், சாமுவேல் வேறுபட்டவனாக வாழ்ந்தான். ஏலியின் மகன்களுடைய தவறான நடத்தையின் காரணமாகக் கர்த்தர் சாமுவேலை உருவாக்கிக்கொண்டிருக்கிறார் எனலாம். ஏலியின் வாரிசுகள் கர்த்தரால் வழிநடத்தப்படுவதற்கு இடங்கொடுக்கவில்லை. ஆனால் சிறுவன் சாமுவேல் அதற்கு இடங்கொடுத்தான். அவர் அவனை வழிநடத்தினார். நாம் தகுதியானவர்களாக…