April

இருளில் உண்டான வெளிச்சம்

2023 ஏப்ரல் 10 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 10,3 முதல் 5 வரை) “அவனுக்குப் பின்பு, கீலேயாத்தியனான யாவீர் எழும்பி, இஸ்ரவேலை இருபத்திரண்டு வருஷம் நியாயம் விசாரித்தான் “ (வசனம் 3). “தோலா” தன்னுடைய பணிவிடை ஓட்டத்தை நிறைவேற்றி முடித்தவுடன் “யாவீர்” தன் பணியைத் தொடங்கினான். ஒவ்வொரு நியாயாதிபதிகளின் காலம் முடிந்தவுடன் அடுத்த தலைவர்கள் இல்லாததால் சிறிது காலங்கழித்து மக்கள் வழி விலகிச் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால் இந்த முறை அதற்கு வாய்ப்பு இல்லாதபடி யாவீர்…

April

மீண்டும் நம்பிக்கை துளிர்த்தல் 

2023 ஏப்ரல் 9 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 10,1 முதல் 2 வரை) “அபிமெலேக்குக்குப்பின்பு, தோதோவின் மகனாகிய பூவாவின் குமாரன் தோலா என்னும் இசக்கார் கோத்திரத்தான் இஸ்ரவேலை இரட்சிக்க எழும்பினான்” (வசனம் 1). அபிமெலேக்கின் மரணத்துக்குப் பின் இஸ்ரவேல் மக்கள் நம்பிக்கை இழந்தவர்களாக, தங்கள் தங்கள் இடங்களுக்குப் போய்விட்டார்கள் (நியாயாதிபதிகள்  9,55). தங்களை இரட்சிப்பான் என்று யாரை இஸ்ரவேலர்கள் நம்பியிருந்தார்களோ அவன் அவர்களைக் கைவிட்டுவிட்டான். அவர்களுடைய கனவுகளும், நம்பிக்கைகளும் அபிமெலேக்குடன் புதைந்துவிட்டன. நாமும் பல நேரங்களில் மனிதர்களை…

April

அன்பினால் உந்தப்படும் சேவை 

2023 ஏப்ரல் 8 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 9,42 முதல் 57 வரை) “இப்படியே அபிமெலேக்கு தன்னுடைய எழுபது சகோதரரைக் கொலைசெய்ததினால், தன் தகப்பனுக்குச் செய்த பொல்லாப்பை தேவன் அவன்மேல் திரும்பும்படி செய்தார்” (வசனம் 56). அபிமெலேக்கின் வாழ்க்கையும் அவனைச் சுற்றி நடந்த நிகழ்வுகளும் நமக்குக் கற்றுத் தரும் பாடம் என்ன? அவன் தன்னைத் தான் நியாயாதிபதியாக உயர்த்திக்கொண்ட ஒரு மனிதன். இதில் பங்கேற்றவர்கள் ஒவ்வொருவரும் குற்றவாளிகள். இரத்தக் கறைபடிந்தவர்கள். அவர்கள்  ஒருபோதும் “கர்த்தர்” என்ற வார்த்தையைக்…

April

உள்ளுக்குள் சண்டைகள்

2023 ஏப்ரல் 7 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 9,22 முதல் 41 வரை) “அபிமெலேக்குக்கும் சீகேமின் பெரிய மனுஷருக்கும் நடுவே பொல்லாப்பு உண்டாக்கும் ஆவியைத் தேவன் வரப்பண்ணினார்” (வசனம் 23). எல்லாவிதப் பொல்லாப்பையும் செய்து, எல்லாவித விதிமுறை மீறலிலும் ஈடுபட்டு, அபிமெலேக்கு ஒரு குறுநில மன்னனாகினான். இதுவரை இருந்த நியாயாதிபதிகளை கர்த்தர் ஏற்படுத்தினார். அவர்கள் தேவபெலத்தினாலே அவருக்குப் பயந்து மக்களை நியாயம் விசாரித்தார்கள். ஆனால் இந்த அபிமெலேக்கு தன்னைத்தானே நியாயாதிபதியாக ஏற்படுத்திக்கொண்டான். இத்தகைய ஒருவனால் எத்தகைய சமாதானத்தை…

April

மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப தலைவர்கள்

2023 ஏப்ரல் 6 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 9,6 முதல் 22 வரை) “பின்பு சீகேமிலிருக்கிற சகல பெரிய மனுஷரும், மில்லோவின் குடும்பத்தாரனைவரும் கூடிக்கொண்டுபோய், சீகேமிலிருக்கிற உயர்ந்த கர்வாலிமரத்தண்டையிலே அபிமெலேக்கை ராஜாவாக்கினார்கள்” (வசனம் 6). கிதியோனின் 70 மகன்களில் யோதாம் ஒருவன் மட்டுமே உயிர் தப்பினான் (வசனம் 5). அபிமெலேக்கின் நியாயமற்ற கொலைவெறி தாக்குதலில் இருந்து தப்பிய இவன் கெரிசீம் மலையில் ஏறி மக்களின் மோசமான செய்கையை உவமைகளால் எடுத்துரைத்தான் (வசனம் 7). கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாகக்…

