July

யூலை 31

யூலை 31 நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் திருப்தியடைவார்கள் (மத்.5:6). எப்பொழுதாகிலும் நீங்கள் அதிகப் பசியோடு இருந்ததுண்டா? தாகத்தோடு தவித்ததுண்டா? கெட்டுப்போன உணவுத் துண்டுகளுக்கெனப் போரடிய, பஞ்சத்தில் அடிபட்ட மக்களை நான் கண்டுள்ளேன். தாகத்தால் தவித்து, தண்ணீருக்காகக் கதறிய மக்களையும் நான் கண்டுள்ளேன். பசியும், தாகமும் தவிர்க்க முடியாத கொடிய அனுபவங்கள். வேதாகமத்தில் நமக்கு முரணாகத் தோன்றும் காரியங்கள் பல உண்டு. இன்றைய வசனத்தையும் இயேசு கூறிய கீழ்க்கண்ட வாக்குத்தத்தத்தை ஒப்பிட்டுப் பாருங்கள். ஜீவ அப்பம் நானே,…

July

யூலை 30

யூலை 30 ஒருவன் என் பின்னே வர விரும்பினால் அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை அனுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன் (லூக்.9:23). சீடனாக வாழ விரும்புவோர் சீரான வழியில் நடக்க வேண்டும். நமது ஆண்டவர் கூறிய அருமையான வார்த்தைகளைச் சற்று சிந்தித்துப் பாருங்கள். அவர் கூறியதாவது: யாதொருவன் என்னிடத்தில் வந்து தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரனையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான் (லூக்.14:26). எல்லாவற்றையும் வெறுத்துவிடவேண்டுமென்றால் அதாவது தன் ஜீவனையும்…

July

யூலை 29

யூலை 29 இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் இரக்கம் பெறுவார்கள் (மத்.5:7). இரக்கமுள்ளவர்கள் அடையும் ஆசீர்வாதங்களைப்பற்றி நாம் வேதாகமத்தில் அதிகமாகக் காண்கிறோம். யாக்கோபின் குமாரன் யோசேப்பைப்போன்ற நம்மில் சிலர் மட்டுமே, பிறருடைய பகையைச் சம்பாதித்துப் பழிவாங்கப்படுகிறோம். ரூபனைத்தவிர அவனைப் பகைத்த மற்ற சகோதரர் யாவரும் அவனைப் பழி வாங்க சந்தர்ப்பத்தை எதிர்பார்த்தனர். அவனோ யோசேப்பை விடுவிக்க முயன்றான். தகப்பனை ஏமாற்றும் அளவிற்கு மட்டுமே தங்கள் மனக்கசப்பை அவர்களால் வெளிப்படுத்த முடிந்தது. அவனது சகோதரரின் திட்டம் பலிக்கவில்லை. தேவனோ வேறு…

July

யூலை 28

யூலை 28 துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் ஆறுதலடைவார்கள் (மத்.5:4). நூற்றாண்டு காலங்களாக எதிர்பாத்திருந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை ஆவியானவரால் எவப்பட்ட எசாயா, துக்கம் நிறைந்தவராகவும், பாடு அனுபவிக்கிறவருமாகப் படம் பிடித்துக் காட்டுகிறார். நமது ஆண்டவர் இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது அவரது தாய் கணவனை இழந்த கைம்பெண்ணாகவிருந்தாள். தந்தையை இழந்து தவிக்கும் பிள்ளைகளின் நிலைமையையும், தலைவனைப் பறிகொடுத்து பரிதபிக்கும் குடும்பங்களின் நிலையினையும் இளைஞனாக இருந்த இயேசு நன்கு அறிந்தவர். உன்னைக் குறித்தும் அறிந்திருக்கிறார். இவரது வாழ்வில் கண்ட துக்ககரமான…

July

யூலை 27

யூலை 27 அல்லேலூயா, கர்த்தருக்குப் பயந்து, அவருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான் (சங்.112:1). நமக்கு அன்பானவர்களைப்பற்றி நாம் அதிக அக்கறை எடுத்துக்கொள்கிறோம். இரட்சகர் இயேசுவண்டை கெட்டுப்போன நம்முடைய பிள்ளைகளைக் கொண்டுவர வேண்டும், அவர்களும் இரட்சிப்பின் அனுபவத்திற்குள் வரவேண்டும் என்று தங்கள் பிள்ளைகளைக் குறித்து அக்கறை எடுத்துக்கொண்டு இரவும், பகலும் ஜெபிக்கும் பெற்றோர் பலரை நாம் நம் மத்தியில் காண்கிறோம். இப்படிப்பட்ட பாரத்தோடு இருக்கும் உள்ளங்களுக்கு வேதாகமத்தில் மிக அருமையான ஆறுதலான வசனம் ஒன்றுண்டென்றால் அது…

