March

தாற்றுக்கோலால் சண்டையிட்ட சம்கார்

2023 மார்ச் 11 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 3,31) “அவனுக்குப் பிற்பாடு ஆனாத்தின் குமாரன் சம்கார் எழும்பினான்; அவன் பெலிஸ்தரில் அறுநூறுபேரை ஒரு தாற்றுக்கோலால் முறிய அடித்தான்; அவனும் இஸ்ரவேலை இரட்சித்தான்” (வசனம் 31). வேதத்தில் ஓரிரு பகுதிகளில் மட்டுமே பதிவுசெய்யப்பட்டுள்ள தேவனுடைய மனிதர்களுக்குள் சம்காரும் ஒருவன். ஆயினும் அவனுடைய பங்களிப்பை விவரிக்க இந்த ஒரு வசனம் போதுமானது. தேவனுக்காக எழும்பிப் பிரகாசித்த துணிச்சலான நட்சத்திர வீரர்களின் பெயர்களோடு சம்காரின் பெயரையும் சேர்ப்பது அவருக்குப் பிரியமாயிருந்திருக்கிறது. நாமும்…

March

இருபுறமும் கருக்குள்ள பட்டயம்

2023 மார்ச் 10 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 3,15 முதல் 31 வரை) “ஏகூத் இருபுறமும் கருக்குள்ள ஒரு முழ நீளமான ஒரு கத்தியை உண்டுபண்ணி” (வசனம் 16). மாம்சத்துக்கு அடையாளமாயிருக்கிற எக்லோன் போன்ற ஸ்தூலித்த மனிதனுடைய கையிலிருந்து தப்பிப்பதற்கு என்ன செய்யவேண்டும்? கர்த்தரால் எழுப்பப்பட்ட இரட்சகனாகிய ஏகூத்தின் முன்னேற்பாடுகள் இதற்கான வழிகளை நமக்குத் தெரிவிக்கின்றன. பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்த ஏகூத் இடதுகை பழக்கமுடையவன். ஒத்னியேலைப் போல பேர்பெற்ற யூதா கோத்திரத்தைச் சேர்ந்தவன் அல்லன் இவன். சிறிய…

March

மீண்டும் அடிமைத்தனம்

2023 மார்ச் 9 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 3,12 முதல் 14 வரை) “கர்த்தர் எக்லோன் என்னும் மோவாபின் ராஜாவை இஸ்ரவேலுக்கு விரோதமாய்ப் பலக்கப்பண்ணினார்” (வசனம் 12). நாற்பது ஆண்டுகால சமாதான வாழ்க்கைக்குப் பின் மக்கள் மீண்டும் கர்த்தரின் பார்வைக்கு பொல்லாப்பானதைச் செய்தார்கள். ஒத்னியேலின் தலைமையின்கீழ் கற்றுக்கொண்ட பாடங்களை மக்கள் மறந்துவிட்டார்கள். தாங்கள் பெற்றுக்கொண்ட நன்மைக்கும் ஆசீர்வாதங்களுக்கும் நன்மைகளுக்கும் நன்றியுள்ளவர்களாய் நடந்துகொள்வது ஒவ்வொரு விசுவாசியின் பொறுப்பாக இருக்கிறது. தேவன் சபையை இந்த உலகத்தில் ஓர் உயர்ந்த ஸ்தானத்தில்…

March

முதல் நியாயாதிபதி ஒத்னியேல்

2023 மார்ச் 8 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 3,7 முதல் 11 வரை) “கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை இரட்சிக்கும்படி காலேபின் தம்பியான கேனாசுடைய குமாரனாகிய ஒத்னியேல் என்னும் ஒரு இரட்சகனை அவர்களுக்கு எழுப்பப்பண்ணினார்” (வசனம் 9). இஸ்ரவேல் புத்திரரின் ஆவிக்குரிய நிலை, தேவன் அவர்களை அவர்களுடைய எதிரியின் கையில் அடிமைகளாக விற்கும் அளவுக்குப் போனது. அவர்கள் கர்த்தருக்கு விரோதமாக தீமை செய்து, அவரை மறந்து, தங்களைச் சூழ்ந்திருந்த உருவ வழிபாட்டுக்கு அடிமையானார்கள். எனவே தேவன் அவர்களை அடிமைகளைப்…

March

கற்றலும் தேர்வும்

2023 மார்ச் 7 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 2,20 முதல் 3,6 வரை) “அவர்கள் பிதாக்கள் கர்த்தரின் வழியைக் கவனித்ததுபோல, அவர்கள் அதிலே நடக்கும்படிக்கு, அதைக் கவனிப்பார்களோ இல்லையோ என்று அவர்களைக் கொண்டு சோதிப்பதற்காக இப்படிச் செய்வேன் என்றார்” (வசனம் 2,22). கர்த்தர் நம்மை ஒருபோதும் பொல்லாங்கினால் சோதிக்கிறவர் அல்லர். நமக்கு முன்பாக ஒரு தீமையை வைத்து இதில் இவன் விழுந்துபோவானோ என்று பார்ப்போம் என்று ஒருபோதும் செய்கிறதில்லை. இதுபோன்ற காரியத்தை நம்முடைய ஆண்டவருக்கும் நமக்கும் எதிரியாகிய…

