பிரச்சினைகளைக் கையாளுதல்
2023 மே 21 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 20,1 முதல் 10 வரை) “அப்பொழுது தாண்முதல் பெயெர்செபாமட்டுமுள்ள இஸ்ரவேல் புத்திரர் அனைவரும் கீலேயாத் தேசத்தாருடன் மிஸ்பாவிலே கர்த்தருக்கு முன்பாக ஏகோபித்து சபையாகக் கூடினார்கள்” (வசனம் 1). நியாயாதிபதிகள் காலத்தில் இதுவரை இல்லாத ஒன்று இப்பொழுது நிகழ்ந்தது. தாண் முதல் பெயர்செபா (காஷ்மீர் முதல் கன்னியாகுமாரி வரை என்று சொல்லப்படுவது போல) வரையிலான மக்கள் அனைவரும் அதாவது கோத்திரங்களின் அதிபதிகள், தலைவர்கள், மற்றும் சண்டை செய்யக்கூடிய போர்வீரர்கள் ஆகிய…