July

யூலை 21

யூலை 21 தானியேலே, பயப்படாதே! நீ அறிவை அடைகிறதற்கும், உன்னை உன்னுடைய தேவனுக்கு முன்பாகச் சிறுமைப்படுத்துகிறதற்கும், உன் மனதைச் செலுத்தின நாள் துவக்கி உன் வார்த்தைகள் கேட்கப்பட்டது. உன் வார்த்தைகளினிமித்தம் நான் வந்தேன் (தானி.10:12). வேதாகமம் முழுவதிலும் தேவன் நம்முடைய பிள்ளைகளிடத்து காட்டும் அன்பைக் காணமுடிகிறது. ஆபிரகாம் தேவனுடைய சிநேகிதனாக இருந்தான். மோசே உன்னதமானவரோடு முகமுகமாய்ப் பேசினான். தேவனால் அதிகம் நேசிக்கப்பட்ட மக்களுக்குள் தானியேலும் ஒருவனாக இருந்தான் (தானி.10:19). மாசற்ற தேவனுடைய ஊழியக்காரனாகிய தானியேல் மூன்று வாரங்களாக…

July

யூலை 20

யூலை 20 கொஞ்சம் பிசின் தைலமும், கொஞ்சம் தேனும்….. அந்த மனிதனுக்குக் காணிக்கையாகக் கொண்டுபோய்க்கொடுங்கள் (ஆதி.43:11). எகிப்து நாட்டின் பார்வோனின் கீழ்ப் பணிபுரிந்த பிரதமமந்திரி, யாக்கோபின் இளைய குமாரன் பென்யமீன் தன் சகோதரரால் தானியம் வாங்கத் திரும்பி வரும்போது அழைத்துக் கொண்டு வரப்படவேண்டும் எனக் கட்டளையிட்டான். இந்தக் கட்டளையிலிருந்து தப்ப முடியாது. தனக்கு அருமையானவனை ஒப்புவிக்கவேண்டும் அல்லது யாவரும் பாலைவனத்தில் பிசியினால் சாகவேண்டும். தாமதம் செய்தால் மட்டும் நற்பலன்கிட்டுமா? தேசத்திலே பஞ்சம் கொடியதாயிருந்தது. எகிப்திலிருந்து அவர்கள் கொண்டு…

July

யூலை 19

யூலை 19 தன் இளம் பிராயத்தில் நுகத்தைச் சுமக்கிறது மனுஷனுக்கு நல்லது (புல.3:27). ஒருவனுக்குக் கொடுக்கப்பட்ட வேலையை ஒழுங்காகவும், உண்மையோடும் செய்து முடிக்கவேண்டும். மற்றவர்களுடைய அபிப்பிராயங்களைப்பற்றி கவலைப்படாமல் நம் கடமையில் தவறாமல் தவறுகளை யாரேனும் சுட்டிக்காட்டினால் நன்றியோடு ஏற்றுக்கொண்டு திருத்தமாய்ச் செய்யவேண்டும். இப்படிப்பட்ட வேலைக்கு ஏற்ற பலன் நிச்சயம் கிட்டும். இந்த அனுபவத்திற்குள் சென்று பழக வேண்டுமென்பதற்காகவே நாம் இளமையில் நுகத்தைச் சுமக்க வேண்டியுள்ளது. இளம் பிராயத்தில் நுகத்தைச் சுமந்து பழகினால்த்தான் முதுமையில் எளிதாக சுமக்க இயலும்.…

July

யூலை 18

யூலை 18 உடன்படிக்கையையும் தயவையும் காக்கிற உண்மையுள்ள தேவன் (உபா.7:9). தான் வாக்களித்த யாவற்றையும் நிறைவேற்றுவதற்கு உன்னதமான தேவன் கண்ணும் கருத்துமாயிருக்கிறர். பாவத்தில் மனுக்குலம் வீழ்ந்து, சர்வ வல்லவருக்குப் பயந்து ஒளிந்த வேளையில், தேவன் ஆதாமை நினைத்து, அவனைத் தேடி வந்தார். (உன்னைப்போலும், என்னைப்போலுமுள்ள பாவிகளை அவர் இன்னும் தேடிக்கொண்டேயிருக்கிறார். நம்மை அவர் மறப்பதில்லை). அவர் நோவாவை நினைத்தருளினார் (ஆதி.8:1). அதனால் அவர் அவனையும், அவனது முழுக் குடும்பத்தையும் பெருவெள்ளத்தின் அழிவுக்கு காத்தார். இனிமேல் பிரளயத்தினால் பூமியை…

July

யூலை 17

யூலை 17 அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய் விடுகிறார் (சங்.23:2). நம்முடைய தேவனும், ஆண்டவருமானவர் சகலத்தையும் ராஜரீகம்பண்ணுகிறவர் மாத்திரமல்ல. அவரே உலகத்தையும் இதிலுள்ள யாவற்றையும் உண்டாக்கினவர். நியாயந்தீர்க்கிறவரும் அவரே! எல்லாவற்றிற்கும் மேலாக அவர் தமது ஜனங்களை மேய்க்கும் நல்ல மேய்ப்பனாகவும் இருக்கிறார். அவர் வானங்களுக்கு மேலாக உன்னதனமான இடத்தில் வாசம் செய்கிறது மாத்திரமல்ல, தாழ்மையும் நொறுங்குண்டதுமான மனித உள்ளங்களில் அவர் வாசம்பண்ணுகிறவராயும் இருக்கிறார். ஆடுகளைப்போல் நாமெல்லாரும் வழிதப்பிப் போனோம்.…

