March

தேடிவருகிற கர்த்தர்

2023 மார்ச் 21 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 6,7 முதல் 11 வரை) “கர்த்தர் ஒரு தீர்க்கதரிசியை அவர்களிடத்திற்கு அனுப்பினார்” (வசனம் 8). இஸ்ரவேல் மக்கள் கர்த்தருடைய பார்வையில் மீண்டும் பொல்லாத காரியங்களைச் செய்தபோது, அவர்களை  அழைத்த அழைப்பில் மாறாதவரும் அன்புள்ளம் கொண்டவருமாகிய கர்த்தர் தம்முடைய பக்கம் திரும்ப அழைத்துக் கொள்வதற்காகப் பிரயாசப்படுகிறார். “உன் நிலத்தின் கனியையும், உன் பிரயாசத்தின் எல்லாப் பலனையும் நீ அறியாத ஜனங்கள் புசிப்பார்கள்; நீ சகல நாளும் ஒடுக்கப்பட்டும் நொறுக்கப்பட்டும் இருப்பாய்”…

March

ஆவிக்குரிய தாழ்வுநிலை

2023 மார்ச் 20 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 6,1 முதல் 6 வரை) “பின்னும் இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பைச் செய்தார்கள்; அப்பொழுது கர்த்தர் அவர்களை ஏழு வருஷம் மீதியானியரின் கையில் ஒப்புக்கொடுத்தார்” (வசனம் 1). கர்த்தரை நேசிப்பவர்கள் தங்கள் வாழ்க்கையில் பெலத்தின்மேல் பெலமடைந்து மங்கிப்போகாத வெளிச்சத்தில் வாழும் செழிப்பான வாழ்க்கைக்கும், பெலன் குறைந்து இருளான நிலையின்  வறட்சியான வாழ்க்கைக்குமான வேறுபாட்டை இன்றைய வேத பகுதி நமக்குச் சுட்டிக்காட்டுகிறது. நாற்பது ஆண்டுகால சமாதானமும், செழிப்பானதுமான வாழ்க்கை…

March

உழைப்புக்கான வெகுமதி

2023 மார்ச் 19 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 5,24 முதல் 31 வரை) “ஸ்திரீகளுக்குள்ளே கேனியனான ஏபேரின் மனைவியாகிய யாகேல் ஆசீர்வதிக்கப்பட்டவள்” (வசனம் 24). தெபொராளின் பாடல் யாகேலின் சிறப்பான பங்களிப்பைக் விவரிக்கிறது. யாகேல் சிசெராவைக் கொன்றது அவர்களுடைய மகிழ்ச்சிக்கு ஒரு சிறப்பான காரணம். சிசெரா கொடூரமான அடக்குமுறைக்கும் புற இனத்தாரின் தீய பழக்கவழக்கங்கள் அனைத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தினார். இஸ்ரவேலின் எதிரியை முறியடித்து அழிக்கும் தைரியம் யாகேலுக்கு இருந்தது. தன்னிடமிருந்த ஆணியையும், சுத்தியலையும் கொண்டு சிசெராவுக்குக் கொடிய விளைவை…

March

ஆபத்தில் தோள்கொடுப்போம்

2023 மார்ச் 18 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 5,12 முதல் 23 வரை) “அபினோகாமின் குமாரனே, உன்னைச் சிறையாக்கினவர்களைச் சிறையாக்கிக்கொண்டுபோ” (வசனம் 12). தெபொராள் மற்றும் பாராக்கின் பாடலின் கருத்து வளர்ச்சியடைந்து அடுத்த கட்டத்துக்கு நகருகிறது. இந்த இனிய பாடல் சில மறக்கமுடியாத வாக்கியங்களைக் கொண்டுள்ளது. தங்களைச் சிறையாக்கிய கானானியர்களைப் பாராக் வெற்றி கொண்டான். “சிறையாக்கினவர்களைச் சிறையாக்கிக்கொண்டுபோ” (வசனம் 12) என்ற சொற்றொடரை சங்கீதம் 68,18 இல் தாவீதும், எபேசியர் 4,8 இல் பவுலும் மேற்கோள் காட்டியிருப்பது…

March

அடிமைத்தனத்துக்கான காரணம்

2023 மார்ச் 17 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 5,4 முதல் 11 வரை) “நூதன தேவர்களைத் தெரிந்துகொண்டார்கள்; அப்பொழுது யுத்தம் வாசல் வரையும் வந்தது” (வசனம் 8). தெபொராளும் பாராக்கும் பாடிய பாடல் ஒரு வெற்றியின் பாடல் மட்டுமல்ல, அக்கால மக்களின் வாழ்க்கை நிலையயைப் படம் பிடித்துக்காட்டுவது மட்டுமல்ல, இக்கால விசுவாசிகளின் நிலையையும் சுட்டிக்காட்டுவதாகவும் இருக்கிறது. “பெரும்பாதைகள் பாழாய்க் கிடந்தன; மக்கள் பக்கவழியாய் நடந்துபோனார்கள்” (வசனம் 6). கானானியர்களின் அடக்கு முறையால் அவர்களுக்குப் பயந்து மக்கள் நெடுஞ்சாலைகளில்…

