April

விரும்பத்தகாத நிகழ்வு

2023 ஏப்ரல் 20 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 12,5 முதல் 6 வரை) “அக்காலத்திலே எப்பிராயீமில் நாற்பத்தீராயிரம் பேர் விழுந்தார்கள்” (வசனம் 6). கிதியோன் மீதியானியரை வெற்றி கொண்டபோதும் எப்பிராயீம் மனிதர் அவனிடம் வந்து, ஏன் எங்களை போருக்கு அழைக்கவில்லை என்று வாக்குவாதம் பண்ணினார்கள். ஆனால் கிதியோன் அவர்களிடம் சாந்தமாய்ப் பேசி அவர்களுடைய கோபத்தை ஆற்றினான் (8,1 முதல் 2). ஆனால் அவர்கள் இப்பொழுதும் திருந்தியதாகத் தெரியவில்லை. மீண்டுமாக யெப்தாவிடம் அதே காரியத்தைப் பேசினார்கள். ஆனால் யெப்தா…

April

ஒற்றுமைக்கு வந்த சோதனை

2023 ஏப்ரல் 19 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 12,1 முதல் 6 வரை) “எப்பிராயீம் மனிதர் ஏகமாய்க் கூடி … யெப்தாவை நோக்கி: நீ எங்களை உன்னோடேகூட வரும்படி அழைப்பியாமல் அம்மோன் புத்திரர் மேல் யுத்தம் பண்ணப் போனதென்ன?” (வசனம் 1). முதலாவது யெப்தா தன் சகோதரர்களால் பகைத்து வெறுக்கப்பட்டான். அதன் விளைவாக அவன் தன் உரிமையையும் பூர்வீகத்தையும் விட்டுவிட்டு வேறு இடத்துக்கு ஓடிப்போக நேரிட்டது. அப்பொழுது அவனுக்கு ஆதரவாகவும், துணையாகவும் யாரும் வரவில்லை. பிறகு, அம்மோன்…

April

ஒப்புவித்தலின் விலைக்கிரயம்

2023 ஏப்ரல் 18 (வேதபகுதி: நியாயாதிபதிகள் 11,34 முதல் 40 வரை) “என் தகப்பனே, நீர் கர்த்தரை நோக்கி உம்முடைய வாயைத் திறந்து பேசினீரல்லவோ? … உம்முடைய வாயிலிருந்து புறப்பட்டபடியே எனக்குச் செய்யும் என்றாள்” (வசனம் 36). யெப்தா பண்ணிய பொருத்தனையில் ஒரு சிக்கல். முதலாவது அவனுக்கு எதிராக வந்தது அவனுடைய அருமை மகள்; ஒரே மகள். என்ன செய்வது? அவன் மிகவும் கலக்கமடைந்தான் (வசனம் 35). அவனுடைய சந்தோஷம் துக்கமாக மாறியது. யெப்தா ஒரு சிறந்த…

April

ஜெயமோ கர்த்தரால் வரும்

2023 ஏப்ரல் 17 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 11,29 முதல் 33 வரை) “அப்பொழுது கர்த்தருடைய ஆவி யெப்தாவின்மேல் இறங்கினார்” (வசனம் 29). அம்மோன் புத்திரரின் ராஜா யெப்தா சொல்லியனுப்பின வார்த்தைகளுக்குச் செவிகொடாமற் போனான் (வசனம் 28). பேச்சுவார்த்தை மூலமாகப் பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும் என்னும் யெப்தாவின் முயற்சிக்கு தோல்வி ஏற்பட்டது. இது போருக்கு வழிவகுத்தது. புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்து, “ஒருவரும் கெட்டுப்போவது பரலோகத்தில் இருக்கிற பிதாவின் சித்தமல்ல” என்று கூறிவிட்டு ஒரு சம்பவத்தை விவரிக்கிறார்.…

April

வரலாறை அறிந்துகொள்ளுங்கள்

2023 ஏப்ரல் 16 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 11,13 முதல் 28 வரை) “தேவனாகிய கர்த்தர் எமோரியரைத் தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு முன்பாகத் துரத்தியிருக்க, நீர் அந்த தேசத்தைக் கட்டிக்கொள்ளத்தகுமா” (வசனம் 23). எங்கள் நாட்டை எங்களிடம் கொடுத்துவிடு என்று தூது சொல்லி அனுப்பிய அம்மோனியர்களுக்கு யெப்தாவும் வரலாற்று ரீதியான பதிலையையே கொடுத்தான். “நாங்கள் உங்களுடைய நாட்டையாவது, மோவாபியர்களின் நாட்டையாவது அபகரிக்கவில்லை. கர்த்தர் எங்களுக்குக் கொடுத்த தேசம், எமோரியர்களுடையது என்று சொல்லி அனுப்பினான். இஸ்ரவேல் மக்கள் கானான்…

