November

தீமையைப் பொறுத்தல்

2023 நவம்பர் 30 (வேத பகுதி: 1 சாமுவேல் 23,9 முதல் 13 வரை) “கேகிலா பட்டணத்தார் என்னையும் என் மனுஷரையும் சவுலின் கையில் ஒப்புக்கொடுப்பார்களோ என்று தாவீது கேட்டதற்கு, கர்த்தர்: ஒப்புக்கொடுப்பார்கள் என்றார்” (வசனம் 12). கேகிலாவின் குடிமக்கள் தாவீதுக்கு நன்றியுள்ளவர்களாக நடந்துகொள்ளவில்லை. அவர்கள் தாவீதைக் காப்பற்றுவதற்குப் பதில், அவனைச் சவுலிடம்  பிடித்துக்கொடுக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்தார்கள். மனிதர்கள் தனக்கு உதவி செய்கிறவர்களை மறப்பது மட்டுமின்றி, அவர்களுக்கு எதிராகவும் திரும்புவார்கள் என்பதற்கு இந்த நிகழ்வு நமக்கு…

November

கர்த்தரின் சித்தமும் வெற்றியும்

2023 நவம்பர் 29 (வேத பகுதி: 1 சாமுவேல் 23,5 முதல் 8 வரை) “தாவீதையும் அவன் மனுஷரையும் முற்றிக்கை போடும்படிக்கு, கேகிலாவுக்குப் போக, எல்லா ஜனத்தையும் யுத்தத்திற்கு அழைப்பித்தான்” (வசனம் 8). தாவீதும் அவனுடைய ஆட்களும் கேகிலாவுக்குச் சென்று சண்டையிட்டார்கள். கர்த்தர் சொன்னபடியே தாவீது செய்தான். கர்த்தர் வெற்றியைக் கட்டளையிட்டார், கேகிலாவின் மக்கள் காப்பாற்றப்பட்டார்கள். நாம் கர்த்தருடைய சித்தத்துக்காக ஜெபிப்பதோ அல்லது அதை அறிந்துகொள்வதோ மட்டும் போதாது. அதை நிறைவேற்றுவதற்குக் கடினமாக இருந்தாலும், அவர் வெளிப்படுத்திய…

November

காத்திருந்து முன்னேறுதல்

2023 நவம்பர் 28 (வேத பகுதி: 1 சாமுவேல் 23,4) “அப்பொழுது தாவீது திரும்பவும் கர்த்தரிடத்தில் விசாரித்தபோது… (வசனம் 4). ஒரு காரியத்தைக் குறித்து இரண்டு விதமான கருத்துகள் வரும்போது நாம் எதை எடுத்துக்கொள்வது. இரண்டில் எது சரியானதாக இருக்க முடியும்? பல நேரங்களில் நாமும்கூட இத்தகைய பிரச்சினைகளை எதிர்கொள்வோம். இதற்கான பதிலைப் பெறுவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என தாவீதிடம் கேட்போமானால், “நீங்கள் மீண்டும் ஒருமுறை கர்த்தரிடம் விசாரியுங்கள்” என்பதே அவனுடைய பதிலாக இருந்திருக்கும்.…

November

விசுவாசத்தில் முன்னேறுதல்

2023 நவம்பர் 27 (வேத பகுதி: 1 சாமுவேல் 23,1 முதல் 3 வரை) “அந்தப் பெலிஸ்தரை முறிய அடிக்கலாமா என்று கர்த்தரிடத்தில் விசாரித்ததற்கு, கர்த்தர்: நீ போ; பெலிஸ்தரை முறிய அடித்து, கேகிலாவை ரட்சிப்பாயாக என்று தாவீதுக்குச் சொன்னார்” (வசனம் 3). பெலிஸ்தியர் கேகிலாவுக்கு எதிராகப் போரிட்டு, களஞ்சியங்களைக் கொள்ளையிடுகிறார்கள் என்று அதன் மக்கள் தாவீதுக்கு சொல்லி அனுப்பினார்கள். நாட்டின் அரசன் சவுல். ஆனால் மக்களோ உதவிக்காக தாவீதுக்குச் சொல்லி அனுப்பினர். கேகிலாவைப் பாதுகாப்பது அரசனின்…

November

பகைமை வேண்டாம்

2023 நவம்பர் 26 (வேதபகுதி: 1 சாமுவேல் 22,16 முதல் 23 வரை) “பின்பு ராஜா தன்னண்டையிலே நிற்கிற சேவகரை நோக்கி: நீங்கள் போய், கர்த்தருடைய ஆசாரியர்களைக் கொல்லுங்கள்” (வசனம் 17). சவுல் எவ்வளவு ஒரு வித்தியாசமான மனிதர். அமலேக்கியர்களை முற்றிலுமாக அழித்துப் போடு என்று கர்த்தர் சொன்னபோது, அவர்களின் ராஜாவையும், ஆடுமாடுகளையும் உயிரோடு வைத்தான். ஆனால் இப்பொழுதோ குற்றமற்ற கர்த்தருடைய ஆசாரியர்களை முற்றிலுமாக அழித்துப்போடுவதற்கு மிகவும் தீவிரங்காட்டுகிறான். ஒருவன் கர்த்தரை விட்டுத் தூரம்போனால் எந்த எல்லைக்கும்…

