January

ஐனவரி 23

அங்கே உன்னைப் போஷிக்க காகங்களுக்குக் கட்டளையிடுவேன் என்றார். (1.இராஜா.17:4).

நம் ஒவ்வொருவருடைய வாழ்விலும் தேவனுடையசித்தத்தின்படியே அங்கே என்று கூறும்படியான இடம் ஒன்றுள்ளது. எலியாவின் வாழ்க்கையில்அங்கே என்ற பதம் மூன்று முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தீர்க்கதரிசி தன்வெளியரங்கமான ஊழியத்தை விட்டுவிட்டு தனித்திருக்கும்படி ஓரிடத்திற்குப் போகும்படிகட்டளை பெற்றான். அங்கே அவனுக்குத் தேவையானதைக் கொடுக்க காகங்கள் இருந்தன.

சில காலம் ஒளிந்திருக்கும்படியான கேரீத் அனுபவம்தேவனுடைய பிள்ளைகளுக்குப் புதுமையானதல்ல. மோசே நாற்பது வருடம் வனாந்தரத்தில் இருந்தான்.பவுல் மூன்றாண்டுகள் அரேபியாவில் இருந்தான். இயேசு கிறிஸ்துவும் வனாந்தரத்தில்நாற்பதுநாட்கள் தனித்திருந்தார். தேவன் தம்முடைய பிள்ளைகளுக்கு வெளியரங்கமானஊழியத்தோடு அந்தரங்கமான ஊழியத்தையும் வைத்துள்ளார். அவர் எப்பொழுதும் உயர்த்துவறதற்குமுன் தாழ்த்துகிறார்.

நாம் எங்கோ ஒரு மறைவான இடத்தில் இருந்தாலும்தேவனால் மறக்கப்படுவதில்லை. அங்கே அரவது சித்தத்தின் மையத்தில் நாம் இருக்கும்வரைநமக்குத் தேவையான ஆவிக்குரிய பொருளாதார உதவிகளை அளிக்கிறார். அங்கே நாம் அவரதுகிருபை போதுமென்று உணருகிறோம்.

தேவன் காட்டும் இடத்தில் நாம்மறைந்திருக்கும்போது அங்கே அவருடைய காகங்கள் நம்மைக் கண்டுபிடித்துவிடும்.

எலியாவால் முன்னுரைக்கப்பட்ட பஞ்சம்நீடித்தபோது அந்தத் தீர்க்கதரிசி அவனுக்கென நியமிக்கப்பட்ட இடத்தில்மேலிடத்திலிருந்து மறுஉத்தரவு கிடைக்கும்வரை தங்கியிருந்தான். உன்னைப் பராமரிக்கும்படிஅங்கே இருக்கிற ஒரு விதவைக்குக் கட்டளையிட்டேன் (1.இராஜா.17:9). ராஜாவின்அரண்மனைக்கல்ல, வெளியரங்கமான ஊழியம் செய்வதற்கல்ல. புற மதத்தினரின் ஊருக்கு,பசியால் வாடும் ஓர் ஏழை விதவையிடத்திற்கு அவன் அனுப்பப்பட்டான். தேவன் ஒருவரே தாம்செய்யும் காரியங்களைப்பற்றி அறிவார். கீழ்ப்படிந்த அந்தத் தீர்க்கதரிசி, எழுந்துசாறிபாத்துக்குப் போனான்.

உண்மையள்ள தேவனால் நடத்தப்படும்போது, அவருடையசித்தத்தின் மையத்தில் நம்மை நாம் வைக்கும்போது, நேர்த்தியான இடங்களில்அமர்த்தப்பட்டு மகிழ்ச்சியடைவோம் என்பதில் ஐயமில்லை.