April

அமைதியை நாடுங்கள்

2023 ஏப்ரல் 15 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 11,12) “நீ என் தேசத்தில் எனக்கு விரோதமாக யுத்தம் பண்ண வருகிறதற்கு, எனக்கும் உனக்கும் என்ன வழக்கு இருக்கிறது என்று கேட்கச் சொன்னான்” (வசனம் 12). யெப்தா அம்மோனியர்களோடு போரிடுவதற்கு முன்னர் சமாதானப் பேச்சுவார்த்தையின் வாயிலாகப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்னும் எண்ணத்தில் செயல்படுகிறான். இது மிகவும் ஞானமுள்ள செயல். போரைப் பார்க்கிலும் அமைதியை விரும்பினான். இன்றைக்கும் நாம் இந்த உலகத்தின் நடுவில் குடியிருக்கிறோம். இந்த…

April

பகைத்தாலும் அன்புகூருங்கள்

2023 ஏப்ரல் 14 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 11,4 முதல் 11 வரை) “யெப்தாவை நோக்கி நீ வந்து, நாங்கள் அம்மோன் புத்திரரோடு யுத்தம் பண்ண எங்கள் சேனாதிபதியாயிருக்க வேண்டும் என்றார்கள்” (வசனம் 6). அம்மோனியர் இஸ்ரவேல் மக்களின் மீது போர் செய்யப் புறப்பட்டு வந்தார்கள் (வசனம் 4). லோத் மற்றும் அவனின் இளைய மகளின் வாயிலாக தகாத முறையில் பிறந்த பென்னம்மி என்பவனின் வம்சத்தாரே அம்மோனியர் (ஆதியாகமம் 19,58). விசுவாசிகள் சந்திக்கிற மூன்று எதிரிகளில் ஒன்றான…

April

சூழ்நிலைகளைச் சாதகமாக்குதல்

2023 ஏப்ரல் 13 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 11,1 முதல் 3 வரை) “கீலேயாத்தியனான யெப்தா பலத்த பராக்கிரமசாலியாயிருந்தான்; அவன் பரஸ்திரீயின் குமாரன்; கீலேயாத் அவனைப் பெற்றான்” (வசனம் 1). யெப்தா பரஸ்திரீயின் குமாரன். அவனுடைய குடும்பப் பின்னணி அவனுக்கு புகழ் சேர்க்கக் கூடியதாக இல்லை. ஆயினும் இத்தகைய சூழ்நிலை எவ்விதத்திலும் தன்னைப் பாதிக்க அவன் அனுமதிக்கவில்லை. எந்தவொரு நபரும் தன்னுடைய பிறப்பைச் சுற்றி அமைந்த சூழ்நிலைகளைக் குறித்து குறைவுபட்டுக்கொள்ளக் கூடாது. அவை நம்முடைய பிறப்புக்கு முன்…

April

முந்தைய கிரியைகளுக்குத் திரும்புதல் 

2023 ஏப்ரல் 12 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 10,17 முதல் 18 வரை) “அம்மோன் புத்திரர் மேல் முந்தி யுத்தம்பண்ணப்போகிற மனுஷன் யார்?” (வசனம் 18). நாம் கர்த்தரிடம் மனந்திரும்புவதற்காகவும், அவரிடம் மீண்டும் வருவதற்காகவுமே அவர் நம்மைச் சிட்சிக்கிறார். ஆயினும் அது அன்பும் மனதுருக்கமும் நிறைந்த தந்தையிடமிருந்து வருகிற ஒழுங்கு நடவடிக்கையே. அது நம்மைக் காப்பாற்றுவதற்காகவே தவிர, கொல்வதற்கும் அழிப்பதற்கும் அல்ல என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். “கர்த்தர் எவனிடத்தில் அன்வுகூருகிறாரோ அவனை அவர் சிட்சிக்கிறார்”…

April

மனதுருக்கமுள்ள கர்த்தர்

2023 ஏப்ரல் 11 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 10:6 முதல் 16 வரை) “அப்பொழுது அவர் இஸ்ரவேலின் வருத்தத்தைப் பார்த்து மனதுருகினார்” (வசனம் 16). பல நேரங்களில் நாம் சமாதானமாகவும் செழிப்பாகவும் இருக்கும் போதே கர்த்தரை விட்டு விலகுவதற்கு நம்முடைய இருதயம் துணிகிறது. உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு கொடுத்த நல்ல தேசத்துக்காக அவரைத் ஸ்தோத்தரி, அவரை மறந்துவிடாதே, அந்நிய தேவர்களைப் பின்பற்றிச் சோரம் போகாதே, அவ்வாறு செய்தால் அழிந்துவிடுவாய் என்று ஏற்கனவே எச்சரித்திருந்தார் (காண்க: உபாகமம்…