January

ஐனவரி 31

நீ பயப்படாதே, இதோ, நான் உன்னைத் தூரத்திலும்… இரட்சிப்பேன் (எரேமி.30:10). தேவன் நம்மைக் கடிந்துரைப்பது அவர் நமக்குக் கூறும் கடைசி எச்சரிப்பு அல்ல. தொடர்ந்து விக்கிரகாராதனையிலும், பாவத்திலும் வாழ்ந்து வந்த யூதர் இராஜ்யம் கல்தேயரரிடம் சிறைப்பட்டுப் போயிற்று. தேவன் பரிசுத்தராக இருப்பதினால் பாவத்திற்குத் தண்டனையளிக்கிறார். நியாயத்தீர்ப்பினால்தான் பாவி பக்குவப்படுத்தப்படுகிறான். சங்கீதக்காரன் தன் வேதனையில் கர்த்தாவே நீர் அக்கிரமங்களைக் கவனித்திருப்பீரானால், யார் நிலைநிற்பான், ஆண்டவரே உமக்குப் பயப்படும்படிக்கு உம்மிடத்தில் மன்னிப்பு உண்டு எனக் கதறுகிறான் (சங்.130:3-4). தவறுகளுக்கு மன்னிப்பு…

January

ஐனவரி 30

பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது (எபி.10:36) நமக்கு ஏற்படும் மனத்தளர்ச்சிகள் யாவும் தேவனுடையசித்தத்தின்படியே ஏற்படுகிறது. நம்முடைய ஜெபத்திற்குத் தேவனிடமிருந்து பதில் வரதாமதமானால் அதற்கு அவர் கொடுக்கமாட்டார் என்பது பொருளல்ல. கேட்கிற யாவற்றையும்பெறுவோம் என நாம் விசுவாசிப்பதில்லையே. தாமதத்தினால் நம்முடைய நம்பிக்கைகுறைந்துவிடும். தேவனுக்கென ஊழியம் செய்யும் ஆத்துமாவிற்கான பயிற்சி இதுதான்.ஓய்வில்லாத, அவசரமான காலம் இது. நமக்கு ஆயத்தம் செய்ய, நாம் உற்சாகத்துடன்,ஊக்கத்துடன், ஆர்வத்துடன், வலிமையுடன் இருப்பதாக உணருகிறோம். ஆனால் நமக்கு ஏற்படும்சோர்வு, பலவீனம், அசதி, பயனற்ற நிலை இவற்றிற்கு அடிப்படைக்…

January

ஐனவரி 29

அவன் அதரிசனமானவரைத் தரிசிக்கிறதுபோல உறுதியாயிருந்தான் (எபி.11:27). எதிர்ப்புகள் பல வந்தபோதிலும் பக்தியுள்ளஆவியைக் காத்துக்கொள்வதுதான் பொறுமைக்குரிய வழி. சாத்தானின் எதிர்ப்பு, மக்களின்குற்றச்சாட்டு, மனப்போராட்டம் இவற்றின் நடுவே தேவனுடைய மீட்பின் கரத்தை உணரலாம். இதுவேபொறுமையாகும். தன் சகோதரர்கள் தன்னை அடையாளம்கண்டுகொள்ளவதற்கென மோசே பொறுமையுடன் நாற்பது ஆண்டுகளை வனாந்தரத்தில் கழிக்கவேண்டியதாயிற்று. அவன் தேவனுடைய வாக்கைச் சார்ந்திருந்தான். அவர் அவனை எகிப்திற்குத்திரும்பும்படி கட்டளையிட்டார். அப்பொழுது, நான் உன்னோடே இருப்பேன் (யாத்.3:12)என்கிற வாக்கு அவனுக்குத் துணிவைக் கொடுத்தது. அவரது பிரசன்னம் அவனோடு இருந்ததினால்தான் பார்வோன்,…