April

தலைமைத்துவத்துக்கு பேராசை

2023 ஏப்ரல் 5 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 9,1 முதல் 5 வரை) “எழுபது பேராகிய எல்லாரும் உங்களை ஆளுவது உங்களுக்கு நல்லதோ; ஒருவன் மாத்திரம் ஆளுவது நல்லதோ” (வசனம் 2). கிதியோனின் இறுதிக் கால வாழ்க்கை அவ்வளவு மெச்சிக் கொள்ளும்படியாக இல்லை என்று நேற்றைய தியானத்தில் பார்த்தோம். அவன் ஆவிக்குரியவனாகத் தொடங்கினான்; மாம்சத்தில் முடித்தான். அவன் ராஜாவாக இருக்கவில்லை, ஆனால் ராஜா வாழ்க்கை வாழ்ந்தான். கர்த்தர் தன்னை எழுப்பியது போல, உண்மையுள்ள மக்களை கர்த்தர் தேவையான…

April

முடிவு நன்றாக இருக்க வேண்டும்

2023 ஏப்ரல் 4 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 8,21 முதல் 35 வரை) “கிதியோன் ஒரு ஏபோத்தை உண்டாக்கி அதைத் தன் ஊரான ஒப்ராவிலே வைத்தான். இஸ்ரவேலர் எல்லாரும் அதைப் பின்பற்றி சோரம்போனார்கள்” (வசனம் 4). போர் முடிந்தது. கிதியோனின் புகழ் பரவியது. வெற்றிக்கு காரணமான கர்த்தர் மக்களின் பார்வைக்கு மறைந்து போனார். போரை முன்னின்று நடத்திய கிதியோன் மக்களின் பார்வைக்கு பெரியவராகத் தோன்றினார். அவர்கள் கிதியோனை நோக்கி, “நீரும் உம்முடைய குமாரனும், உம்முடைய குமாரனின் குமாரனும்…

April

செய்தவற்றின் பலனை அனுபவித்தல் 

2023 ஏப்ரல் 3 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 8,13 முதல் 21 வரை) “பட்டணத்தின் மூப்பரைப் பிடித்து, வனாந்தரத்தின் முள்ளுகளையும் நெறிஞ்சில்களையும் கொண்டுவந்து, அவைகளால் சுக்கோத்தின் மனுஷருக்குப் புத்திவரப்பண்ணி(னான்)” (வசனம் 16). தேவன் கிதியோனுக்கு மீதியானியர்களின்மீது மிகப் பெரிய வெற்றியைக் கொடுத்தார். கிதியோனின் மனிதர்களை உபசரித்ததன் வாயிலாக, சுக்கோத்தின் மக்களும் இந்த வெற்றியில் பங்குபெறும் வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் அதை அவர்கள் அலட்சியம் செய்தார்கள். மாறாக கிதியோனின் படையைப் பகைத்ததன் வாயிலாக மறைமுகமாக மீதியானியரின் படைக்கு உதவி…

April

சகோதரரைப் பகைக்க வேண்டாம்

2023 ஏப்ரல் 2 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 8,4 முதல் 12 வரை) “அவன் சுக்கோத்தின் மனிதரை நோக்கி: என்னோடிருக்கிற ஜனத்திற்குச் சில அப்பங்களைக் கொடுங்கள்; அவர்கள் விடாய்த்திருக்கிறார்கள்” (வசனம் 5). நியாயாதிபதிகள் புத்தகம் இப்பொழுது அடுத்த கட்ட பிரச்சினைகளை நமக்கு முன் வைக்கிறது. இதுவரை எதிரிகளோடு போரிட்டுக் கொண்டவர்கள் இது முதல் அவர்கள் தங்கள் சகோதர கோத்திரங்களுடன் போரிட்டுக்கொள்ளத் தொடங்கிவிட்டார்கள். கிதியோனும் அவனுடைய வீரர்களும் மீதியானியரில் மீந்திருக்கிற வீரர்களையும் அவர்களின் ராஜாக்களாகிய சேபாவையும் சல்முனாவையும் பிடிக்க…

April

வெற்றிக்குப் பின் சோதனை

2023 ஏப்ரல் 1 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 8,1 முதல் 3 வரை) “அபியேஸ்ரியரின் திராட்சப் பழத்தின் முழு அறுப்பைப் பார்க்கிலும் எப்பிராயீமரின் மீதியான அறுப்பு அதிகம் அல்லவா?” (வசனம் 2). மீதியானியருடனான இந்தப் போரில் எப்பிராயீம் கோத்திரத்தார் பங்கு பெறவில்லை. இவர்கள் எண்ணிக்கையில் மிகுதியானவர்கள். ஆனால் போரின் இறுதி நேரத்தில், தப்பி ஓடிய மீதியானியரின் இரண்டு அதிபதிகளைப் பிடிக்கும்படி கிதியோன் எப்பிராயீம் மக்களுக்குச் செய்தி அனுப்பினான். அந்தப்படியே அவர்களும் வந்து இரண்டு அதிபதிகளையும் விரட்டிப் பிடித்து,…