June

யூன் 30

யூன் 30 என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? (சங்.42:5). மார்ட்டின் லூத்தரின் மகன் ஒருநாள் காலையில் துக்க ஆடையுடன் சாப்பிட வந்தாராம். உடனே அங்கிருந்த சீர்த்திருத்தவாதி, எதற்காக இந்த உடை? எனக் கேட்டாராம். தேவன் இறந்துவிட்டார் என்ற பதில் கிடைத்தது. உடனே அவர், அதாவது நீ அவரைத் தள்ளிவிட்டிருக்க வேண்டும் அல்லது உன் ஆழ்ந்த துக்கம் அவரை இந்த நிலைக்குத் தள்ளியிருக்கும் என்றாராம். ஆம், தேவன் இறந்துவிடுகிறவரல்ல. அவர் அப்படி இறந்துபோயிருந்தால் காலமெல்லாம் நாம் ஆறுதலின்றி,…

June

யூன் 29

யூன் 29 … நீ பத்து அப்பங்களையும், பணியாரங்களையும், ஒரு கலசம் தேனையும் எடுத்துக்கொண்டு….. போ…. (1.இராஜா.14:3). யெரொபெயாம் தன் மகனின் வியாதி அதிகரித்த வேளையில் ஏன் தேவனுடைய ஊழியரிடத்து விசாரிக்க ஆள் அனுப்பினான்? இஸ்ரவேலின் இராஜாவுக்கென சொந்த தெய்வங்களும், பூசாரிகளும் இருந்தனர். அப்படியிருந்தும் இந்த இக்கட்டான வேளையில், துக்கம் பெருகியபோது அவன் ஏன் அவர்களை நம்பவில்லை! அவிசுவாசிகள், சில நேரங்களில், கிறிஸ்தவ விசுவாசத்தை அவமதித்தபோதிலும் தங்களுக்கு இக்கட்டான நிலை வரும்போது பரிசுத்தவான்களின் உதவியை நாடுகிறார்கள். அநேக…

June

யூன் 28

யூன் 28 ஆனாலும் உமது அடியான் இங்கும் அங்கும் அலுவலாயிருக்கும்போது, அவன் போய்விட்டான் (1.இராஜா.20:40). நம் கடமையினின்று தவறச் செய்வதற்கென பல அபாயங்கள் ஏற்படுகின்றன. ஆகவே நாம் நமது சொந்த வல்லமையைக் கொண்டு நினைத்ததைச் செய்து முடிப்போம் என்று நம்பிக்கை கொள்வது நல்லதல்ல. நமது இன்றைய தியான வசனத்திலுள்ளதுபோல நாம் நமது கவலையீனத்தால் கடமையினின்று தவறிவிடுவோம். அந்த வேலைக்காரனுக்கு இராணுவ சட்டதிட்டங்களும், அதை மீறுவதினால் கிடைக்கும் தண்டனைகளும் நன்கு தெரியும். இருப்பினும் அவன் கவலையீனமாய் இருந்தான். இதேபோன்றுதான்,…

June

யூன் 27

யூன் 27 …. வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே (எபி.10:23). உங்களுக்கு அறிமுகமில்லாத ஒருவர் கொண்டுவரும் தவறான காசோலைக்குப் பணம் கொடுப்பீர்களா? என்று நான் ஒரு வங்கியின் மனேஜரிடம் கேட்டேன். உடனே அவர் கொடுக்கவேமாட்டேன் என்று பதிலுரைத்த அவர், நான் காசோலையைப்பற்றிக் கவலைப்படாமல் கொடுத்த ஆளைத்தான் முதலில் பார்ப்பேன். அவர் நம்பிக்கைக்குரியவராயிரப்பின் அதன் பின்புதான் காசோலையைக் கையில் எடுப்பேன். பணத்தைக் கொடுப்பேன் என்றார். வாக்களித்த வானபரனை நோக்கிப் பார். அப்பொழுது அதற்குரிய மதிப்பைப் பற்றிக் கவலைப்படவே மாட்டாய். இதுவே நம்…

June

யூன் 26

யூன் 26 …. கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள் (எபேசி.5:17). ஒவ்வொருவர் வாழ்விலும் எதிர்பாராத சம்பவங்கள் ஏற்படுவது இயல்பே. ஆயினும் நாம் அவற்றை ஆவிக்குரிய கண்ணோட்டத்துடன் நோக்கவேண்டும். முதலாவது இவை சர்வவல்லவரால் கொடுக்கப்படுகின்றவையா, அல்லது சாத்தானால் வருகின்றவையா என்று நாம் அறிய வேண்டும். கீழ்க்கண்ட வேதபகுதிகள் இதற்கு உதவும் என நம்புகிறேன். இந்தச் சூழ்நிலை எனக்குச் சிலுவையாகக் கொடுக்கப்பட்டதா? லூக்.9:23 அல்லது இது சாத்தானின் கட்டா? லூக். 13:16. இது எனக்கு மாம்சத்தில் கொடுக்கப்பட்ட முள்ளா? 2.கொரி.12:7…

