April

ஏப்ரல் 30

ஏப்ரல் 30 பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது (எபி.10:36) நமக்கு வரும் தோல்விகள் தேவனால் நமக்கு அளிக்கப்படுபவைகள்தான். தேவன் தாமதிக்கிறதினால் நமக்குத் தரமாட்டார் என்பது பொருளல்ல என்று நமக்குப் பலர் எடுத்துக் கூறியும் நாம் இதை நம்புகிறோமா? தாமதம் ஏற்படும்போது நம்பிக்கை இழந்துவிடுகிறோம். இது தேவனுடைய பிள்ளைகளுக்கென அளிக்கப்படும் பயிற்சி என உணரவேண்டும். நாம் அவசரமான, சுறுசுறுப்பான ஒரு காலத்தில் வாழ்ந்து வருகிறோம். நாம் உற்சாகத்தோடும், ஊக்கத்தோடும், ஆர்வத்தோடும், மனத்திறமைகளோடும் இருக்கவேண்டும் என விரும்புகிறோம். இப்படிப்பட்ட நமக்கு சோர்வு,…

April

ஏப்ரல் 29

ஏப்ரல் 29 ஆவியின் கனியோ….. விசுவாசம் (கலா.5:22) விசுவாசம், உண்மை ஆகிய இவ்விரு வார்த்தைகளும் ஒன்றுக்கொன்று இணைந்து செல்பவை. இங்கு அப்போஸ்தலன் ஆவியின் கனிகள் எனப் பட்டியல் போட்டு கிறிஸ்தவனின் புதிய வாழ்வைப் படம் பிடித்துக் காட்டுகிறார். அன்பினால் ஆட்கொள்ளப்பட்ட வாழ்வும், சந்தோஷத்தின் ஆவியும் எல்லாப் புத்திக்கும் மேலான சமாதானமும், உபத்திரவத்தில் நீடிய பொறுமையும், கிறிஸ்துவில் இருந்ததைப்போன்ற தயவும், நற்குணமும், உண்மையான விசுவாசமும், இதனோடு கிட்டும் சாந்தமும், இச்சையடக்கமும் நம்மிடம் இருப்பதைப் பரிசுத்தஆவியானவர் எடுத்துக்காட்டுகிறார். விசுவாசத்தை உறுதிப்படுத்துவது…

April

ஏப்ரல் 28

ஏப்ரல் 28 ….. என் ஆவியானவரும் உங்கள் நடுவில் நிலைகொண்டிருப்பார். பயப்படாதேயுங்கள் (ஆகாய் 2:5). வேதப் புத்தகத்தில் ஆகாய் தீர்க்கதரிசியின் வார்த்தைகளைப்போன்று நமக்கு உற்சாகமளிக்கக்கூடியதும், விசுவாசத்திற்குச் சவால் விடுவதும்போன்ற அநேக பகுதிகள் உண்டு. சோர்ந்துபோன நம்பிக்கையற்ற ஆத்துமாக்களிடையே தேவனுக்கென ஆகாய் ஊழியம் செய்தார். பாபிலோனின் சிறையிருப்பிலிருந்து யூதேயாவுக்கு ஒரு சிறு பகுதியினர் மட்டுமே திரும்பி வந்திருந்தனர். எஸ்றாவின் காலத்தில் தேவனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, எருசலேம் ஆலயத்தைக் கட்டும் வேலைகளை ஆரம்பித்தனர். ஆனால் அதற்குப் பின்பு பதினைந்து ஆண்டுகளாக…

April

ஏப்ரல் 27

ஏப்ரல் 27 …. நான் அவரைக் காணாதபடிக்கு ஒளித்திருக்கிறார் (யோபு 23:9) நாமோ ஒரு வரையறைக்குட்பட்டவர்கள். தேவனோ முடிவில்லாதவர். ஒருநாளில் என்ன நேரிடும் என்பது நமக்குத் தெரியாது. ஆனால் காலைமுதல் இரவுவரை என்ன நடக்கும் என வேண்டிய காரியங்களையும், செல்ல வேண்டிய வழிகளையும் அறிய முற்படுகிறோம். இதன் முடிவு குழப்பமாகவும், இருண்டும் தோன்றுகிறது. வழி நடத்துதலுக்கென நாம் கூப்பிடும் சப்தம்தான் எதிரொலிக்கிறது. நாம் செல்லவேண்டிய வழியைத் தேவன் அறிவார். அது இருண்ட பாதையாயினும் அவருக்கு மறைவானது ஒன்றுமில்லை.…

April

ஏப்ரல் 26

ஏப்ரல் 26 ‘யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான். மாம்சமும் இரத்தமும் உனக்கு வெளிப்படுத்துவதில்லை. பரலோகத்தில் இருக்கிற பிதா உனக்கு இதை வெளிப்படுத்தினார்.” (மத் 16:17). பேதுரு ஒரு சாதாரண மனிதன். இந்த எளிய மீன்பிடிக்கிற மனிதனை கிறிஸ்து மனுஷரைப் பிடிக்கிறவனாக மாற்றினார். அவனைப் படிப்பறியாதவன் என்றும், பேதமையுள்ளவன் என்றும், வேதபாரகர் அறிந்திருந்தனர் (அப் 4:11). ஆனால் அவனோ கூர்மையான அறிவு கொண்டவன். மேசியாவைக் குறித்து கேள்விப்பட்ட அவன் உடனே போய் அவரைக் கண்டுகொண்டான். பரிசேயர் நியாயப்பிரமாணத்தைத்தான்…

