May

மே 31

மே 31 துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும், கர்த்தருடைய வேதத்தில்……. தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான் (சங்.1:1-2). பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன் என்று (3.யோ.2) யோவான் தன் நிருபத்தை வாசிக்கிறவர்களுக்கென ஜெபிப்பதைக் காணலாம். இப்படியான அன்பும் நறுமணமும், நிறைவுள்ள கனிகளை எங்கே பெறலாம்? நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்ட மரத்திற்கொப்பான இருதயத்தில், துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாதபடி மனுஷரிடத்தில் பெறலாம். இதையே எரேமியா 17:5-6…

May

மே 30

மே 30 …. கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் பாக்கியவான்கள்… அவர்கள் தங்கள் பிரயாசங்களை விட்டொழிந்து இளைப்பாறுவார்கள். அவர்களுடைய கிரியைகள் அவர்களோடே கூடப்போம் (வெளி 14:13). மரணத்தைக் குறித்து அஞ்சுகிறீர்களா? மரணத்திற்கு அஞ்சுவது மக்களின் சுபாவ குணமாயிற்றே. அதிலிருந்து நாம் மெய்யான விடுதலையடைந்திருக்கவேண்டும். ஏனெனில், ஒரே தரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது (எபி.9:27) என வேதம் கூறுகிறது. இரட்சிக்கப்படாதவர்களுக்கும் கிறிஸ்துவின்மூலம் வெளிப்பட்ட தேவனுடைய கிருபைக்குத் தூரமானவர்களுக்கும் மரணம் நம்பிக்கையின்மையையும் பயத்தையும் கொண்டுவரும். மனிதன் தான் சம்பாதித்த எல்லாவற்றையும்…

May

மே 29

மே 29 உம்மிலே பெலன் கொள்ளுகிற மனுஷனும்… பாக்கியவான்கள் (சங்.84:5). ஆண்டவர் இயேசு கிறிஸ்துதான் நமது பெலன். இதையே பவுல், தேவன் நமக்குப் பலமும் அன்பும் உள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார் என 2.தீமோ.1:7ல் கூறுகிறார். தொடர்ந்து அவர், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக் குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மை பாராட்டுவேன். அந்தப்படி நான் பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன் (2.கொரி.12:9-10) எனக் கூறியுள்ளார். நான் பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன். இதுதான் தேவனிடமிருந்து கிடைக்கும் பலத்தின் ஆசீர்வாதம். கர்த்தர்…

May

மே 28

மே 28 …… ஆண்டவரே, என்னை இரட்சியும் (மத்.14:30). கிறிஸ்தவ வாழ்க்கையில் துக்கம், சோர்வு, துன்பம் இக்கட்டு, அபாயம், அசதி போன்றவை குறுக்கிடும் வேளைகளில் அதிகம் வரும். உதவி செய்ய யாருமில்லையே என ஏங்கி, கவலைகளையெல்லாம் கூறி கட்டிப்பிடித்து அழுவதற்கு யாருமில்லை எனக் கதறும் வேளைகள் பல உண்டு. சுருக்கமான ஜெபங்கட்கு பெருக்கமான பதில் கிடைத்ததை வேதத்தில் பல இடங்களில் காண்கிறோம். உதவியற்ற நிலையில் பேதுரு, ஆண்டவரே, என்னை இரட்சியும் எனக் கதறினான். புயல் அலைக்கழித்தாலும் அவன்…

May

மே 27

மே 27 நீ வெட்கப்படாத ஊழியக்காரனாயும் சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவனாயும் உன்னை தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படிக்கு ஜாக்கிரதையாயிரு (2.தீமோ.2:15). ஒரு தரமுள்ள சிறந்த கட்டுரையை எழுதிவிட்டால் அதைப்பற்றி பெருமைகொள்வது இயல்பு. இது தவறல்ல. தன்னால் முடியாத ஒரு சிறந்த காரியத்தைச் செய்து முடித்துவிட்டதாக அதை எழுதியவனுக்கு ஒரு நிறைவு ஏற்படுவதுண்டு. ஒரு கலைஞன் அல்லது வேலையாள் தன் வேலையில் கண்ணும் கருத்துமாக இருப்பதைப்போன்று நாமும் நமது வேதத்தைக் கருத்துடன் படிக்கவேண்டும். வேதாகமத்திலுள்ள சத்தியத்தையும்,…

