June

யூன் 27

யூன் 27

…. வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே (எபி.10:23).

உங்களுக்கு அறிமுகமில்லாத ஒருவர் கொண்டுவரும் தவறான காசோலைக்குப் பணம் கொடுப்பீர்களா? என்று நான் ஒரு வங்கியின் மனேஜரிடம் கேட்டேன். உடனே அவர் கொடுக்கவேமாட்டேன் என்று பதிலுரைத்த அவர், நான் காசோலையைப்பற்றிக் கவலைப்படாமல் கொடுத்த ஆளைத்தான் முதலில் பார்ப்பேன். அவர் நம்பிக்கைக்குரியவராயிரப்பின் அதன் பின்புதான் காசோலையைக் கையில் எடுப்பேன். பணத்தைக் கொடுப்பேன் என்றார். வாக்களித்த வானபரனை நோக்கிப் பார். அப்பொழுது அதற்குரிய மதிப்பைப் பற்றிக் கவலைப்படவே மாட்டாய். இதுவே நம் விசுவாசத்திற்குத் தேவையான நல்ல பாடம்.

வேதாகமத்திலுள்ள ஆயிரக்கணக்கான வாக்குத்தத்தங்களை கொடுத்தவர் யார்? தேவன் அல்லவா? வேதனைப்பட்ட யோபுவுக்கு ஆறுதல் கூறிய எலிப்பாஸ், நீர் அவரோடு பழகிச் சமாதானமாயிரும். அதினால் உமக்கு நன்மை வரும் என்றான். தேவனைப் பற்றி அறிந்திருக்கிறோம் என்கிறவர்கள் அவர் வாக்குத்தத்தம் பண்ணினதைச் செய்து முடிப்பார் என்றும் அறிந்திருக்கவேண்டும். வேதப் புத்தகம் ஒரு பெரிய மனிதரின் வார்த்தை என்று டேவிட் லிவிங்ஸ்டன் கூறியுள்ளார். தேவனை நன்கு அறிந்த ஆபிரகாம், வேதப் புத்தகம் ஒரு பெரிய மனிதரின் வார்த்தை, அவிசுவாசமாய்ச் சந்தேகப்படாமல், தேவன் வாக்குத்தத்தம்பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறாரென்று முழு நிச்சயமாய் நம்பி, தேவைன மகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவனானான் (ரோ.4:20-21), விசுவாசத்தினாலே சாராளும் வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவரென்றெண்ணி ஈசாக்கைப் பெற்றாள் (எபி.11:11). அவன் எவ்வளவாகிலும் சந்தேகப்படாமல் விசுவாசத்தோடே கேட்கக்கடவன் என்று வலியுறுத்திய வேதம், இருமனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவனாயிருக்கிறான் (யாக்.1:6,8) என்றும் கூறியுள்ளதை மறக்கவேண்டாம்.