June

யூன் 25

யூன் 25 …. பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது (எபி.10:36). நம்முடைய வாழ்க்கையுடன் ஒப்பிட்டு, நாம் சில பாடங்களைக் கற்றுக்கொள்ளவும், உற்சாகத்துடன் முன்னேறவும், அனுபவப்பட்ட சிலரின் வாழ்க்கைப் பாடங்களை அறிந்துகொள்ள வேண்டியது அவசியமே. தாவீது தெய்வீக ஒழுங்கினை அறிந்துகொண்டவன். ஆடு மேய்க்கும் வாலிபனாக இருந்தபோது, சாமுவேல் அவனை இஸ்ரவேலின் இராஜாவாக அபிஷேகம் செய்தான். வருடங்கள் உருண்டோடின. பெத்லகேமின் கரடுமுரடான மலைப் பகுதிகளிலும், சவுலின் மதிமாற்றத்திற்குப் பயந்து, அதுல்லாம் ஊர் குகைப்பகுதியிலும், பெலிஸ்தியர் மத்தியிலுமாக தன் நாட்களைக் கடத்தினான். இந்தக்…

June

யூன் 24

யூன் 24 ….. யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான். மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை. பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார் (மத்.16:17). சர்வ வல்லமையுள்ள தேவன் வெளிப்படுத்தினபடியால், பேதுரு ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மெய்யான தன்மையினை அறிந்தான். ஆராய்ந்தும், தேடியும், கேள்வி கேட்டும் கண்டு பிடிக்கக்கூடியதல்ல இந்த வெளிப்பாடு. பரலோகத்திலிருக்கிற தேவன் மனிதர்களின் உள்ளத்திலும், ஆத்துமாவிலும் அறியும்படி அருளிச் செய்யும் கிறிஸ்து தான் வெளிப்படுத்தல். பேதுரு பாக்கியவான் என்று இயேசு கிறிஸ்து…

June

யூன் 23

யூன் 23 … நானே உங்கள் தேவனாகிய கர்த்தர்….. என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை (யோவேல் 2:27). மனந்திரும்புதல் என்பதற்கு உயிர்மீட்சியடைதல் அல்லது எழுப்புதலடைதல் என்றும் பொருள் கூறலாம். யோவேல் தீர்க்கதரிசி, நீங்கள் உங்கள் வஸ்திரங்களையல்ல, உங்கள் இருதயங்களைக் கிழித்து, உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் திரும்புங்கள். அவர் இரக்கமும், மன உருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர். அவர் தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமாயிருக்கிறார் (2:13) எனக் கூறியுள்ளார். இப்படிப்பட்ட மனந்திரும்புதலினால் தான் ஒருவன், சர்வ வல்ல தேவன், நான்…

June

யூன் 22

யூன் 22 அவர் ஜனங்களை அனுப்பிவிடுகையில், தம்முடைய சீடர்களின் படவில் ஏறி அக்கரைக்கும் பெத்சாயிதாவுக்கு எதிராக, தமக்கு முன்னே போகும்படி, அவர்களைத் துரிதப்படுத்தினார். (மாற்.6:45). தான் தெரிந்தெடுக்கும் வழியில், தன் சீடர்கள் செல்ல வேண்டும் என்று துரிதப்படுத்தினார். கலிலேயாக் கடலின் மறு கரைக்குப் படவிலேறிச் செல்லும்படி இயேசு ஏன் தன் சீடர்களைக் கட்டாயப்படுத்தினார்? இதற்குப் பல காரணங்கள் உண்டு. சீடர்கள் இப்பொழுதுதான் ஐயாயிரம் பேரைப் போஷிக்க உதவினர். எவ்வித சந்தேகமுமின்றி, அந்தப் பெரிய அற்புதத்தைக் கண்டு ஆச்சயரிப்பட்டனர்.…

June

யூன் 21

யூன் 21 அவருடைய வார்த்தையை விசுவாசியாமல்… முறுமுறுத்தார்கள் (சங்.106:24-25). தரித்திர நிலையில் இருக்கும் சிலரைப்போன்று முறுமுறுக்கவேண்டாம். இஸ்ரவேலர் ஏன் முறுமுறுக்கவேண்டும்? அவர்களைப் பாதுகாக்க ஒவ்வொரு நாளும் மேகஸ்தம்பம் இருந்தது. அக்கினி ஸ்தம்பம் எதிரிகளைத் தடுத்து, இரவில் கூடாரங்களுக்கு ஒளியைக் கொடுத்துக்கொண்டும் இருந்தது. மோசே அவர்களை வழிநடத்தும் தலைவனாக இருந்தான். வானத்து மன்னா ஆகாரமாயும், கன்மலையின் தண்ணீர் பானமாகவும், கிழியாத உடைகளும் அவர்களுக்கு அருளப்பட்டடிருந்தது. இவ்வளவு வசதிகள் இருந்தும் அவர்கள் தங்கள் கூடாரங்களில் முறுமுறுத்தனர்! அவர்கள் அவருடைய வார்த்தையை…