துன்பங்களின் எல்லையும் நன்மையும்!

துயரங்களின் காரணங்களைத்தேடி

கவலைப் பாயில் முடிங்குவதோ?

உலகில் ஏதாவது பெற்றுள்ளதில்

ஒரு பாக்கியம் மட்டுமே உண்டு.

எல்லாவற்றையும் ஒருநாள்

விட்டுச் செல்ல வேண்டும்.

தனியாக… ஒரு நீண்ட பயணத்துக்கு.

தேவன்

துன்பக் கடப்பாரைகளால்

ஆன்மீகச் சுரங்கங்களை

என் வாழ்வில் தோண்ட அனுமதிப்பாராயின்

நான் எதற்காக அழவேண்டும்?

எல்லாம் அவரது கட்டுப்பாட்டுக்குள்தானே

எந்த எல்லைதான் மீறும்?

சாகாத சாதனை வாழ்வு!

இறக்கைகள் இருந்தால்

போர்த்திக் கொண்டிராதே

பறந்துகாட்டு…!

வெளிச்சமிருந்தால்

மரக்காலில் புதைந்திராதே

வெளியே கதிர்வீசு…!

இதுவே

உயிருள்ள விசுவாச வாழ்வு…!

சிக்கல்களுக்கு தேவ பதில்

சிக்கல்களுக்குள் சிக்கி விட்டீர்களா?

பதில் தேடுங்கள்.

இரண்டு பதில்களை வைத்துள்ளீர்களா?

இரண்டும் பயனில்லை என்கிறீர்களா?

வேறு பதில் இல்லை என்கிறீர்களா?

வாருங்கள் தேவ ஞானத்திடம்

அங்கே மூன்றாவது ஒரு பதில் இருக்கும்

அதில் அனைத்துக்கும் தீர்வும் இருக்கும்.

நன்றி: சொல்லோவிய வேதாகமம்