May

மே 26

மே 26 கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான் (சங்.128:1). குடும்ப வாழ்க்கை குதூகலமாயும் இருக்கலாம் அல்லது குழப்பமாயும் இருக்கலாம். சிலருக்கு அது பரலோகமாயும், வேறு சிலருக்கு அது நரகமாயும் இருக்கும். சங்கீதம் 128, தேவன் விரும்பும் ஒரு குடும்பம் எவ்வாறு இருக்க வேண்டும் எனக்கூறுகிறது. பாக்கியம் பெற்ற தாயாரையும், தகப்பனையும், பிள்ளைகளையும் பற்றி அது கூறுகிறது. குடும்ப வாழ்வைக் கெடுக்கும் அபாயங்கள் பல உள்ளன. ஏனெனில் அங்கு பிள்ளைகளுக்கென எதையும் செய்ய…

May

மே 25

மே 25 கர்த்தருடைய தூதன் பிலிப்பை நோக்கி: நீ எழுந்து, எருசலேமிலிருந்து காசா பட்டணத்துக்குப் போகிற வனாந்தர மார்க்கமாய்ப் போ என்றான் (அப்.8.26). சில வேளைகளில் தேவன் நம்மை வழிநடத்துவது நமக்கும், பிறருக்கும் புரியாத பதிராக இருக்கும். ஆனால் கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்போர், எங்கும் செல்ல ஆயத்தமாக இருப்பர். பிலிப்புவிற்கு இவ்விதமாகச் செல்லவேண்டிய ஒரு வாய்ப்புக் கிட்டிற்று. அவன் சமாரியாவில் எழுப்புதல் தீயைத் தூண்டிவிட்டு, தேவனால் வல்லமையாகப் பயன்படுத்தப்பட்டு வந்தான். அவன் தேவனால் காசாவின் சாலைக்குச்…

May

மே 24

மே 24 …… பரிபூரணமடையவும்…. போதிக்கப்பட்டேன் (பிலி.4:12). இல்வாழ்விற்குத் தேவையான யாவற்றையும் சிலர் பெற்று அனுபவிக்கின்றனர். ஆனால் நாமமோ அவர்களுக்குச் செல்வம், புகழ், பக்தி, பதவி, நண்பர்கள், குடும்பம், அன்பு, அந்தஸ்து யாவும் உள்ளன என்று தவறாக எடைபோட்டு விடுகிறோம். இதேபோன்று தாவீது, அவர்கள் இருதயம் விரும்புவதிலும் அதிகமாய் நடந்தேறுகிறது (சங்.73:7) எனக் கூறியுள்ளார். ஆனால் தேவனை நம்பும் ஆத்துமா இருப்பதைக்கொண்டு சிறப்புடன் திருப்தியுடன் வாழும். சிட்சையில் மகிழுகிற இருதயதம் தாழ்மையும், ஆவியில் இனிமையும், குழப்பமான வேளையில்…

May

மே 23

மே 23 …. ஏன் இப்படிப் பயப்பட்டீர்கள் (மாற்.4:40). வாழ்வில் புயல் வீசுவது இயல்பு. ஏன் இந்தப் புயல்? என மனிதர்களாகிய நாம் கேட்பது சகஜம். தேவன் எனக்கென தெளிவாக வெளிப்படுத்தின சித்தத்திற்குக் கீழ்ப்படியவில்லையா? அல்லது அவரது எச்சரிப்புக்குச் செவிகொடுக்கவில்லையா? என் சுய சித்தத்தினால் அல்லது சுயநலத்தால்தான் நான் இந்தக் கஷ்டத்திற்குள் வந்துவிட்டேனோ? யோனா தேவ அழைப்பைத் தெளிவாக உணர்ந்து, மனமறிய அதை மீறினான். ஆகவே அவன் பயங்கரப் புயலைச் சந்திக்க நேர்ந்தது. நானும் அப்படித்தான் இருக்கிறேனா?…

May

மே 22

மே 22 சமாதானம்பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள் (மத்.5:9). சமாதானம்பண்ணுகிறவர்கள் தங்களுக்குத் தீங்கு செய்கிறவர்களைப்பற்றி கவலைப்படார். தீமைகளைக் கடந்து செல்வர். அதிகமாக அடிக்கப்பட்டாலும் அமைதியுடனிருப்பர். ஏனெனில், தாம் சமாதானம்பண்ண விரும்புவதை அறிகிறவர் ஒருவர் உண்டென அறிந்து அயலாரோடு சமாதானத்துடன் இருப்பர். சமாதானம் பண்ணுகிறவர்கள், ஆண்டவரின் ஆலோசனையின்படி செய்கிறவர்கள். ஏனெனில் அவர், உன் சகோதரன் உனக்கு விரோதமாகக் குற்றஞ்செய்தால், அவனிடத்தில் போய், நீயும் அவனும் தனித்திருக்கையில் அவன் குற்றத்தை அவனுக்கு உணர்த்து. அவன் உனக்குச் செவிகொடுத்தால்,…