November

பொய்யைக் களைவோம்

2023 நவம்பர் 25 (வேத பகுதி: 1 சாமுவேல் 22,8 முதல் 15 வரை) அப்பொழுது சவுல்: அகிதூபின் குமாரனே கேள் என்று சொல்ல, அவன்: இதோ, இருக்கிறேன் என் ஆண்டவனே என்றான் (வசனம் 12). என் மகன் ஈசாயின் மகனுடன் ஒப்பந்தம் செய்து கொண்டான் என்ற தகவலை எனக்குச் சொல்வதற்கு இங்கே யாரும் இல்லை என்று சவுல் தன் வேலைக்காரர்களைப் பார்த்துக் கேட்டான். சவுலின் மொழியில் ஆத்திரமும் பொறாமையும் காணப்பட்டது. தன் சொந்த மகன் யோனத்தானையே…

November

யாரைப் பின்பற்றுகிறோம்

2023 நவம்பர் 24 (வேத பகுதி: 1 சாமுவேல் 22,3 முதல் 8 வரை) “என் தகப்பனும் என் தாயும் உங்களிடத்திலே தங்கியிருக்கும்படி தயவுசெய்யும் என்று சொல்லி, அவர்களை மோவாபின் ராஜாவினிடத்தில் அழைத்துக்கொண்டு போய்விட்டான்” (வசனம் 3,4). தாவீது நெருக்கத்தில் இருந்தாலும், தன்னைப் பெற்று வளர்த்து ஆளாக்கிய தன் அன்பான தாயையும் தந்தையையும் பராமரிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டான். தன்னோடுகூட அவர்களும் துன்பம் அனுபவிக்கக்கூடாது என்று நினைத்து அவர்களை மோவாப் தேசத்தின் ராஜாவினிடத்தில் அடைக்கலமாய் இருக்கும்படி ஒழுங்கு செய்தான்.…

November

ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவன்

2023 நவம்பர் 23 (வேத பகுதி: 1 சாமுவேல் 22,2) “அவன் (தாவீது) அவர்களுக்குத் தலைவனானான்” (வசனம் 2). தாவீதிடம் வந்த துன்பப்பட்ட, திவாலான, அதிருப்தியடைந்த மக்களுக்கு அவன் தலைவனானான். நல்ல திறமைசாலிகள், சிறந்து விளங்குபவர்கள் போன்றோருக்குத் தலைமை தாங்குவது பெருமைக்குரிய காரியமாக இருக்கலாம். ஆனால் இத்தகைய பரிதபிக்கப்பட்ட மனிதரைக் கொண்டு என்ன செய்வது? ஆயினும் தாவீது அவர்களுக்குத் தலைவனானான்; இந்தப் பிரகாரமாக ஏறக்குறைய நானூறுபேர் அவனோடிருந்தார்கள். கிறிஸ்து தம்முடைய சொந்த மக்களால் புறக்கணிக்கப்பட்டார். ஆயினும் தங்கள்…

November

தாழ்மையில் நேசிப்போம்

2023 நவம்பர் 22 (வேத பகுதி: 1 சாமுவேல் 22,2) “ஒடுக்கப்பட்டவர்கள், கடன்பட்டவர்கள், முறுமுறுக்கிறவர்கள் யாவரும் அவனோடே கூடிக்கொண்டார்கள்; அவன் அவர்களுக்குத் தலைவனானான்” (வசனம் 2). தாவீது அதுல்லாம் குகையில் இருந்தபோது அவனுடைய சகோதரரும் அவனுடைய தகப்பன் வீட்டாரும் அதைக் கேள்விப்பட்டு, அங்கே அவனிடத்தில் வந்தார்கள் (வசனம் 1). தாவீதுக்கு ஏற்பட்ட இத்தகைய துன்பமான நேரத்திலும், மற்றவர்களால் கைவிடப்பட்ட நேரத்திலும், அவனுடைய சொந்த வீட்டார் அவனைப் புரிந்துகொண்டார்கள் என்பது தாவீதுக்கு மிகப் பெரிய பக்க பலமே. சொந்தக்…

November

தனிமையின் பாதையில்

2023 நவம்பர் 21 (வேத பகுதி: 1 சாமுவேல் 22,1) “தாவீது அவ்விடத்தைவிட்டுத் தப்பி, அதுல்லாம் என்னும் கெபிக்குப் போனான்” (வசனம் 1). தாவீது ராஜாவாய் அபிஷேகம் செய்யப்பட்டாலும் இப்பொழுது உயிர்தப்பி ஓட வேண்டிய சூழல் ஏற்பட்டது. நாம் நினைப்பதுபோல கர்த்தர் நினைப்பவர் அல்லர். அவருடைய வழிகள் ஆராய்ந்து முடியாதவைகள். தாவீது முற்றிலுமாகத் தன்னைச் சார்ந்துகொள்ளும்வரை அவர் அவனை விடுவதில்லை. அவன் பின்மாற்றத்திலிருந்து திரும்பி வரவேண்டியது அவசியம். எண்ணற்ற மக்களுக்குத் தகப்பனாயிருக்கும்படி கர்த்தர் ஆபிரகாமை அழைத்தார். ஆயினும்…