February

பேசித் தீர்த்துக்கொள்ளுதல்

2023 பெப்ரவரி 18 (வேத பகுதி: யோசுவா 22,21 முதல் 34 வரை) “அந்தச் செய்தி இஸ்ரவேல் புத்திரரின் பார்வைக்கு நன்றாயிருந்தது” (வசனம் 33). ரூபன் புத்திரரும், காத் புத்திரரும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும் தாங்கள் பலிபீடம் கட்டியதன் நோக்கத்தை விளக்கினார்கள். “தேவாதி தேவனாகிய கர்த்தரே அதை அறிந்திருக்கிறார்” (வசனம் 22) என்று கர்த்தரை சாட்சியாக முன்னிறுத்தி தங்கள் உண்மையை விளங்கப்பண்ணினார்கள். அது எவ்விதத் தவறான நோக்கத்துக்காகவும், அல்லது பிரிந்து போகும் எண்ணத்துடனும் கட்டப்படவில்லை என்பதை உறுதிபடக்…

February

நினைவுப் பீடம்

2023 பெப்ரவரி 17 (வேத பகுதி: யோசுவா 22,10 முதல் 20 வரை) “ரூபன் புத்திரரும், காத் புத்திரரும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும், அங்கே யோர்தானின் ஓரத்திலே பார்வைக்குப் பெரிதான ஒரு பீடத்தைக் கட்டினார்கள்” (வசனம் 10). இஸ்ரயேல் மக்கள் யோர்தானைக் கடந்தபோது, அதன் நடுவிலிருந்து 12 கற்களை எடுத்து, கரையில் குவித்து வைத்து ஒரு நினைவுக் கற்குவியலை உண்டாக்கினார்கள். இது பின்வரும் சந்ததிக்கு ஆண்டவரின் அற்புதமான செயலை நினைவூட்டுவதற்காக அமைக்கப்பட்டது (அதிகாரம் 4). இந்த நினைவுக்…

February

அன்பின் இரு பக்கம்

2023 பெப்ரவரி 16 (வேத பகுதி: யோசுவா 22,1 முதல் 9 வரை ) “நீங்கள் இதுவரைக்கும் அநேக நாளாக உங்கள் சகோதரரைக் கைவிடாமல், உங்கள் தேவனாகிய கர்த்தருடைய கட்டளையைக் காத்துக்கொண்டு நடந்தீர்கள்” (வசனம் 3). யோசுவா, ரூபன், காத் மற்றும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தையும் அழைத்து (வசனம் 1), கானான் தேசத்தை ஆபிராமின் சந்ததிக்கு சொந்தமாகக் கொடுப்பதாகக் கர்த்தர் வாக்களித்திருந்தார் (வசனம் 4), இப்போது அவர் அதைச் செய்திருக்கிறார். இந்தக் காரியத்தில் நீங்கள் கர்த்தர் தாம்…

February

லேவியர்களின் முக்கியத்துவம்

2023 பெப்ரவரி 15 (வேத பகுதி: யோசுவா 21,9 முதல் 45 வரை ) “இஸ்ரவேல் புத்திரருடைய காணியாட்சியின் நடுவிலே இருக்கிற லேவியரின் பட்டணங்களெல்லாம், அவைகளின் வெளிநிலங்களுக்குட்பட நாற்பத்தெட்டு” (வசனம் 41). லேவியர்களின் புத்திரருக்கு பிற கோத்திரங்களுக்கு நடுவே ஆங்காங்கே குடியிருப்பதற்கான இடத்தைக் கொடுத்தார். அடைக்கலப் பட்டணங்களிலும், இன் னும் பிற பட்டணங்களிலும் இவர்களுடைய குடியிருப்பு அமைந்திருந்தது. இவர்கள் நாடு முழுவதிலும் ஆங்காங்கே சிதறிக்கிடந்தார்கள். “யாக்கோபிலே அவர்களைப் பிரியவும், இஸ்ரவேலிலே அவர்களைச் சிதறவும்பண்ணுவேன்” (ஆதியாகமம் 49,7) என்ற…

February

லேவியர்களின் குடியிருப்பு

2023 பெப்ரவரி 14 (வேத பகுதி: யோசுவா 21,1 முதல் 13 வரை ) “கர்த்தருடைய வாக்கின்படியே, இஸ்ரவேல் புத்திரர் தங்கள் சுதந்தரத்திலே லேவியருக்குப் பட்டணங்களையும் அவைகளின் வெளி நிலங்களையும் கொடுத்தார்கள்” (வசனம் 3). இஸ்ரவேலின் ஆசாரியர்களும் லேவியர்களும் தேவனால் சிறப்பான அழைப்பைப் பெற்றவர்கள். பொதுமக்களைக் காட்டிலும் தங்களுடைய பிறப்பு மற்றும் அழைப்பின் மூலம், தேவனுக்கு நெருக்கமானவர்களாக இருந்தார்கள். அவர்களுக்கு வழங்கப்பட்ட பதவியின் காரணமாக வெகுஜன மக்களைக் காட்டிலும் பரிசுத்தமானவர்கள். ஆனால் தேவனுடன் ஐக்கியம் மற்றும் பரிசுத்தமாகுதல்…