April

ஏப்ரல் 25

ஏப்ரல் 25 ….. இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள்… (வெளி 21:5). பரிசுத்த ஆவியானவர் நமக்காக இவ்வார்த்தைகளை எழுதி இவை சத்தியமும், உண்மையுமானவைகள் என்று அழுத்தம் திருத்தமாகக் கூறியுள்ளார். மெய்யாகவே மெய்யாகவே என்று நமது ஆண்டவரும் இவ்வாறு வலியுறுத்திக் கூறியுள்ளார் அல்லவா! நம்மை வியப்பில் ஆழ்த்தும்படியான செய்தி இங்கு என்ன கூறப்பட்டுள்ளது? புதிய எருசலேமில் தேவன் மனுஷரின் மத்தியில் வாசம்பண்ணுவார். அவர்களின் கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார் (காலங்கள் தோறும் அவர் தம்முடைய பிள்ளைகளுக்கும், நமக்கும் இதைத்தானே…

April

ஏப்ரல் 24

ஏப்ரல் 24 … என் உண்மையில் பிசகாமலும் இருப்பேன் (சங்.89:33). இக்கட்டும் துன்பமும் சூழும் வேளையில், என்னால் ஏதும் முடியாது எனக் கருதும் வேளையில், எனக்கு மற்றெல்லா வசனங்களையும் விட அடிக்கடி இவ்வசனம்தான் அதிகமாகக் கண்முன் தோன்றும். நாம் தேவனுடைய உண்மையுள்ள தன்மையைக் குறித்து அதிகமாக அறிந்துகொள்ளவேண்டும். அப்பொழுதுதான் எந்தச் சூழ்நிலையிலும் தம்மை உண்மையாக நம்புகிறவர்களைக் கைவிடாமல் காக்கிறார் என்பதனை உணர முடியும். நமக்கு இருளாகத் தோன்றுவன யாவும் அவருக்கு முன்பு ஒளியாக இருக்கிறது. ஒளி நீங்கி…

April

ஏப்ரல் 23

ஏப்ரல் 23 கர்த்தரைத் தங்களுக்குத் தெய்வமாகக் கொண்ட ஜாதியும்…. ஜனமும் பாக்கியமுள்ளது (சங்.33:12). யோசபாத் பாக்கியவான். ஏனெனில் அவன் தன் தகப்பனுடைய தேவனைத் தேடி….. அவருடைய கற்பனைகளின்படி நடந்துகொண்டான். ஆகையால் கர்த்தர் அவன் கையில் ராஜ்ய பாரத்தைத் திடப்படுத்தினார். யூதா கோத்திரத்தார் எல்லாரும் யோசபாத்துக்குக் காணிக்கைகளைக் கொண்டு வந்தார்கள். அவனுக்கு ஐசுவரியமும் கனமும் மிகுதியாயிருந்தது (2.நாளா.17:4-5). யோசியாவின் ஆட்சிக் காலத்தில் மக்கள் முழு இருதயத்தோடும் தேவனிடம் திரும்பினார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. அவன் உயிரோடிருந்த நாளெல்லாம்…

April

ஏப்ரல் 22

ஏப்ரல் 22 …. அவருக்குக் காத்திருக்கிற அனைவரும் பாக்கியவான்கள் (ஏசா.30:18). எரேமியாவின் காலத்தில் சிறையிருப்பிற்குத் தப்பி, மீதியாயிருந்த இஸ்ரவேலர் அடைக்கலம் தேடி எகிப்துக்குப் போக புறப்பட்டனர் (எரேமி.42). இது நம் வாழ்விலும் ஏற்படுவது இயல்பே! ஒருவனுடைய இருதயம் கர்த்தருடைய வேளைக்கும், வழிக்கும் காத்திராவிடில் அவன் தன் இச்சைப்படி நடப்பான் என்பது உறுதி. ஆiகாயல் மிகுந்த பலனுக்கேதுவான உங்கள் தைரியத்தை விட்டுவிடாதிருங்கள். நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படி செய்ய வாக்குத்த்ததம் பண்ணப்பட்டதைப் பெறும்படிக்கு பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது (எபி.10:35-36). நாம்…

April

ஏப்ரல் 21

ஏப்ரல் 21 கர்த்தாவே உண்மையின்படி என்னை உபத்திரவப்படுத்தினீரென்றும் அறிவேன் (சங்.119:75). கிருபை நிறைந்த தேவன், மனப்பூர்வமாய் மனுபுத்திரரைச் சிறுமையாக்கி சஞ்சலப்படுத்துகிறதில்லை (புல.3:33) என்று எரேமியா தீர்க்கதரிசி ஆவியினால் ஏவப்பட்டு எழுதியுள்ளார். தேவனுடைய நியாயத்தீர்ப்பில் அவரது மிகுந்த இரக்கத்தைத் தம் அனுபவத்தில் கண்டுள்ளார். சர்வ வல்லமையுள்ள தேவன் தமது பிள்ளைகளைத் திருத்தியமைக்கிறார். அவர்களைத் துன்பப்படுத்தி சீர்ப்படுத்த வேண்டும் என்று விரும்புவதில்லை. பிரம்பைக் கையாடாதவன் தன் மகனைப் பகைக்கிறான் என்பதனை அறிந்த அவர் தம் பிள்ளைகளின் நன்மைக்கென அவர்களைத் தண்டிக்கிறார்.…