March

இரண்டு தீமைகள்

2023 மார்ச் 6 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 2,11 முதல் 19 வரை) “அவர்களுடைய தேவனாகிய கர்த்தரை விட்டு, தங்களைச் சுற்றிலும் இருக்கிற ஜனங்களுடைய தேவர்களாகிய அந்நிய தேவர்களைப் பின்பற்றிப்போய் …” (வசனம் 12). “என் ஜனங்கள் இரண்டு தீமைகளைச் செய்தார்கள்; ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய என்னை விட்டுவிட்டார்கள்; தண்ணீர் நிற்காத தொட்டிகளாகிய வெடிப்புள்ள தொட்டிகளைத் தங்களுக்கு வெட்டிக்கொண்டார்கள்” (எரேமியா 2,13) என்று பிற்காலத்தில் தீர்க்கதரிசி எரேமியாவினால் சொல்லப்பட்ட வார்த்தைகள் இஸ்ரயேல் மக்களிடத்தில் இப்பொழுது உண்மையாகத் தொடங்கியிருந்தன. துரதிஷ்டவசமான…

March

தோல்வியின் விளைவு

2023 மார்ச் 5 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 2,6 முதல் 10 வரை) “கர்த்தரையும், அவர் இஸ்ரவேலுக்காகச் செய்த கிரியையையும் அறியாத வேறொரு சந்ததி அவர்களுக்குப் பின் எழும்பிற்று” (வசனம் 10). இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து வெளியேறிய நிகழ்வும், செங்கடல் இரண்டாகப் பிரிந்த அதிசயம், வனாந்தரத்தில் மன்னா விழுந்ததையும் யோசுவாவும், காலேபும் பேசுவதைக் கேட்பது புதிய தலைமுறை மக்களுக்கு என்னே ஒரு சிலிர்ப்பான அனுபவமாக இருந்திருக்கும்! ஆனால் அதற்குப் பின்னர் இரண்டாம் கட்டத் தலைவர்கள் தாங்கள் கேட்டதும்…

March

தோல்விக்கான காரணங்களை ஆராய்தல்

2023 மார்ச் 4 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 2,1 முதல் 5 வரை) “கர்த்தருடைய தூதனானவர் கில்காலிருந்து போகீமுக்கு வந்து” (வசனம் 1). “கர்த்தருடைய தூதனானவர் கில்காலிருந்து போகீமுக்கு வந்து” (வசனம் 1) என்னும் வார்த்தைகள், கில்கால் மக்களுடைய முக்கியமான இடமாக இராமல், அவர்களுடைய மனதில் இருந்து மறைந்துபோய்விட்டது என்பதை வெளிப்படுத்துகிறது. கில்கால் என்பது அவர்கள் ஒரு தேசமாக விருத்தசேதனம் பண்ணிக்கொண்ட இடம். அதாவது தங்கள் சுய மாம்ச பலத்தை இழந்து வெற்றிக்காக கர்த்தரைச் சார்ந்துகொண்ட இடம்.…

March

நீடித்த வெற்றியின் இரகசியம்

2023 மார்ச் 3 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 1,16 முதல் 36 வரை) “பள்ளத்தாக்கின் குடிகளுக்கு இருப்பு இரதங்கள் இருந்தபடியினால் அவர்களைத் துரத்தக்கூடாமற்போயிற்று” (வசனம் 19). கானானின்மீது இஸ்ரயேலரின் வெற்றி என்பது முழுமையானதாக இருக்கவில்லை என்ற செய்தியை நியாயாதிபதிகளின் புத்தகம் அறியத் தருகிறது. அந்த நாட்டின் பூர்வீகக் குடிகளை முழுமையாகத் தோற்கடிக்கக்கூடிய வாய்ப்பு இஸ்ரவேலருக்கு இருந்தும், தங்களுடைய தேவைக்காக அவர்களைப் பயன்படுத்திக்கொள்ளும்படியாக அவர்களோடு சமரசப் போக்கைக் கடைப்பிடித்தார்கள். சில இடங்களில் அவர்களோடு சமாதான உடன்படிக்கையும் பண்ணிக்கொண்டார்கள். இதுவே…

March

சிலுவையால் வரும் வெற்றி

2023 மார்ச் 2 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 1,4 முதல் 15 வரை ) “யூதா எழுந்துபோனபோது, கர்த்தர் கானானியரையும் பெரிசியரையும் அவர்கள் கையிலே ஒப்புக்கொடுத்தார்” (வசனம் 3). நம்முடைய தேவன் எல்லாம் அறிந்த இறையாண்மையுள்ள தேவன். அவர் சகலத்தையும் தம்முடைய நீதியின்படி செய்கிறவர். இஸ்ரயேலர்கள் கானானின் பூர்வீகக் குடிகளை முறியடித்து, தங்களுடைய சுதந்தரத்தைப் பெருக்கிக்கொள்வதற்கு கர்த்தர் துணை புரிந்தார் என்பது உண்மையாயினும், மற்றொரு வகையில் அது அவர்களுக்கு வந்த நியாயத்தீர்ப்பாகவும் இருந்தது. “உன் நீதியினிமித்தமும், உன்…