July

யூலை 15

யூலை 15

இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள் (மத்.5:8).

பார்ப்பதற்கு கண்கள்தான் தேவை எனக் கூறுவோம். ஆனால் அதைக் காட்டிலும் இருதயம் தேவை என்று இவ்வசனம் கூறுகிறது. தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை. பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார் (யோ.1:18) என்று யோவான் கூறுகிறார். மெய்யாகவே சர்வ வல்லமையுள்ள தேவனை எவருமே கண்டதில்லை. அவரைப் பார்க்க விரும்பிய மோசே, உம்முடைய மகிமையை எனக்குக் காண்பித்தருளும் என்று கேட்டான். அதற்கு தேவன், நீ என் முகத்தைக் காணமாட்டாய், ஒரு மனுஷனும் என்னைக் கண்டு உயிரோடிருக்கக்கூடாது.. என் மகிமை கடந்து போகும்போது…. என் கரத்தினால் உன்னை மூடுவேன். பின்பு என் கரத்தை எடுப்பேன். அப்பொழுது என் பின் பக்கததைக் காண்பாய். என் முகமோ காணப்படாது (யாத்.33:20-23) என்று பதிலுரைத்தார்.

இருதயத்தில் சாந்தமுள்ளவர்கள் தேவைனக் காணும்படியாக அவர்களுக்கு ஒரு விசேஷித்த பார்வை இருக்கிறதாக இது குறிப்பிடாமல், உயிர்த்தெழுதலின்போது அவரைக் காண்கிறதாயும் குறிப்பிடாமல், தம்மை நம்புகிற பிள்ளைகள் அனுதின வாழ்வில் அவரது வழிநடத்துலை உணருவர் என்பதைக் குறிக்கிறது. அவரை உண்மையாகத் தேடும்போது அவரது இரக்கங்களை நாம் உணரலாம். இக்குறுகிய கால வாழ்வில் நாம் அவரது பரிசுத்தத்தைத் தேடி, அதைப் பெற்றுக்கொள்ள பாடுபடுவோமாகில் இவ்வுலகின் இருண்ட பகுதிகளிலும் அவரது மகிமையின் ஒளி பிரகாசிப்பதைக் காண இயலும். மாசற்றவர்களும், ஒழுக்கமுள்ளவர்களுமே அவரைக் காணமுடியும். அவர் தம்மைத் தம்முடைய பிள்ளைகளுக்கு தமது வார்த்தையாகிய வேதத்தின் மூலமாயும், தமது குமாரனாகிய நமது ஆண்டவர் இயேசு கிறி ஸ்துவின்மூலமாயும் நாம் பரிசுத்தமுள்ள வாழ்வைத் தொடங்கி, நடத்தி வரும்போது வெளிப்படுத்திக்கொண்டேயிருக்கிறார். நாம் தேவனைக் காண தடையாயிருப்பது என்ன?