January

ராகாப் மீட்கப்படுதல்

2023 ஜனவரி 21 (வேத பகுதி: யோசுவா 6,17 முதல் 27 வரை)  “எரிகோவை வேவுபார்க்க யோசுவா அனுப்பின ஆட்களை ராகாப் என்னும் வேசி மறைத்துவைத்தபடியினால், அவளையும் அவள் தகப்பன் வீட்டாரையும் அவளுக்குள்ள யாவையும் யோசுவா உயிரோடே வைத்தான்; அவள் இந்நாள் வரைக்கும் இஸ்ரவேலின் நடுவிலே குடியிருக்கிறாள்” (வசனம்  2). “விசுவாசத்தினாலே எரிகோ பட்டணத்தின் மதில்கள் ஏழு நாள் சுற்றிவரப்பட்டு விழுந்தது” (எபிரெயர் 11,30) என்று புதிய ஏற்பாடு கூறுகிறது. யாருடைய விசுவாசத்தினால்?? தேவன் ஒருபோதும் வார்த்தை…

January

எரிகோவின்மீது வெற்றி

2023 ஜனவரி 20 (வேத பகுதி: யோசுவா 6,1 முதல் 16 வரை)  “கர்த்தர் யோசுவாவை நோக்கி: இதோ, எரிகோவையும் அதின் ராஜாவையும் யுத்தவீரரையும் உன் கையில் ஒப்புக்கொடுத்தேன்” (வசனம்  2) எரிகோ மதில்சூழ் பட்டணம். இஸ்ரயேலர்கள் கானானில் குடியிருக்க வேண்டுமாயின் அதைத் தோற்கடிக்க வேண்டும். மனிதனுடைய பார்வையில் கடினமாய்த் தோன்றுவதை கர்த்தர் எளிதாக்கிவிடுகிறார். இந்தப் பட்டணத்தைச் சந்திப்பதற்கு முன் யோசுவா “கர்த்தருடைய சேனையின் அதிபதியைச்” சந்தித்தான் (யோசுவா 5,14). ஆம் கர்த்தர் இங்கே தன்னை ஒரு…

January

கானானின் நன்மையை அனுபவித்தல்

2023 ஜனவரி 19 (வேத பகுதி: யோசுவா 5,10 முதல் 15 வரை)  “பஸ்காவின் மறுநாளாகிய அன்றையத்தினம் அவர்கள் தேசத்தினுடைய தானியத்தாலாகிய புளிப்பில்லாத அப்பங்களையும் சுட்ட கதிர்களையும் புசித்தார்கள்” (வசனம்  11) பாவத்துக்கும் சுயத்துக்கும் மரித்து, உயிர்த்தெழுந்த கிறிஸ்துவுடன் அடையாளப்படுத்திக் கொள்ளும்போதே ஆவிக்குரிய போரில் வெற்றிக்கான முதல் அடியை எடுத்து வைக்கிறோம். இஸ்ரவேல் மக்கள் தேவனால் அருளப்பட்ட வாக்குத்தத்த பூமியில் அவர்கள் விருத்தசேதனம் பண்ணிக்கொண்ட பின்னர் முதலாவது செய்த காரியம் பஸ்காவையும் அதைத் தொடர்ந்து புளிப்பில்லா அப்பம்…

January

எகிப்தின் நிந்தை நீங்குதல்

2023 ஜனவரி 18 (வேத பகுதி: யோசுவா 5,1 முதல் 9 வரை)  “கர்த்தர் யோசுவாவை நோக்கி: இன்று எகிப்தின் நிந்தையை உங்கள்மேல் இராதபடிக்குப் புரட்டிப்போட்டேன் என்றார்; அதனால் அந்த ஸ்தலம் இந்நாள் வரைக்கும் கில்கால் எனப்படுகிறது” (வசனம்  9) இஸ்ரவேல் மக்கள் யோர்தானைக் கடந்து தேவன் வாக்களித்த வாக்குத்தத்த நாட்டிற்குள் கால்வைத்து விட்டார்கள். அவர்கள் உயிர்த்தெழுதலின் கரையில் வந்துவிட்டார்கள். அது வெற்றிக்கொண்டாட்டமாக மாறுவதற்கு முன் ஒரு தற்பரிசோதனையும் புதுப்பித்தலும் அவசியமாக இருக்கிறது. ஒரு தேசமாக அவர்கள்…

January

நினைவுத்தூண்கள்

2023 ஜனவரி 17 (வேத பகுதி: யோசுவா 4,1 முதல் 24 வரை) “இஸ்ரவேல் புத்திரருடைய கோத்திரங்களின் இலக்கத்துக்குச் சரியாகப் பன்னிரண்டு கற்களை யோர்தானின் நடுவில் எடுத்து, அவைகளைக் தங்களோடேகூட அக்கரைக்குக் கொண்டுபோய், தாங்கள் தங்கின இடத்திலே வைத்தார்கள் ” (வசனம்  8) இஸ்ரயேலர்கள் யோர்தான் ஆற்றைக் அற்புதமான முறையில் கடந்தார்கள். உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்கள் அங்கு நிற்கும்வரை தண்ணீர் குவியலாக நின்றது. அதன் நடுவிலிருந்து கோத்திரத்துக்கு ஒன்று வீதம் எடுக்கப்பட்ட பன்னிரண்டு கற்கள் கரையைக்…