February

அடைக்கலம்தேடி ஓடுதல்

2023 பெப்ரவரி 13 (வேத பகுதி: யோசுவா 20,1 முதல் 9 வரை) “நான் மோசேயைக் கொண்டு உங்களுக்குக் கற்பித்த அடைக்கலப் பட்டணங்களை உங்களுக்கு ஏற்படுத்திக்கொள்ளுங்கள்” (வசனம் 2). “ஒரு மனிதன் சாகும்படி அடித்தால், நிச்சயமாய்க் கொலை செய்யப்படக்கடவன். ஒருவன் பதிவிருந்து கொல்லாமல் தேவச்செயலாய்த் தன் கைக்கு நேரிட்டவனைக் கொன்றால் அவன் ஓடிப்போய்ச் சேர வேண்டிய ஸ்தலத்தை உனக்கு நியமிப்பேன்” (யாத்திராகமம் 21,12 முதல் 13) என்று தேவன் ஏற்கனவே கூறியிருந்தார். மனிதன் தேவ சாயலில் உண்டாக்கப்பட்டவன்.…

February

ஒவ்வொருவருக்கும் சுதந்தரம்

2023 பெப்ரவரி 12 (வேத பகுதி: யோசுவா 19,1 முதல் 51 வரை ) “இவ்விதமாய் அவர்கள் தேசத்தைப் பங்கிட்டு முடித்தார்கள்” (வசனம் 51). சிமியோன் தொடங்கி, தாண் வரை ஒவ்வொரு கோத்திரத்துக்கும் வாக்குத்தத்த பூமி பங்கிட்டுக் கொடுக்கப்பட்டது. ஒவ்வொரு கோத்திரத்துக்குமான நிலப்பரப்பின் எல்லைகளும், அவை அமைந்திருக்கும் இடமும், அவற்றிலுள்ள பட்டணங்களும் துல்லியமான முறையில் வரையறுத்துக் கொடுக்கப்பட்டன. எவ்விதக் குழப்பங்களுக்கும் விவாதங்களுக்கும் இடம் வராத வகையில் அவை தேவனுடைய சந்நிதியில் வைத்து சீட்டுப்போடப்பட்டு பிரித்துக்கொடுக்கப்பட்டன. “நம்முடைய தேவன்…

February

பென்யமீனுக்குக் கிடைத்த பாதுகாப்பு

2023 பெப்ரவரி 11 (வேத பகுதி: யோசுவா 18,7 முதல் 28 வரை) “அவர்கள் (பென்யமீன்) பங்கு வீதத்தின் எல்லையானது யூதா புத்திரருக்கும் யோசேப்பு புத்திரருக்கும் நடுவே இருந்தது” (வசனம் 11). சில நேரங்களில், அமரிக்கையான வாழ்க்கையும்கூட நம்முடைய முன்னேற்றத்துக்குத் தடையாக இருந்துவிட வாய்ப்புண்டு. இஸ்ரயேல் மக்கள் சமாதானத்தின் நகரமாகிய சீலோவில் தங்கியிருந்த போது, “கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த தேசத்தைச் சுதந்தரித்துக் கொள்ளப் போகிறதற்கு, நீங்கள் எந்த மட்டும் அசதியாயிருப்பீர்கள்” (வசனம் 18,3) என்று யோசுவா அவர்களைக்…

February

சமாதான கர்த்தர் தங்கும் இடம்

2023 பெப்ரவரி 10 (வேத பகுதி: யோசுவா 18,1 முதல் 6 வரை “இஸ்ரவேல் புத்திரரின் சபையெல்லாம் சீலோவிலே கூடி, அங்கே ஆசரிப்புக் கூடாரத்தை நிறுத்தினார்கள். தேசம் அவர்கள் வசமாயிற்று” (வசனம் 1). இதுவரையில் இஸ்ரவேல் மக்கள் கில்காலில் தங்கியிருந்தார்கள். அங்கேயிருந்து தான் யோசுவா படைகளை அனுப்பி கானான் தேசம் முழுவதையும் சுதந்தரிக்கும்படி போர்களை நடத்தினான். அங்கிருந்துதான் ஐந்து கோத்திரங்களுக்கு தேசத்தை பங்கிட்டுக் கொடுத்தான். இப்போது அவர்கள் கில்காலிலிருந்து சீலோவிற்கு இடம்பெயர்ந்துவிட்டார்கள். சீலோ என்றால் “சமாதானத்தின் இடம்”…

February

பெண்களுக்கான சொத்துரிமை

2023 பெப்ரவரி 9 (வேத பகுதி: யோசுவா 17,1 முதல் 18 வரை) “எங்கள் சகோதரர் நடுவே எங்களுக்குச் சுதந்தரம் கொடுக்கும்படி கர்த்தர் மோசேக்கு கட்டளையிட்டார் என்றார்கள். ஆகையால் அவர்கள் தகப்பனுடைய சகோதரரின் நடுவே, கர்த்தருடைய வாக்கின்படி அவர்களுக்கு சுதந்தரம் கொடுத்தான்” (வசனம் 4). மனாசேயின் குமாரர்கள் தங்கள் தங்கள் குடும்பத்துக்குரிய குடியிருப்பின் நிலப்பரப்புக்கான பங்கைப் பெற்றார்கள். இதுவரை ஆண் பிள்ளைகள் மட்டுமே பெற்றுக்கொண்டு வந்த நடைமுறையில் ஒரு மாற்றத்தைக் காண்கிறோம். மனாசேயின் குமாரனாகிய மாகீருக்குப் பிறந்த…