August

ஓகஸ்ட் 5

ஓகஸ்ட் 5 தேவனே நியாயாதிபதி. ஒருவனைத் தாழ்த்தி, ஒருவனை உயர்த்துகிறார் (சங்.75:7). ஜாதிகள் கொந்தளித்து, ஜனங்கள் விருதாக் காரியத்தைச் சிந்திப்பானேன்? என்று கேட்ட சங்கீதக்காரன் பதிலையும் கண்டுகொண்டு, கர்த்தருக்கு விரோதமாகவும், அவர் அபிஷேகம் பண்ணினவருக்கு விரோதமாகவும், பூமியில் ராஜா க்கள் எழும்பி நின்று, அதிகாரிகள் ஏகமாய் ஆலோசனைபண்ணினர் (சங்.2:1-2) என்று கூறியுள்ளான். உன்னதமானவருடைய ஆளுகையைக் குறித்து அவர்கள் அறியவில்லை. இதையே சங்கீதம் 103:19 கர்த்தர் வானங்களில் தமது சிங்காசனத்தை ஸ்தாபிக்கிறார். அவருடைய ராஜரீகம் சர்வத்தையும் ஆளுகிறது எனக்…

August

ஓகஸ்ட் 4

ஓகஸ்ட் 4 ஜாதிகள் கொந்தளித்து,…. கர்த்தருக்கு விரோதமாகவும், அவர் அபிஷேகம்பண்ணினவருக்கு விரோதமாகவும்… எழும்பி(னர்) (சங்.2:1-2). ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பிறக்கும் முன்பே பகைக்கப்பட்டார். சிருஷ்டி கர்த்தர் ஏதேன் தோட்டத்தில் சர்ப்பத்திற்கும், ஸ்தீரியின் வித்திற்கும் பகையை உண்டாக்கி வைத்தாரல்லவா? (ஆதி.3:15). அவர் இவ்வுலகில் இருந்த காலத்திலும் அதிகமாக வெறுத்துத் தள்ளப்பட்டார். ஏரோது இராஜா தன் கொடிய சேவகரை அனுப்பி, பெத்லகேமின் சுற்றுப்புறத்திலுள்ள ஆண் குழந்தைகள் அனைவரையும் கொல்லும்படி கட்டளையிட்டு நிறைவேற்றினான். ஆனால் இம்மானுவேல் என்றென்றும் நம்மோடிருக்கும்படி தப்பினாரல்லவா! அவரை…

August

ஓகஸ்ட் 3

ஓகஸ்ட் 3 சப்பாணிகளும் கொள்ளையாடுவார்கள் (ஏசா.33:23). உடலில் குறைபாடுள்ள ஒரு சிலர்தான், சதா அதையே நினைத்து கவலைப்பட்டு, வேதனையில் ஆழ்ந்துவிடுகின்றனர். இதனால் மனச்சோர்வும், பயமும் வளர்ந்து அவர்களுடைய வாழ்வைக் கசப்பு நிறைந்ததாக மாற்றிவிடுகிறது. வாழ்வில் விரக்தியும், சோர்வும் கண்ட இவர்களுக்கு உன்னதமான தேவன் ஊக்கமாகக் கூறுகிறார். தளர்ந்த கைகளைத் திடப்படுத்தி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்துங்கள். மனம் பதறுகிறவர்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள். இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார். அவர்…

August

ஓகஸ்ட் 2

ஓகஸ்ட் 2 ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள். பரலோகராஜ்யம் அவர்களுடையது (மத்.5:3). ஆவியில் எளிமையுள்ள மக்கள் அனைவராலும் விரும்பப்படுவர். பொறாமையுள்ளவர்களைக் கண்டு மக்கள் பயப்படுவார்கள். வெறுப்பார்கள். இயேசு கூறுகிறார்: நீ (விருந்துக்கு) அழைக்கப்பட்டிருக்கும்போது, போய்த் தாழ்ந்த இடத்தில் உட்காரு. அப்பொழுது உன்னை அழைத்தவன் வந்து: சிநேகிதனே, உயர்ந்த இடத்தில் வாரும் என்று சொல்லும்போது, உன்னுடனேகூடப் பந்தியிருக்கிறவர்களுக்கு முன்பாக உனக்கு; கனமுண்டாகும் (லூக்.14:10). தங்களை உயர்வாக நினைத்து, பெருமையாக நடந்து கொண்டவர்கள் தங்கள் மதிப்பை இழந்து மற்றவர்கள் முன்பு தாழ்த்தப்படும்போது,…

August

ஓகஸ்ட் 1

ஓகஸ்ட் 1 அந்தப்படியே ஸ்திரீகளும்…. எல்லாவற்றிலேயும் உண்மையுள்ளவர்களுமாயிருக்கவேண்டும் (1.தீமோ.3:11). இந்த வசனத்தையுடைய அதிகாரத்தைச் சபைகளில் தேர்தல் நடத்தும் வருடாந்தரக் கூட்டங்களின்போதும், அடிக்கடி கிறிஸ்தவக் குடும்பங்களிலும் வாசிக்கவேண்டும். சபையில் ஒரு பொறுப்பான, நம்பிக்கைக்குரிய இடத்தை மூப்ப னாகவோ, கண்காணியாகவோ பெறுவதும் குடும்பத்தில் கணவனுக்கு மனைவியாக இருப்பது ஒப்பிட்டுக் கூறத்தக்கப் பொறுப்பான பதவிகளாகும். அவனது தகுதிகளையெல்லாம் மனதில் தீர்மானித்ததினால் அவன் அவளைத் தனக்கு மனைவியாகத் தெரிந்துகொண்டான். ஒரு கணவன் தன் கடமையில் வெற்றி பெறுவதற்கும், தோல்வியடைவதற்கும் காரணமாக இருப்பவள் அவனது…