July

யூலை 16

யூலை 16

என் தேவனே, உம்மை நம்பியிருக்கிறேன், நான் வெட்கப்பட்டுப் போகாதபடி செய்யும் (சங்.25:2).

தேவன் மிகுந்த உண்மையுள்ளவரென்று நாம் அறிந்திருந்தும் நம்முடைய விசுவாசக் குறைவினால் நாம் பயப்படுகிறோம். நாம் தோற்றத்தின்படி தீர்ப்புக்கூறாமல், தகுதியின்படியே தீர்ப்பிடவேண்டும். இயேசு கிறிஸ்து, கடுகு விதையளவு உங்களுக்கு விசுவாசம் இருந்தால்போதும் என்கிறார். கடுகு சிறியதாயினும் காரம் குறைவதில்லையே. அதில் ஜீவன் இருக்கிறது. உருவு கண்டு எள்ளாமை வேண்டும்.

சில நேரங்களில் நம்முடைய விரோதிகள் பெருகி, தேவன் நம்மைக் கைவிட்டுவிட்டாரோ எனக் கூறுமளவிற்கு துன்பங்கள் வந்து சேரும். அவர் நம்மைவிட்டுத் தூரமாயிருப்பதாகத் தோன்றினாலும், அவரை நம்பிப் பற்றிக்கொள்ள வேண்டுமெனப் போதிக்கிறார். இருளில் அவரது பிரசன்னத்தை உணரும் பொருட்டே அவர் கொஞ்ச காலத்திற்கு தமது ஒளியை நமக்கு மறைக்கிறார். நம் விசுவாசத்தை வர்த்திக்கப்பணும் பொருட்டு அவர் மவுனமாயிருக்கிறார். நான் உன்னை விட்டு விலகுவதில்லை என்று அவர் வாக்களித்ததின்படி அவர் நம்மோடிருக்கிறார் என்று நாம் அறியும்படிக்கே நம்மைத் தனிமையில் இருக்கும்படிக்கு அவர் அனுமதிக்கிறார். அவர் கிருபை நமக்குப் போதும் என்று நாம் உணரும்படிக்கே அவர் பலவீனத்தை அனுப்புகிறார்.

ஆகவே நீங்கள் உங்கள் துன்பங்களைக் குறித்து வேதனைப்படாமல் ஏறெடுத்து, அவரையே நோக்கிப் பாருங்கள். இன்று உனக்குத் தோல்வி கிட்டுவதாகத் தோன்றலாம். இது சிறிது காலத்திற்கே என்பதை மறவாதே. இன்று துன்பங்கள் உன்னை மேற்கொள்ளுமாகில், அது உன்னைத் தரைமட்டும் தாழ்த்துமாகில் கவலைப்படாதே. ஆனால் தேவன் நமக்காக யுத்தம் செய்து ஜெயிப்பார் என்று உறுதிகொள்வோமாக.