July

யூலை 26

யூலை 26 …. எனக்காகப் பரிதாபப்பட்டு, என் செவிக்கு அதை வெளிப்படுத்த உங்களில் ஒருவனாகிலும் இல்லையா (1.சாமு.22:8). இவைகள் ஓர் இராஜாவின் வார்த்தைகள். இதை நம்மால் நினைத்துப் பார்க்க முடிகிறதா? ராஜரீகம்பண்ணும் அவன் தனக்குத்தானே பரிதாபப்பட்டுக்கொள்கிறான். இது சவுல் ராஜாவின் பரிதாப நிலையைத் தெளிவாக நமக்கு எடுத்துக்காட்டுகிறது. ஆரம்பத்தில் நல்லவனாக இருந்த அவன் சோதனையில் தாக்குப் பிடிக்க முடியாமற் போய்விட்டான். அவன் ஆட்சிப்பீடத்தில் அமர்ந்த சில ஆண்டுகளுக்குப் பின்பே அவனுக்குச் சோதனை வந்தது. அதாவது இஸ்ரவேலரின் விரோதிகளான…

July

யூலை 25

யூலை 25 நீர் பயப்பட வேண்டாம். என் தகப்பனாகிய சவுலின் கை உம்மைக் கண்டுபிடிக்கமாட்டாது (1.சாமு.23:17). வேதாகமத்தில் காணப்படும் அன்பான மனிதருள் யோனத்தானும் ஒருவன். அவன் வீரமும் தீரமும் மிக்கவன். இரக்கமும் பக்தியும் உள்ளவன். உண்மையும், நட்பும், ஒழுக்கமும் உள்ளவன். அவன் தகுதியற்ற தன் தந்தையிடம் விசுவாசத்தையும், தன்னிகரற்ற தாவீதிடம் மரியாதை செலுத்தினான். சில வேளைகளில் வீட்டிலுள்ள பெரியோர் இரக்கமற்றவர்களாகவும் மன்னிக்காதவர்களாகவும் இருப்பர். அவர்கள் பழைய குற்றங்களை (அது உண்மையாயினும் சரி, கற்பனையிலும் சரி) மனதில் வைத்து…

July

யூலை 24

யூலை 24 என் தேவனே, நான் என் முகத்தை என் தேவனாகிய உமக்கு முன்பாக ஏறெடுக்க வெட்கிக் கலங்குகிறேன் (எஸ்.9:6). பாவம் நம்மை வெட்கப்படுத்தும். நம்முடைய ஆவிக்கு விரோதமாக வரும் மரியாதைக் குறைவைக் கண்டு நாம் சோர்ந்துவிடுகிறோம். நாம் கீழ்ப்படியாமற்போய்விட்டதால் மனம் வருந்திக் குழப்பமடைகிறோம். நம்முடைய மனசாட்சியின் குற்ற உணர்வால் நெருக்கப்படுகிறோம். ஆகவே நாமும் எஸ்றாவைப் போன்று தேவனை நோக்கிப் பார்க்கும் வேளையில் வெட்கத்தால் முகம் சிவந்து நிற்போம். எஸ்றாவுக்கும், சிறையிலிருப்பிலிருந்து திரும்பிய ஜனங்கள் யாவருக்கும் தேவன்…

July

யூலை 23

யூலை 23 நீ அவைகளில் நடக்கும்போது உன் நடைகளுக்கு இடுக்கண் உண்டாவதில்லை. நீ அவைகளில் ஓடினாலும் இடறமாட்டாய் (நீதி.4:12). தேவனுடைய சித்தம் இன்னதென்று அறியவேண்டியது சில வேளைகளில் மிகவும் அவசியமாயிருக்கிறது. நாம் பொறுமையாக காத்திருக்க வேண்டிய வேளைகள் உண்டு. விரைந்து ஓடவேண்டிய வேளைகளும் உண்டு. போதனையை ஏற்றுக்கொள்ளும் மென்மையான உள்ளத்திற்கு எப்பொழுதும் தரித்து நிற்க வேண்டும், எப்பொழுது முன்னேறிச் செல்லவேண்டும், எப்பொழுது ஓடவேண்டும், என்பது தெரியும். உண்மையுள்ள இருதயமுள்ளவர்கள் ஒரு தீர்மானத்திற்குள் வருவர். பிறர் தன்னைக் குறை…

July

யூலை 22

யூலை 22 நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார் (சங்.34:4). தேவனை நம்புகிறவர்கள் பயப்பட வேண்டியதில்லை. நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார். (சங்.34:4) என்று தாவீது சாட்சி கொடுக்கிறார். காலங்கள் தோறும் ஏன்? இன்றும்கூட எல்லாவற்றையும் நாசமாக்குவது பயம்தான். புற்றுநோய், மாரடைப்பு போன்றவற்றைவிட பயம் மிகவும் கொடிய வியாதி. இவ்வியாதிகளுக்குக் காரணமாயிருப்பதும், நமது இக்கட்டுகளுக்கு அடிப்படையாக இருப்பதுவும் பயமே!…