July

யூலை 11

யூலை 11 அவன் இருதயத்தை உமக்கு முன்பாக உண்மையுள்ளதாகக் கண்டு,…. நிறைவேற்றினீர் (நெகே.9:8). தேவனுடைய சிநேகிதன் என்கிற பெயரைக் காட்டிலும் ஆபிரகாமுக்கு வேறு சிறந்த பட்டம் தேவையா? (யாக்.2:23). தேவனுடைய ஐக்கியம் தேவை என்று உணர்ந்து வரும் எந்த மனிதனையும் அவர் தனது சிநேகிதனாக ஏற்றுக்கொள்வார் என்று அவனுக்குப் போதித்தவர் யார்? கல்தேயர் தேசத்து ஊர் பட்டணத்தைச் சேர்ந்த அந்த மனிதன் இவ்வளவு பெரிய சிறப்பைப் பெற காரணம் யாது? தேவன் அவன் இருதயத்தை உண்மையுள்ளதாகக் கண்டார்.…

July

யூலை 10

யூலை 10 என்னிமித்தம் உங்களை நித்தித்து… பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள். சந்தோஷப்பட்டுக், களிகூருங்கள் (மத்.5:11-12). அசீரியாவின் பிரதிநிதிகள் எசேக்கியாவையும், அவனது ஆலோசகர்களையும் நிந்தித்து, இழிவுபடுத்திப் பேசினபோது அமைதியாயிருந்தனர். அவர்கள் இந்தக் காரியத்தைச் சர்வ வல்லவரிடம் ஜெபத்தின்மூலம் தெரிவித்தனர். இதனால் அசீரியர்கள் எருசலேமின்மேல் ஓர் அம்பையும் எய்யக்கூடாமற் போய்விட்டனர் (2.இராஜா.19:32). பவுல் கூறுகிறார்: நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப் போகிறதில்லை. கலக்கமடைந்தும் மனமுறிவடைகிறதில்லை. துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை. கீழே தள்ளப்பட்டும் மடிந்துபோகிறதில்லை. கர்த்தராகிய இயேசுவினுடைய…

July

யூலை 9

யூலை 9 கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்னை உண்மையுள்ளவனென்றெண்ணினார் (1.தீமோ.1:12). தான் வாழ்வது கிறிஸ்துவின் கிருபையால்தான் என்பதை நன்குணர்ந்தவன் பவுல் (1.கொரி.15:10). தன் ஆண்டவரை அவன் முதன் முதலாகச் சந்தித்து, அவருக்குத் தன்னை ஒப்புவித்தபோது தனக்காக அவர் என்ன வைத்திருக்கிறார் என்பதை அறியாமல் இருந்தான். ஆனால் இயேசு கிறிஸ்து அவனைப்பற்றி அனனியாவிடம், அவன் என்னுடைய நாமத்தினிமித்தம் எவ்வளவாய்ப் பாடுபடவேண்டுமென்பதை நான் அவனுக்குக் காண்பிப்பேன் என்றார் (அப்.9:16). அவன் அந்தப் பரம தரிசனத்iதிற்குக் கீழ்ப்படியாதவனாயிருக்கவில்லை. எங்கும் சுற்றித் திரிந்து,…

July

யூலை 8

யூலை 8 புல்லைப்போல் உலர்ந்துபோகிறேன். கர்த்தராகிய நீரோ என்றென்றைக்கும் இருக்கிறீர் (சங்.102:11-2). புறக்கணிக்கப்பட்ட உள்ளம், கலைந்து செல்லும் மேகம் போன்றும், மறைந்து செல்லும் நிழலைப்போன்றும் நம்பிக்கையற்ற நிலையில் வாழும். அது புல்லைப்போல் உலர்ந்து போகிறேன் என்று கவலையுடன் கூறும். புல் சூரியனால் சுட்டெரிக்கப்பட்டு காற்றினால் பயனின்றி பறக்கடிக்கப்படுவதுபோல் இந்த உள்ளம் எதையும் செய்யாமல் சோர்வுற்று, தேவனுக்கும், மனிதனுக்கும் பயன்படாமல் போய்விடும். இதுதான் உலர்ந்துபோன உள்ளத்தின் கதை. இதற்கு மாறாக, கர்த்தராகிய நீரோ என்றென்றைக்கும் இருக்கிறீர் என்று எவ்வளவு…

July

யூலை 7

யூலை 7 தேவனுக்கு முன்பாக…. செவ்வையான வழியைத் தேடுகிறதற்கும், நான் அங்கே அந்த அகாவா நதியண்டையிலே உபவாசத்தைக் கூறினேன் (எஸ்.8:21). எஸ்றாவுக்கு தேவனுடைய வழிநடத்துதல் அதிகமாய்த் தேவைப்பட்டது. ஏனெனில், அகாவா நதியை அடுத்த வனாந்தரத்தில் இரக்கமற்ற, அநீதியுள்ள, இரத்த வெறிபிடித்த கொள்ளையர் பலர் இருந்தனர். தேவன் தம்முடைய தெளிவான சித்தத்தை நமக்கு வெளிப்படுத்தும்போது, வாழ்க்கைப் பாதையில் அன்றாடம் சந்திக்கவேண்டிய காரியங்களைக் குறித்து மொத்தமாக எச்சரிப்பு கொடுக்கமாட்டார். ஆகவே நாமும் எஸ்றாவைப்போல் பயமின்றி, விசுவாசத்தோடு, நிதானமாக அன்றாடம் ஜெபித்து…