July

யூலை 16

யூலை 16 என் தேவனே, உம்மை நம்பியிருக்கிறேன், நான் வெட்கப்பட்டுப் போகாதபடி செய்யும் (சங்.25:2). தேவன் மிகுந்த உண்மையுள்ளவரென்று நாம் அறிந்திருந்தும் நம்முடைய விசுவாசக் குறைவினால் நாம் பயப்படுகிறோம். நாம் தோற்றத்தின்படி தீர்ப்புக்கூறாமல், தகுதியின்படியே தீர்ப்பிடவேண்டும். இயேசு கிறிஸ்து, கடுகு விதையளவு உங்களுக்கு விசுவாசம் இருந்தால்போதும் என்கிறார். கடுகு சிறியதாயினும் காரம் குறைவதில்லையே. அதில் ஜீவன் இருக்கிறது. உருவு கண்டு எள்ளாமை வேண்டும். சில நேரங்களில் நம்முடைய விரோதிகள் பெருகி, தேவன் நம்மைக் கைவிட்டுவிட்டாரோ எனக் கூறுமளவிற்கு…

July

யூலை 15

யூலை 15 இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள் (மத்.5:8). பார்ப்பதற்கு கண்கள்தான் தேவை எனக் கூறுவோம். ஆனால் அதைக் காட்டிலும் இருதயம் தேவை என்று இவ்வசனம் கூறுகிறது. தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை. பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார் (யோ.1:18) என்று யோவான் கூறுகிறார். மெய்யாகவே சர்வ வல்லமையுள்ள தேவனை எவருமே கண்டதில்லை. அவரைப் பார்க்க விரும்பிய மோசே, உம்முடைய மகிமையை எனக்குக் காண்பித்தருளும் என்று கேட்டான். அதற்கு தேவன், நீ…

July

யூலை 14

யூலை 14 உடைக்காகவும் நீங்கள் கவலைப்படுகிறதென்ன ? (மத்.6:28) போதுமென்ற மனது வேண்டும் என்பதையே போதகர் இயேசு அதிகமாக வலியுறுத்திக் கூறியுள்ளார். தேவன் படைத்த யாவற்றிலும், சிறியவைகளான பூக்களையும், பறவைகளையும்பற்றி அவர் அதிக கரிசனை எடுத்துக்கொள்ளும்போது தம் சாயலாகப் படைக்கப்பட்ட மனிதனைக் குறித்து அவருக்கு அக்கறையில்லாமல் போய்விடுமா என்று கூறி பிதாவின் அன்பை இயேசு நமக்கு வெளிப்படுத்தியுள்ளார். காட்டுப் புஷ்பங்கள் தேவனால் படைக்கப்பட்ட பூமியில் வேரூன்றித் தங்களுக்குத் தேவையான உணவை மண்ணிலிருந்தும், சூரிய வெளிச்சத்திலிருந்தும் பெற்றுக்கொள்கின்றன. தாங்கள்…

July

யூலை 13

யூலை 13 நாம் உண்மையில்லாதவர்களாயிருந்தாலும், அவர் உண்மையுள்ளவராயிருக்கிறார் (2.தீமோ.2:13). இந்த வசனம் கட்சன் டெய்லர் என்கிற விசுவாச வீரருக்குப் பிரியமான வசனம். சீனாவிற்குச் சுவிசேஷத்தை எடுத்துரைக்கும் ஊழியத்தை ஏற்றுக்கொண்ட அவர், தன் இளம் வயதிலேயும், ஊழியத்தின் பாதையிலும் அநேக பாடுகளைச் சகித்து விசுவாசத்தின் பாடங்களைக் கற்றுக்கொண்டார். ஒரு வெற்றியுள்ள மிஷனறியாகவும், ஆத்தும ஆதாயம் செய்பவராகவும் இருந்த அவர், தன் முப்பது வயது வரையிலும் ஒவ்வொரு விசுவாசியும் பெற்றனுபவிக்கும் ஆத்தும இளைப்பாறுதலையும், பரிபூரண சந்தோஷத்தையும்பற்றி அக்கறையின்றி அந்த அனுபவத்திற்குள்…

July

யூலை 12

யூலை 12 என்னைப்போன்ற மனிதன் ஓடிப்போவானோ? (நெகே.6:11). எதிர்பாராதவிதமாக ஆபத்துக்களை நம்மால் தவிர்க்க முடியாது. நெகேமியாவிற்கு ஆபத்து நேரிட்டது. அவன் அதைச் சமாளித்தான். தேவனுடைய ஊழியம் பலப்படுவதைக் காணச் சகிக்காத விரோதிகள் பலர் அவனுக்கு தொடர்ந்து தொல்லை தந்தனர். நெகேமியா அவர்களுக்குப் பகைவனானான். பெயர் பெற்ற ஊழியனாக இருந்தாலும், மறைந்திருந்து ஊழியம் செய்பவனாக இருந்தாலும், தேவனுக்கு ஊழியம் செய்யும் எவரும் இப்படிப்பட்ட அபாயங்களைச் சந்திக்க வேண்டியது அவசியம். நெகேமியாவிற்கு விரோதமாக சிலர் சதியாலோசனை செய்தனர் (நெகே.6:1-4). எருசலேமுக்கு…