July

மெதுவான பிரதியுத்தரம்

2023 யூலை 11 (வேத பகுதி: 1 சாமுவேல் 1,15 முதல் 18 வரை) “அதற்கு அன்னாள் பிரதியுத்தரமாக: அப்படியல்ல, என் ஆண்டவனே” (வசனம் 15). நாம் தவறாகப் புரிந்துகொள்ளப்படும்போதோ அல்லது தவறாகக் குற்றம் சாட்டப்படும் போதோ எவ்வாறு நடந்துகொள்வோம். இந்தக் காரியத்திலும் அன்னாள் நமக்கு நல்லதொரு முன்மாதிரியாக இருக்கிறார். ஏலி அன்னாளை நோக்கி, “நீ எதுவரைக்கும் வெறித்திருப்பாய்? உன் குடியை உன்னைவிட்டு விலக்கு” என்று சொன்னபோது, அவள் பதிலளிக்காமலும் இருக்கவில்லை, அதே வேளையில் அமைதியாகவும் சாந்தத்துடனும்…

July

ஜெபத்தில் இருதயத்தை ஊற்றுதல்

2023 யூலை 10 (வேத பகுதி: 1 சாமுவேல் 1,12 முதல் 14 வரை) “அவள் கர்த்தருடைய சந்நிதியில் வெகுநேரம் விண்ணப்பம்பண்ணுகிறபோது, ஏலி அவள் வாயைக் கவனித்துக்கொண்டிருந்தான்” (வசனம் 12). நம்முடைய தனிப்பட்ட காரியங்களுக்காகவும் நம்முடைய சுயதிருப்திக்காகவும் ஜெபத்தில் மன்றாடுவோமாயின், அந்த ஜெபம் கேட்கப்படுவதற்கு வாய்ப்பில்லை. இதைக் குறித்து, “நீங்கள் விண்ணப்பம்பண்ணியும், உங்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி செலவழிக்கவேண்டுமென்று தகாதவிதமாய் விண்ணப்பம்பண்ணுகிறபடியினால், பெற்றுக்கொள்ளாமலிருக்கிறீர்கள்” (யாக்கோபு 4,3) என்று யாக்கோபு கூறுகிறார். மாறாக, நம்முடைய ஜெபத்தின் நோக்கம் கர்த்தரை மகிமைப்படுத்தும்…

July

அன்னாளின் ஜெபம்

2023 யூலை 9 (வேத பகுதி: 1 சாமுவேல் 1,11) “சேனைகளின் கர்த்தாவே, தேவரீர் உம்முடைய அடியாளின் சிறுமையைக் கண்ணோக்கிப் பார்த்து, உம்முடைய அடியாளை மறவாமல் நினைந்தருளி, உமது அடியாளுக்கு ஒரு ஆண் பிள்ளையைக் கொடுத்தால், அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் நான் அவனைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பேன்; அவன் தலையின்மேல் சவரகன் கத்தி படுவதில்லை என்று ஒரு பொருத்தனைபண்ணினாள்” (வசனம் 11). “சேனைகளின் கர்த்தாவே” என்ற அடைமொழியோடு ஆண்டவரைக் கூப்பிட்டு அன்னாள் தன் ஜெபத்தைத் தொடங்கினாள் (வசனம்…

July

ஜெபத்தின் முக்கியத்துவம்

2023 யூலை 8 (வேத பகுதி: 1 சாமுவேல் 1,9 முதல் 10 வரை) “அவள் போய், மனங்கசந்து, மிகவும் அழுது, கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி” (வசனம் 10). “அன்னாள்” என்பதற்கு “கிருபை” என்பது பொருள். ஆனால் தனக்கு ஏற்பட்டிருக்கிற மனவருத்தத்தைப் போக்கிக்கொள்வதற்கு அவளுக்கு இப்பொழுது கிருபை தேவைப்பட்டது. அதைக் கர்த்தருடைய சமூகத்தில் அல்லாமல் வேறே எங்கே பெற்றுக்கொள்ள முடியும்? “சீலோவிலே அவர்கள் புசித்துக் குடித்தபின்பு, அன்னாள் எழுந்திருந்தாள்” (வசனம் 9). எல்க்கானாவின் அன்பு அவளுக்கு இருந்தது…

July

ஆறுதலின் வார்த்தைகள்

2023 யூலை 7 (வேத பகுதி: 1 சாமுவேல் 1,8) “அவள் புருஷனாகிய எல்க்கானா அவளைப் பார்த்து, அன்னாளே, ஏன் அழுகிறாய்? ஏன் சாப்பிடாதிருக்கிறாய்? பத்துக் குமாரரைப் பார்க்கிலும் நான் உனக்கு அதிகமல்லவா என்றான்” (வசனம் 8). பெண்கள் பெலவீனமான பாண்டங்கள் (பெலவீனமான சுபாவம் உடையவர்கள்) என்று வேதம் சொல்கிறது. அவர்கள் பெரும்பாலும் தங்களுடைய உள்ளக்கிடக்கையை அழுகையின் வாயிலாக வெளிப்படுத்துவார்கள். எப்பொழுதெல்லாம் பெனின்னாள் அவளைத் விசனப்படுத்துகிறாளோ அப்பொழுதெல்லாம் அன்னாள் அழுவாள் (வசனம் 7). குறிப்பாக சீலோவுக்கு பலியிட…

