June

யூன் 26

யூன் 26

…. கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள் (எபேசி.5:17).

ஒவ்வொருவர் வாழ்விலும் எதிர்பாராத சம்பவங்கள் ஏற்படுவது இயல்பே. ஆயினும் நாம் அவற்றை ஆவிக்குரிய கண்ணோட்டத்துடன் நோக்கவேண்டும். முதலாவது இவை சர்வவல்லவரால் கொடுக்கப்படுகின்றவையா, அல்லது சாத்தானால் வருகின்றவையா என்று நாம் அறிய வேண்டும். கீழ்க்கண்ட வேதபகுதிகள் இதற்கு உதவும் என நம்புகிறேன்.

இந்தச் சூழ்நிலை எனக்குச் சிலுவையாகக் கொடுக்கப்பட்டதா? லூக்.9:23 அல்லது இது சாத்தானின் கட்டா? லூக். 13:16.

இது எனக்கு மாம்சத்தில் கொடுக்கப்பட்ட முள்ளா? 2.கொரி.12:7 அல்லது பொல்லாங்கன் எய்யும் அக்கினி யாத்திரமா? எபேசி.6:16.

இருதயத்தை ஆராய்ந்து அறிகிறாரா? ரோ. 8:27 அல்லது சாத்தான் புடைத்துப் பார்க்கிறானா? லூக்.22:31

என் விசுவாசத்திற்குரிய சோதனையா? 1.பேது.1:7 அல்லது பொய்க்குப் பிதாவானவன் கொடுக்கும் தற்காலிக வெற்றியா? யோ.8:44

தேவ ஆவியானவர் உணர்த்தியதால் நமக்கு இந்த வேதனை ஏற்பட்டா? சங்.32:4 அல்லது சாத்தான் குற்றம் சாட்டுகிறதினால் வந்த வேதனையா? அப்.16:6-7 அல்லது சாத்தான் தடைபண்ணுகிறானா? (1.தெச.2:18)

திறவுண்ட வாசலை முன்னால் வைப்பது ஆண்டவரின் சித்தமா? 1.கொரி.16:19, வெளி 3:8 அல்லது பொய்யின் ஆவி செய்யும் சதியா? 1.இராஜா.22:6,22.

இன்னும் அநேக வசனங்களைக் கூற இயலும். நாம் நன்மை தீமை இன்னதென்று பயிற்சியினால் பகுத்தறிய வேண்டும் (எபி.5:14). அவிக்குரியவற்றை அவிக்குரியவற்றோடு ஒப்பிட்டு, ஆவியினால் பகுத்தறிய வேண்டும் 1.கொரி.2:12,15, 12:10 அகிய இரு வேத பகுதிகளும் ஆவிகளைப் பகுத்தறியும் வரம் ஒன்றுண்டு எனத் தெளிவாகக் கூறுகிறது. இதை 1. யோவான் 4:1 னோடு ஒப்பிட்டுப் பார்க்கவும்.

அவருடைய சித்தத்தை அறிகிற அறிவினாலே அவர் நம்மை நிரப்புவார் என்று நாம் விசுவாசிக்கவேண்டும். (கொலோ.1:9). நாம் நமது வழிகளைக் கர்த்தருக்கு ஒப்புவித்தால் அவர் நமது காரியத்தை வாய்க்கப்பண்ணுவார் (சங்.37:5).