January

யோர்தானைக் கடந்து செல்லுதல்

2023 ஜனவரி 16 (வேத பகுதி: யோசுவா 3,1 முதல் 17 வரை ) “இதோ, சர்வ பூமிக்கும் ஆண்டவராயிருக்கிறவருடைய உடன்படிக்கைப் பெட்டி உங்களுக்கு முன்னே யோர்தானிலே போகிறது” (வசனம்  . 11) கர்த்தர் யோசுவாவை இப்பணிக்கு அழைத்தபோது நியாயப்பிரமாணப் புத்தகத்தை இரவும் பகலும் தியானித்துக் கொண்டிருப்பாயாக” என்று கூறினார் (வசனம்  1,8). இப்பொழுது யோசுவா அதிகாலமே எழுந்திருந்தான் (வசனம்  1). அன்றைய நாளுக்குரிய கடமைகளை நிறைவேற்றுவதற்கு ஆயத்தமானான். யோர்தானைக் கடப்பது மனித யோசனை அல்ல. அது…

January

ராகாபின் விசுவாசம்

2023 ஜனவரி 15 (வேத பகுதி: யோசுவா 2,16 முதல் 24 வரை) “….நீ இந்த சிவப்பு நூல் கயிற்றை எங்களை இறக்கிவிட்ட ஜன்னலிலே கட்டி, உன் தகப்பனையும் உன் தாயையும் உன் சகோதரர்களையும் உன் தகப்பன் குடும்பத்தார் அனைவரையும் உன்னிடத்தில் உன் வீட்டிலே சேர்த்துக்கொள்” (வசனம்  17). நித்திய பாதுகாப்பு “அவருக்குச் சொந்தமானவர்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாக மீட்கப்படுவார்கள் என்பதற்கு ஆவியானவர் நம்முடைய சுதந்தரத்தின் அச்சாரமாயிருக்கிறார்” (எபேசியர்  1,14) என்ற புதிய ஏற்பாட்டு சத்தியத்திற்கு ராகாப்…

January

ராகாபின் விசுவாசம்

2023 ஜனவரி 14 (வேத பகுதி: யோசுவா 2,1 முதல் 15 வரை) “கர்த்தர் உங்களுக்கு தேசத்தை ஒப்புக்கொடுத்தாரென்றும், உங்களைப் பற்றி எங்களுக்குத் திகில் பிடித்திருக்கிறதென்றும், உங்களைக்குறித்து தேசத்துக் குடிகள் எல்லாரும் சோர்ந்துபோனார்களென்றும் அறிவேன்” (வசனம்  9). எரிகோ மிகவும் பெரிய நகரம். அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்ந்தார்கள். ஆயினும் ராகாப் என்னும் பெண்ணின் பெயர் மட்டும் இங்கு சொல்லப்பட்டுள்ளது. அது அழிக்கப்பட்டது எனினும் ஒரேயொரு பெண்ணின் விசுவாசத்தால் அவளும் அவளின் குடும்பத்தாரும் அழிவினின்று  காப்பாற்றப்பட்டார்கள். அவள்…

January

வெற்றிக்காக ஒன்றுபடுதல்

2023 ஜனவரி 13 (வேத பகுதி: யோசுவா 1,10 முதல் 18 வரை)  “நீங்கள் பாளையத்தை உருவ நடந்துபோய், ஜனங்களைப் பார்த்து: உங்களுக்குப் போஜன பதார்த்தங்களை ஆயத்தம் பண்ணுங்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சுதந்தரிக்கக் கொடுக்கும் தேசத்தை நீங்கள் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு, இன்னும் மூன்று நாளைக்குள்ளே இந்த யோர்தானைக் கடந்துபோவீர்கள் என்று சொல்லச் சொன்னான்” (வசனம் 11). தேவனுடைய கட்டளைகளில் ஓர் ஆவிக்குரிய தொடர்ச்சி இருக்கிறது. தேவன் யோசுவாவுக்குக் கட்டளையிட்டார் (வசனம்  9). யோசுவா ஜனங்களின் அதிபதிகளுக்குக்…

January

ஒரு புதிய தலைவர்

2023 ஜனவரி 12 (வேத பகுதி: யோசுவா 1,1 முதல் 9 வரை )  “என் தாசனாகிய மோசே மரித்துப்போனான்; இப்பொழுது நீயும் இந்த ஜனங்கள் எல்லாரும் எழுந்து இந்த யோர்தானைக் கடந்து, இஸ்ரவேல் புத்திரருக்கு நான் கொடுக்கும் தேசத்துக்குப் போங்கள்” (வசனம் 2). மோசே மரித்தான். தேவன் அவனை அடக்கம்பண்ணினார். எத்தனை பெரிய தலைவராயினும் ஒரு நாள் மரித்தே ஆகவேண்டும். ஆனால் தேவனுடைய செயல்களுக்கோ முடிவில்லை. மக்கள் மோசேக்காக துக்கம் கொண்டாடினார்கள். ஆனால் இப்பொழுதோ அவர்கள்…