July

பாடுகளினூடாக கர்த்தரில் நிலைத்திருத்தல்

2023 யூலை 6 (வேத பகுதி: 1 சாமுவேல் 1,7) “அவள் கர்த்தருடைய ஆலயத்திற்குப் போகும் சமயத்தில், அவன் வருஷந்தோறும் அந்தப்பிரகாரமாய்ச் செய்வான்; இவள் அவளை மனமடிவாக்குவாள்; அப்பொழுது அவள் சாப்பிடாமல் அழுதுகொண்டிருப்பாள்” (வசனம் 7). எல்க்கானாவின் குடும்பத்தில் மூன்று காரியங்கள் ஆண்டுதோறும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தன. அவன் ஆண்டுதோறும் கர்த்தருடைய ஆலயத்துக்குப் போவான், கர்த்தருக்குப் பலி செலுத்துவான், அதை அனைவருக்கும் பிரித்துக்கொடுக்கும்போது அன்னாளுக்கு இரண்டு மடங்கு அதிகமாகக் கொடுப்பான். அடுத்ததாக பெனின்னாள் ஆண்டுதோறும் கர்த்தருடைய ஆலயத்துக்குச்…

July

சமநிலையில்லாப் பாசம்

2023 யூலை 5 (வேத பகுதி: 1 சாமுவேல் 1,2 முதல் 6 வரை) “அவனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தார்கள்; ஒருத்திபேர் அன்னாள், மற்றவள்பேர் பெனின்னாள்” (வசனம் 2). எல்க்கானாவுக்கு இரண்டு மனைவிகள். ஒருத்தி பெயர் அன்னாள், மற்றவளுடைய பெயர் பெனின்னாள். ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களைத் திருமணம் செய்வது அன்றைய காலகட்டத்தில் விசுவாசிகளின் நடுவில்கூட வழங்கிவந்த ஒரு பழக்கமாயிருந்தாலும் அது தேவனுடைய திட்டம் அல்லது விருப்பம் அல்ல என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். ஆபிரகாம், யாக்கோபு, மோசே,…

July

ஓர் அற்பமான ஆரம்பம்

2023 யூலை 4 (வேத பகுதி: 1 சாமுவேல் 1,1) “எப்பிராயீம் மலைத்தேசத்திலிருக்கிற சோப்பீம் என்னப்பட்ட ராமதாயீம் ஊரானாகிய ஒரு மனுஷன் இருந்தான்; அவனுக்கு எல்க்கானா என்று பேர்” (வசனம் 1). இப்பொழுது நாம் சாமுவேலின் முதலாம் புத்தகத்துக்கு வந்திருக்கிறோம். ஆயினும் நியாயதிபதிகளின் காலம் இன்னமும் முடிவு பெறவில்லை. இராஜாக்களின் காலம் தொடங்குவதற்கு முன் நடைபெற்ற நிகழ்வுகளோடு இந்தப் புத்தகம் தொடங்குகிறது. இந்த நூல் எல்க்கானா என்னும் மனிதனைப் பற்றிய விவரங்களோடு ஒரு புதிய யுகத்துக்குள் பிரவேசிக்கிறது.…

July

தேவனுடைய நித்தியத் திட்டம்

 2023 யூலை 3 (வேத பகுதி: ரூத் 4,17 முதல் 22 வரை) “அயல்வீட்டுக்காரிகள் நகோமிக்கு ஒரு ஆண்பிள்ளை பிறந்தது என்று வாழ்த்தி, அதற்கு ஓபேத் என்று பேரிட்டார்கள்; அவன் தாவீதின் தகப்பனாகிய ஈசாயின் தகப்பன்” (வசனம் 17). ரூத்துக்கும் போவாசுக்கும் பிறந்த மகனுக்கு நகோமியின் அயல்வீட்டுப் பெண்களெல்லாம் ஒன்றுகூடி ஓபேத் என்று பெயரிட்டார்கள் (வசனம் 17). இவனுடைய மகன் பெயர் ஈசாய். ஈசாயின் மகன் பெயர் தாவீது. ஆபிராகாமின் குமாரனும் தாவீதின் குமாரனும் (மத்தேயு 1,1)…

July

மகிழ்ச்சி நிறைந்த முடிவு

2023 யூலை 2 (வேத பகுதி: ரூத் 4,13 முதல் 16 வரை) “போவாஸ் ரூத்தை விவாகம்பண்ணினான்; அவள் அவனுக்கு மனைவியானாள்; … அவள் கர்ப்பந்தரித்து, ஒரு ஆண்பிள்ளையைப் பெறக் கர்த்தர் அநுக்கிரகம்பண்ணினார்” (வசனம் 13). பெத்லெகேமின் மூப்பர்களின் வாழ்த்துதல் உண்மையாயிற்று. லேயாளைப் போலவும், ராகேலைப் போலவும், இஸ்ரவேலின் சந்ததி தழைக்கும்படி ரூத்தும் ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். “இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன்” (சங்கீதம் 127,4) என்ற…