January

ஐனவரி 28

நீங்கள் எனக்குக் கடினமுகம் காண்பிக்கிறதினால் உங்களுக்கு வெட்கமில்லை (யோபு 19:3). யோபு தன் நண்பர்களிடம் இப்படியாக ஒரு கேள்வி கேட்டிருக்கக்கூடும். அவனது நண்பர்கள் அவனைப் பத்து தரம் நிந்தித்தனர். இதற்காக அவர்கள் வெட்கப்படவேண்டாமா? பலவீனமுள்ளவனைக் கொடுமைப்படுத்துகிற பலவான் வெட்கப்பட வேண்டாமோ? யோபுவுக்கு ஆறுதல் கூற வந்தவர்கள் இதற்காக வெட்கப்படவில்லை. வியாதியுள்ள நண்பனைக் காட்டிலும் தாங்கள் அறிவில் உயர்ந்தவர்கள் என்கிற நினைப்பு அவர்களுக்கு உண்டு. துன்பத்தினால் வாடும் அவனுக்கு ஆறுதல் கூறுவதற்குப் பதிலாக அவர்கள் கேலிபண்ண அழைக்கிறார்கள். சுகமும்…

January

ஐனவரி 27

நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன் (ஏசா.41:10). மனித வாழ்வில் அதிகமான கேடுகளையும், நாசத்தையும்ஏற்படுத்துவது பயம் அல்லது அச்சம் எனலாம். ஒவ்வொரு மனிதனுடைய வாழ்விலும் இவ்வகையானபயம் அல்லது அச்சம் ஏற்படுவது உண்டு. இவை நம் உடல் நிலை, மனநிலை இவற்றைச் சார்ந்தும்ஏற்படலாம். பொருளாதார, சமுதாய நிலமைகளை ஒட்டியும் ஏற்படலாம். பொருளாதார, சமுதாயநிலமைகளை ஒட்டியும் ஏற்படலாம். கடந்த காலத்தில் நடந்ததைப்பற்றியும், வருங்காலத்தில்நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகளைக் குறித்தும் நாம் சிந்திக்கும்போது நமக்கு பயம்தோன்றலாம். தனிமையில் ஏற்பட்ட கவலைகளும், விசாரங்களும் பயத்தை ஏற்படுத்துகின்றன.…

January

ஐனவரி 26

உமது உண்மை பெரிதாயிருக்கிறது (புல.3:28). வேதாகமத்திலேயே மிகுந்த துக்கம் நிறைந்தபகுதியென எரேமியாவின் புலம்பலைக் கூறலாம். அதிலும்கூட சர்வ வல்லவர் அருளிய இனிமையான,வலியுறுத்தி;கூறும் வெளிப்பாடுகள் பல காணப்படுகின்றன. ஓர் ஆத்துமாவைத் தேவனில்நிலைநிறுத்துவதற்குத் துன்பத்தைப்போன்ற சிறந்த சாதனம் ஏதுமில்லை. மனிதனுடையநம்பிக்கை அழிந்து போயினும் (வச.18), அவனுடைய வீழ்ச்சிகளும் தவறுகளும் நினைவுகூரப்படும்வேளைகளில் நாம் நிர்மூல மாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே. அவருடைய இரக்கங்களுக்குமுடிவில்லை (வச.22) என்பதை நாம் தெரிந்துகொள்ளலாம். சூரிய ஒளி மறையும்வரையில் வானில்நட்சத்திரங்களை நம்மால் காணமுடிவதில்லை. அதேபோன்று மனிதன் தன் சுயபலத்தினையும்,நம்பிக்கையையும்…

January

ஐனவரி 25

நான் உம்முடைய கற்பனைகளையெல்லாம் கண்ணோக்கும்போது, வெட்கப்பட்டுப் போவதில்லை (சங்.119:6) தேவனுடைய வார்த்தை உன்னைப் பாவத்தினின்றுவிலக்கும் அல்லது பாவம் உன்னை இந்தத் தேவனுடைய வார்த்தையிலிருந்து விலக்கும் என்றுபில்லி சண்டே என்பவர் தன் நண்பருடைய வேதாகமத்தின் முன் பக்கத்தில் எழுதிக்கொடுத்தார்.இதில் அவர் வேதாகமத்தைப்பற்றிய தெளிவான பவித்திரமான ஓர் உண்மையைவெளிப்படுத்தியுள்ளார். தேவனுடைய வார்த்தையை நம்புவதற்கு நாம்எப்பொழுதாகிலும் வெட்கப்பட்டதுண்டா? பத்துக் கட்டளைகளைப் பின் பற்றுவதற்கும் இயேசுவின்போதனைகளைக் கைக்கொண்டு, ஆவியில் எளிமையுள்ளவர்களாகவும், இருதயத்தில்சுத்தமுள்ளவர்களாகவும், சமாதானம் பண்ணுகிறவர்களாகவும் வாழ வெட்கமா? அவருடையநாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள்…