March

பாடல்களின் முக்கியத்துவம்

2023 மார்ச் 16 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 5,1 முதல் 3 வரை) “அந்நாளிலே தெபொராளும் அபினோகாமின் குமாரன் பாராக்கும் பாடினதாவது” (வசனம் 1). இலக்கியத்தின் உன்னதமான வகைகளில் ஒன்று வெற்றிக்குப் பின் பாடும் உற்சாகமான பாடல். தங்கள் நாட்டின் விடுதலைக்காக தங்களை மனப்பூர்வமாக ஒப்புக்கொடுத்த மக்கள், பின்பு தங்களையே உற்சாக பலியாக கர்த்தருக்கு ஒப்புவித்த கதையை இப்பாடல் விவரிக்கிறது (வசனம் 2,9). கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை எகிப்தியர்களின் கையிலிருந்து விடுவித்தபோது அவர்களின் இதயங்களிலிருந்து உடனடியாக மகிழ்ச்சி…

March

சமநிலையற்ற யுத்தம்

2023 மார்ச் 15 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 4,11 முதல் 23 வரை) “கர்த்தர் சிசெராவையும் அந்த எல்லா ரதங்களையும் சேனையனைத்தையும் பாராக்குக்கு முன்பாகப் பட்டயக்கருக்கினால் கலங்கடித்தார்” (வசனம் 15). தங்களுடைய சுதந்தரத்தை மீட்டெடுப்பதற்காக ஒரு மாபெரும் போர் நடைபெறுகிறது. இது ஒரு சமநிலையற்ற போர். ஒரு ரதங்கூட இல்லாத, முறையான பயிற்சி அற்ற ராணுவத்துக்கும், தொள்ளாயிரம் இருப்பு ரதங்கள் கொண்ட பயிற்சி பெற்ற இராணுவத்துக்கும் இடையேயான போர். ஆனால் இஸ்ரயேலருக்கு ஒரு கர்த்தருடைய தீர்க்கதரிசி இருக்கிறார்.…

March

தயக்கத்தால் வரும் இழப்பு

2023 மார்ச் 14 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 4,6 முதல் 10 வரை) “அதற்குப் பாராக்: நீ என்னோடே கூட வந்தால் போவேன்; என்னோடே கூட வராவிட்டால் நான் போகமாட்டேன்” (வசனம்  8). “நான் யாபீனின் சேனாதிபதியாகிய சிசேராவையும், அவன் ரதங்களையும், அவன் சேனையையும், கீசோன் பள்ளத்தாக்கிலே உன்னிடத்திற்கு வர இழுத்து, அவனை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன்” என்னும் கர்த்தருடைய உறுதியான வார்த்தைகளை தெபொராள், பாராக் என்னும் விசுவாச மனிதனிடம்   தெரிவித்தாள். கர்த்தருடைய இந்த உறுதியான வார்த்தைகளை…

March

பெண்களின் ஊழியம்

2023 மார்ச் 13 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 4,4 முதல் 5 வரை) “அக்காலத்திலே லபிதோத்தின் மனைவியாகிய தெபொராள் என்னும் தீர்க்கதரிசியானவள் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தாள்” (வசனம் 4). கானானியர் இருபது ஆண்டுகள் இஸ்ரயேல் மக்களை கொடுமையாக அடக்கியாண்டதன் விளைவாக, அவர்களுடைய எண்ணம் கர்த்தரை நோக்கித் திரும்பியது. அவர்கள் கர்த்தரிடம் தங்கள் அங்கலாய்ப்பைச் சொல்லி முறையிட்டார்கள். கர்த்தர் அவர்களைக் காப்பாற்றும்படி தெபொராள் என்னும் பெண்ணை எழுப்பினார். பொதுவெளியில் கர்த்தருக்காகப் பயன்படுத்தப்பட்ட அரிதான பெண்களில் இவளும் ஒருத்தி. இவள்…

March

பழைய எதிரி புதிய வடிவில்

2023 மார்ச் 12 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 4,1 முதல் 3 வரை ) “ஆகையால் கர்த்தர் அவர்களை ஆத்சோரில் ஆளுகிற யாபீன் என்னும் கானானியருடைய ராஜாவின் கையில் விற்றுப்போட்டார்” (வசனம் 2). ஏகூத் மரணமடைந்தவுடன் இஸ்ரயேல் புத்திரர் மீண்டும் பாவ வழிக்குத் திரும்பினர். கர்த்தர் அவர்களை கானானியருடைய ராஜாவின் கையில் விற்றுப்போட்டார் (வசனம் 2). “நீர் உம்முடைய ஜனங்களை இலவசமாக விற்கிறீர்; அவர்கள் கிரயத்தினால் உமக்கு லாபமில்லையே” (சங்கீதம் 44,12) என்ற சங்கீதக்காரனின் பாடல் அடிகள்…