February

முதல் குமாரனாக யோசேப்பு

2023 பெப்ரவரி 8 (வேத பகுதி: யோசுவா 16,1 முதல் 10 வரை) “யோசேப்பின் புத்திரருக்கு அகப்பட்ட பங்கு வீதமாவது” (வசனம் 1). யூத கோத்திரத்தாருக்கு முதன் முதலாக பங்குவீதம் கொடுக்கப்பட்ட பிறகு யோசேப்பின் பிள்ளைகளுக்கு இரண்டாவதாக ஒதுக்கப்பட்டது. யாக்கோபின் பிள்ளைகளில் யூதா கனத்துக்கும் மேன்மைக்கும் உரியவனாக எண்ணப்பட்டான். ஆகவே பெரும்பாலான இடங்களில் இந்த கோத்திரத்தார் மேன்மைக்குரிய முதல் இடத்தைப் பெற்றுக் கொண்டார்கள். இது அரச பரம்பரையாக மாறியது. அரசாண்ட தாவீதும், அரசாள போகிற தாவீதின் வழியில்…

February

காலேபின் விசுவாசக் குடும்பம்

2023 பெப்ரவரி 7 (வேத பகுதி: யோசுவா 15,1 முதல் 63 வரை) “அப்பொழுது அவள் (அக்சாள்), எனக்கு ஒரு ஆசீர்வாதம் தர வேண்டும்; எனக்கு வறட்சியான நிலத்தைத் தந்தீர்; நீர்ப்பாய்ச்சலான நிலத்தையும் எனக்குத் தரவேண்டும் என்றாள்” (வசனம் 13). “இந்த மலை நாட்டை எனக்குத் தாரும்” (14,12) என்ற வார்த்தைகள் காலேப் ஆவிக்குரிய பார்வையையும், ஆவிக்குரிய வல்லமையையும் கொண்டிருந்தான் என்பதைத் தெரிவிக்கின்றன. இவ்விரண்டு அரிய குணங்களும் காலேபின் ஆவிக்குரிய வெற்றிக்கு வழிவகுத்தன. காலேப் தனக்கு அளிக்கப்பட்ட…

February

கழுகுக்குச் சமமான பெலன்

2023 பெப்ரவரி 6 (வேத பகுதி: யோசுவா 14,6 முதல் 15 வரை) “அந்நாளிலே மோசே: நீ (காலேப்) என் தேவனாகிய கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றினபடியினால், உன் கால் மிதித்த தேசம் உனக்கும் உன் பிள்ளைகளுக்கும் என்றைக்கும் சுதந்தரமாயிருக்கக்கடவது என்று சொல்லி ஆணையிட்டார்” (வசனம் 9). தரிசித்த நடவாமல் விசுவாசித்து நடந்த விசுவாச வீரனாகிய காலேப் என்னும் மாபெரும் மனிதனை நீண்ட இடைவெளிக்குப் பிறகு நாம் சந்திக்கிறோம். மக்களை மனமடிவாக்கிய பத்துப் பேர்களின் யோசனைக்கு இணங்காமல் வேறே…

February

கர்த்தருடைய சுதந்திரம்

2023 பெப்ரவரி 5 (வேத பகுதி: யோசுவா 14,1 முதல் 5 வரை) “கானான் தேசத்திலே இஸ்ரவேல் புத்திரர் சுதந்தரித்துக்கொண்ட தேசங்களை ஆசாரியனாகிய எலெயாசாரும், நூனின் குமாரனாகிய யோசுவாவும் இஸ்ரவேல் புத்திரருடைய கோத்திரப் பிதாக்களின் தலைவரும், கர்த்தர் மோசேயைக் கொண்டு கட்டளையிட்டபடி சீட்டுப்போட்டு, ஒன்பதரைக் கோத்திரங்களுக்கும் சுதந்தரமாகப் பங்கிட்டார்கள்” (வசனம் 1,2). இஸ்ரயேல் மக்கள் கானான் தேசத்தை சீட்டு போட்டு பங்கிட்டு கொண்டார்கள். இது சந்தேகத்தையும் பொறாமையையும், பாரபட்சம் காட்டுதலையும் தவிர்க்க உதவுகிறது. மேலும் இது தேவனுடைய …

