கிருபையில் வளருதல்
2023 ஏப்ரல் 30 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 13,24 முதல் 25 வரை) “பின்பு அந்த ஸ்திரீ ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குச் சிம்சோன் என்று பேரிட்டாள்; அந்தப் பிள்ளை வளர்ந்தது, கர்த்தர் அவனை ஆசீர்வதித்தார்” (வசனம் 24). கர்த்தர் தம்முடைய வார்த்தையில் உண்மையாயிருந்தார். அந்தப் பெண்மணிக்கு அவர் வாக்களித்தபடியே அவள் ஒரு குமாரனைப் பெற்றெடுக்கும்படி செய்தார் (வசனம் 24). எப்பொழுது அவசியமோ அப்பொழுது தன்னுடைய இரட்சகனை இந்த உலகத்தில் பிறக்கச் செய்கிறார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப்…