July

யூலை 20

யூலை 20

கொஞ்சம் பிசின் தைலமும், கொஞ்சம் தேனும்….. அந்த மனிதனுக்குக் காணிக்கையாகக் கொண்டுபோய்க்கொடுங்கள் (ஆதி.43:11).

எகிப்து நாட்டின் பார்வோனின் கீழ்ப் பணிபுரிந்த பிரதமமந்திரி, யாக்கோபின் இளைய குமாரன் பென்யமீன் தன் சகோதரரால் தானியம் வாங்கத் திரும்பி வரும்போது அழைத்துக் கொண்டு வரப்படவேண்டும் எனக் கட்டளையிட்டான். இந்தக் கட்டளையிலிருந்து தப்ப முடியாது. தனக்கு அருமையானவனை ஒப்புவிக்கவேண்டும் அல்லது யாவரும் பாலைவனத்தில் பிசியினால் சாகவேண்டும். தாமதம் செய்தால் மட்டும் நற்பலன்கிட்டுமா? தேசத்திலே பஞ்சம் கொடியதாயிருந்தது. எகிப்திலிருந்து அவர்கள் கொண்டு வந்த தானியம் செலவழிந்தது (43:12). ஆகவே பென்ஜமீனை யாக்கோபு அனுப்பவேண்டியதாயிற்று.

கொஞ்சம் தேனும்….. கொண்டு போங்கள்… உங்கள் சகோதரனையும் கூட்டிக்கொண்டு… போங்கள்…. சர்வ வல்லமையுள்ள தேவன் அவன் சமுகத்தில் உங்களுக்கு இரக்கம் கிடைக்கப்பண்ணுவாராக என்று பெருமூச்சுடன் கூறி யாக்கோபு தன் உள்ளத்தின் பொக்கிஷத்தை ஒப்புவித்தான். நம் வாழ்க்கையில் புயல் வீசி, நாம் அழிந்துவிடும் வேளையில் வரும்போது, நம்முடைய துரதிருஷ்டத்தைக் குறித்து வேதனைப்படுவோமா? அல்லது பிறர் செய்த குற்றங்களுக்காக அவர்கள்மீது கோபம் கொள்வோமா? நம்முடைய முழுமையையும் தேவனுக்கென நாம் அர்ப்பணித்திருந்தால் தேனைப்போன்ற இனிமையையும், பென்ஜமீனைப்போன்ற அருமையானவற்றை அவருக்கென கொடுக்கத் தாயங்கமாட்டோம். அப்பொழுது நாம் நினைக்கிறதற்கும், வேண்டிக்கொள்வதற்கும் மேலான பரிபூரணமானவற்றைப் பெற்றுக்கொள்வோம். பஞ்சம் முடிவுறும் வேளையில் அவன் கொடுத்த பொக்கிஷமாகிய பென்ஜமீனைத் திருப்பப் பெற்றுக்கொண்டதோடல்லாமல் யோசேப்பையும் திரும்பிப் பெற்றான்.

நம்முடைய யோசேப்பு நெடுங்காலத்திற்கு முன்பே இறந்து போய்விட்டான். இப்பொழுது அவனை உயிரோடு பார்த்தால் நம் சந்தோஷம் பொங்கி வழியாதா? நாம் ஒப்புவித்து தேனைப்போன்று இனிமையாகவும், முழுமையான அர்ப்பணமாயும் இருக்குமாயின் இழந்தவற்றைத் திரும்பப் பெறும் இனிய சிலாக்கியத்தைப் பெறுவோம். பென்ஜமீனோடு யோசேப்பும் திரும்பக் கிடைப்பான் !