February

கர்த்தரிடத்திலிருந்து பெறும் சம்பளம்

2023 பெப்ரவரி 4 (வேத பகுதி: யோசுவா 13,14 முதல் 33 வரை) “மோசே ரூபன் புத்திரரின் கோத்திரத்துக்கு அவர்களுடைய வம்சங்களுக்குத் தக்கதாகச் சுதந்தரம் கொடுத்தான்” (வசனம் 15). ரூபன், காத் மற்றும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தார் தங்கள் சகோதரர்கள் பங்கைப் பெற்றுக்கொள்வதற்கு முன்னதாகவே தங்கள் சுதந்தரத்தைப் பெற்றுக்கொண்டார்கள். அவர்கள் யோர்தானுக்கு இந்தப் பக்கத்திலேயே அதைத் தெரிந்துகொண்டார்கள். அதை “அவர்களுடைய வம்சங்களுக்குத் தக்கதாக மோசே பகிர்ந்துகொடுத்தான்” (வசனம் 15) என்பது நாம் நினைவிற்கொள்ள வேண்டிய ஒரு சத்தியமாகும்.…

February

உற்சாகமூட்டும் வார்த்தைகள்

2023 பெப்ரவரி 3 (வேத பகுதி: யோசுவா 13,1 முதல் 13 வரை) “யோசுவா வயதுசென்று முதிர்ந்தவனானபோது, கர்த்தர் அவனை நோக்கி: நீ வயதுசென்றவனும் முதிர்ந்தவனுமானாய்; சுதந்தரித்துக்கொள்ளவேண்டிய தேசம் இன்னும் மகா விஸ்தாரமாயிருக்கிறது” (வசனம் 1). யோசுவாவுக்கு வயதாகிவிட்டது. ஆயினும் தேவன் யோசுவாவை கடந்தகாலத்தின் நினைவில் மூழ்கிக்கிடக்கும்படி அல்ல, எதிர்காலத்தின் பணிக்காக முன்னேறிச் செல்லும்படி அழைக்கிறார். அவனுக்கு முன்பாக ஒரு மகத்தான பணி இருக்கிறது. அவனுடைய மரணத்துக்கு முன்பாக அதை நிறைவேற்றி முடிக்க வேண்டும். பூரணராகும்படி கடந்துபோவோமாக…

February

சிறியவையும் சிறந்தவையே

2023 பெப்ரவரி 2 (வேத பகுதி: யோசுவா 12,1 முதல் 24 வரை) “யோர்தானுக்கு அப்புறத்தில் சூரியன் உதயமாகிற திசையிலே அர்னோன் ஆறு துவக்கி எர்மோன் மலைமட்டும், கிழக்கே சமபூமி எல்லையில்லெல்லாமுள்ள ராஜாக்களை இஸ்ரவேல் புத்திரர் முறிய அடித்து, அவர்களுடைய தேசங்களையும் சுதந்தரித்துக்கொண்டார்கள். …  இவர்களெல்லாரும் முப்பத்தொரு ராஜாக்கள்” (வசனம் 1, 24). இந்தப் பகுதி யோசுவாவின் இராணுவ நடவடிக்கைகளுக்கு ஒரு முடிவைக் கொண்டுவருகிறது. அவருடைய போர் வெற்றிகளின் சுருக்கம் மற்றும் அவரால் முறியடிக்கப்பட்ட முப்பத்தொரு மன்னர்களின்…

February

ஆசீர்வாதத்தை அனுபவித்தல்

2023 பெப்ரவரி 1 (வேத பகுதி: யோசுவா 11,12 முதல் 23 வரை) “யுத்தம் ஓய்ந்ததினால் தேசம் அமைதலாயிருந்தது” (வசனம் 23). யோசுவா நெடுநாளாய் அந்த ராஜாக்களோடு யுத்தம் பண்ணினான் (வசனம் 18). ஏறத்தாழ ஐந்து ஆண்டுகளாக இது நடைபெற்றிருக்கலாம். சமாதானம் பண்ணிக்கொண்ட கிபியோனியர்களைத் தவிர வேறு எந்த அரசர்களோடும் யோசுவா சமரசம் செய்துகொள்ளவில்லை. சிலர் தப்பித்து ஆங்காங்கே ஓடி ஒளிந்துகொண்டதைத் தவிர எல்லாரும் கொல்லப்பட்டார்கள். கானான் தேசத்தை ஆபிரகாமுக்கும் அவனுடைய சந்ததிக்கும் தருவதாக தேவன் வாக்குப்பண்ணினார்.…