January

ஐனவரி 24

அவனுக்குப் பயப்படவேண்டாம். அவனையும் அவன் ஜனங்கள் எல்லாரையும் அவன் தேசத்தையும் உன் கையில் ஒப்புக்கொடுத்தேன் (எண்.21:34). உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும்,பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறது எனக் கூறுகிறது வேதம். அதிகமானஉபத்திரவத்தினால்தான் பொறுமையை நாம் பெறமுடிகிறது. பொறுமை அதிகரிக்க பரீட்சை இனிமையாகிறது.அப்பொழுதுதான் தேவன் கடந்த காலத்தில் நமக்குச் செய்த உதவிகளைக் காட்டிலும் இன்னும்மிக அதிகமான உதவுவார் என்ற நிச்சயமும், நம்பிக்கையும் ஏற்படும். எமோரியரின் அரசனாகிய சீகோன், பாசானின்அரசனாகிய ஓகையும் பற்றி நாம் வேதத்தில் படிக்கிறோம். அவர்களின் படைகளைக் கண்டாலேகுலைநடுங்கும்.…

January

ஐனவரி 23

அங்கே உன்னைப் போஷிக்க காகங்களுக்குக் கட்டளையிடுவேன் என்றார். (1.இராஜா.17:4). நம் ஒவ்வொருவருடைய வாழ்விலும் தேவனுடையசித்தத்தின்படியே அங்கே என்று கூறும்படியான இடம் ஒன்றுள்ளது. எலியாவின் வாழ்க்கையில்அங்கே என்ற பதம் மூன்று முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தீர்க்கதரிசி தன்வெளியரங்கமான ஊழியத்தை விட்டுவிட்டு தனித்திருக்கும்படி ஓரிடத்திற்குப் போகும்படிகட்டளை பெற்றான். அங்கே அவனுக்குத் தேவையானதைக் கொடுக்க காகங்கள் இருந்தன. சில காலம் ஒளிந்திருக்கும்படியான கேரீத் அனுபவம்தேவனுடைய பிள்ளைகளுக்குப் புதுமையானதல்ல. மோசே நாற்பது வருடம் வனாந்தரத்தில் இருந்தான்.பவுல் மூன்றாண்டுகள் அரேபியாவில் இருந்தான். இயேசு கிறிஸ்துவும்…

January

ஐனவரி 22

ராஜா குலமகனுமாய், பிரபுக்கள் வெறிக்க உண்ணாமல் பெலன்கொள்ள ஏற்ற வேளையில் உண்கிறவர்களுமாயிருக்கப்பட்ட தேசமே, நீ பாக்கியமுள்ளது (பிர.10:17). தன்னலமின்மை, பிறருக்கு உதவுதல், பிறருக்கென விட்டுக்கொடுத்தல், தேவனுடைய இராஜ்யத்திற்கென உதவுதல் போன்றவற்றில் மெய்யான சந்தோஷத்தைக் கண்டுகொண்டோர் பலர். நல்ல வேலை, நல்ல முதலாளி, கைநிறைய சம்பளம், நிலையான உத்தியோகம் போன்றவை மகிழ்ச்சி தரும் என்போர் பலர். மனுக்குலத்தின் தோற்றம் முதற்கொண்டு இப்படிப்பட்ட இருதரப்பட்ட மக்களை நாம் கண்டு வருகிறோம். குழப்பமும், கொடுமையும் நிறைந்த இந்த இருபதாம் நூற்றாண்டிலும் இப்படிப்பட்ட…