ஓர் அற்பமான ஆரம்பம்
2023 யூலை 4 (வேத பகுதி: 1 சாமுவேல் 1,1) “எப்பிராயீம் மலைத்தேசத்திலிருக்கிற சோப்பீம் என்னப்பட்ட ராமதாயீம் ஊரானாகிய ஒரு மனுஷன் இருந்தான்; அவனுக்கு எல்க்கானா என்று பேர்” (வசனம் 1). இப்பொழுது நாம் சாமுவேலின் முதலாம் புத்தகத்துக்கு வந்திருக்கிறோம். ஆயினும் நியாயதிபதிகளின் காலம் இன்னமும் முடிவு பெறவில்லை. இராஜாக்களின் காலம் தொடங்குவதற்கு முன் நடைபெற்ற நிகழ்வுகளோடு இந்தப் புத்தகம் தொடங்குகிறது. இந்த நூல் எல்க்கானா என்னும் மனிதனைப் பற்றிய விவரங்களோடு ஒரு புதிய யுகத்துக்குள் பிரவேசிக்கிறது.…