July

யூலை 13

யூலை 13

நாம் உண்மையில்லாதவர்களாயிருந்தாலும், அவர் உண்மையுள்ளவராயிருக்கிறார் (2.தீமோ.2:13).

இந்த வசனம் கட்சன் டெய்லர் என்கிற விசுவாச வீரருக்குப் பிரியமான வசனம். சீனாவிற்குச் சுவிசேஷத்தை எடுத்துரைக்கும் ஊழியத்தை ஏற்றுக்கொண்ட அவர், தன் இளம் வயதிலேயும், ஊழியத்தின் பாதையிலும் அநேக பாடுகளைச் சகித்து விசுவாசத்தின் பாடங்களைக் கற்றுக்கொண்டார். ஒரு வெற்றியுள்ள மிஷனறியாகவும், ஆத்தும ஆதாயம் செய்பவராகவும் இருந்த அவர், தன் முப்பது வயது வரையிலும் ஒவ்வொரு விசுவாசியும் பெற்றனுபவிக்கும் ஆத்தும இளைப்பாறுதலையும், பரிபூரண சந்தோஷத்தையும்பற்றி அக்கறையின்றி அந்த அனுபவத்திற்குள் வராமல் மனம் திரும்பாதவராகவே இருந்தார்.

அதற்கு முன்பு நான் நாம் உண்மையில்லாதவர்களாயிருந்தாலும், அவர் உண்மையுள்ளவராயிருக்கிறார் என்பதை அறியாமல் இருந்தேன். மாறாத உண்மையுள்ளவராயிரக்கும் அவா நம்மை மறுதலிக்கவே மாட்டார் என்பதைக் கற்றுக்கொண்ட பின்பு அவரையே சார்ந்திருக்க ஆரம்பித்தேன் என்று அவர் அடிக்கடி கூறுவாராம்.

இதன்மூலம் நாம் ஒவ்வொருவரும் நம்முடைய வாழ்க்கைக்குத் தேவையான, அற்புதமான ஒரு காரியத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும். நம்முடைய விசுவாசம் உயர்ந்தும், தாழ்ந்தும் வருவதால், நாம் தேவனை நமக்கேற்றபடி பலவீனமாயும், நம்முடைய குறுகிய எண்ணங்களின்படியும் கணக்கிடக்கூடாது என்பதுதான் அந்தப் பாடம். நம் வாழ்வில் ஏற்படும் எப்படிப்பட்ட சூழ்நிலையாயினும் நாம் உண்மையற்றவர்களாயிருப்பினும், அவர் உண்மையுள்ளவராயிருக்கிறார் என்பதை மறக்க வேண்டாம். நான் மலையைக் கண்டு பயப்படத் தேவையில்லை. அதுதான் என்னைக் கண்டு யபப்படவேண்டும் என்று ஸ்காட்லாந்து நாட்டுப் பெண் ஒருத்தி கூறியுள்ளதுபோல் நம்மால் கூறமுடியுமா?