July

யூலை 6

யூலை 6 நீங்கள் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் வெட்கப்படாமலும் கலங்காமலும் இருப்பீர்கள் (ஏசா.45:17). இஸ்ரவேலர் உலகம் முழுவதிலும் சிதறடிக்கப்பட்ட பின்பு, அநேக வருடங்களுக்குப்பின் மீண்டும் தங்கள் இராஜ்ய த்தில் கூட்டிச் சேர்க்கப்பட்டு, அரசாட்சி செய்வார்கள் என்று பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலும் அநேக தீர்க்கதரிசனங்கள் கூறப்பட்டுள்ளன. நாம் கீழ்க்கண்ட தீர்க்கதரிசனங்களை நினைவு கூரவேண்டும். உன் தேவனாகிய கர்த்தர் உன் சிறையிருப்பைத் திருப்பி, உனக்கு இரங்கி, உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிதறடித்த எல்லா ஜனங்களிடத்திலும் இருக்கிற உன்னைத் திரும்ப…

July

யூலை 5

யூலை 5 கர்த்தாவே… நீர்… சிட்சித்து, உம்முடைய வேதத்தைக்கொண்டு போதிக்கிற மனுஷன் பாக்கியவான் (சங்.94:12-13). பிரான்ஸிஸ் பேகன் என்பவர், பயனில்லாத செல்வமும், நம்பிக்கையும் ஆறுதலுமற்ற ஏழ்மையையும் காண்பதரிது எனக் கூறியுள்ளார். கஷ்டமான சூழ்நிலை நமக்கு ஏற்படும்போது, எனக்கு ஏன் இவ்விதமான இக்கட்டு நேரிடவேண்டும்? ஏன் பிறருடைய குற்றச்சாட்டுகட்கு ஆளாகவேண்டும்? என்னைப்பற்றி ஏன் பொய்யாக கோள் சொல்லுகின்றனர்? எனக்கு ஏன் இந்த துன்பமும், தொல்லைகளும் வந்துள்ளன? என்றெல்லாம் பலவாறு கேட்கத் தோன்றும். இப்படிக் கேட்பதினால் ஏதாகிலும் நன்மை உண்டா?…

July

யூலை 4

யூலை 4 ஆலயத்தில் பண்டகசாலைகளை… அவர்கள்… ஆயத்தப்படுத்தின பின்பு, அவைகளிலே காணிக்கைகளை…. உண்மையாய் எடுத்து வைத்தார்கள் (2.நாளா.31:11-12). இந்த வார்த்தை உண்மையுள்ளது என்று ஆரம்பித்த பவுல், ஆவியானவரால் ஏவப்பட்டு, தேவனிடத்தில் விசுவாசமானவர்கள் நற்கிரியைகளைச் செய்ய ஜாக்கிரதையாய் இருக்கவேண்டும் (தீத்து 3:8) என்று எழுதியுள்ளார். தேவனுக்கென தன் பொருளைக் கொடுக்கும் உக்கிராணத்துவ தன்மை கிறிஸ்தவ நற்கிரியைகள் யாவற்றிலும் மேலானது எனலாம். கிறிஸ்தவன் தன் பணத்தையும், பொருள்களையும் செலவிடுவதைக்கொண்டு அவன் தேவனுக்குக் கொடுப்பதைப்பற்றிக் கூறியிருப்பதைக் காணலாம். இதனால் சர்வ வல்லமையுள்ள…

July

யூலை 3

யூலை 3 …. தேனைச் சாப்பிடு, அது நல்லது…. அப்படியே ஞானத்தை அறிந்து கொள்வது உன் ஆத்துமாவுக்கு இன்பமாயிருக்கும் (நீதி.24:13-14). நம் வாழ்க்கையை அறிவோடும், ஆற்றலோடும் நடத்துவதற்கும், நம்மை ஒழுக்கமுள்ளவர்களாய்க் காட்டுவதற்கும் ஞானம் தேவை. முன் யோசனையோடும், ஆலோசனையோடும், கவனத்தோடும், ஜாக்கிரதையோடும், நிதானத்தோடும் காரியங்களைச் செய்வதற்கு ஞானம் உதவுகிறது. ஞானம் எங்கேயிருந்து வரும்?… அது ஜீவனுள்ள சகலருடைய கண்களுக்கும் ஒளித்தும்…. இருக்கிறது? (யோபு 28:20-21) என்று யோபு கூறுகிறார். இக்கேள்விக்குப் பதிலாக, இதோ, ஆண்டவருக்குப் பயப்படுவதே ஞானம்.…

July

யூலை 2

யூலை 2 …. நீங்கள் பயப்படாதிருங்கள். சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என்று அறிவேன் (மத்.28:5). நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தபோது, அநேக ஆபத்துக்களைச் சந்தித்து அனுபவப்பட்ட ரோமப்போர்ச் சேவகர்கள் பயந்து நடுங்கி மயங்கி விழுந்தனர். சுய நினைவிற்கு வந்தவுடனே அவர்கள் தாங்கள் காவல் காக்க வேண்டிய கடமையை விட்டு ஓடினர். அந்தக் காவற் சேவகர் கூட்டம் முழுவதும் பயப்படும்படியாக ஒரே ஒரு தேவதூதன்தான் இருந்தான். கவலையீனமாயும், கிறிஸ்துவை அறியாதவர்களாயும் உள்ள மக்கள் தங்கள் சொந்த…