July

யூலை 5

யூலை 5

கர்த்தாவே… நீர்… சிட்சித்து, உம்முடைய வேதத்தைக்கொண்டு போதிக்கிற மனுஷன் பாக்கியவான் (சங்.94:12-13).

பிரான்ஸிஸ் பேகன் என்பவர், பயனில்லாத செல்வமும், நம்பிக்கையும் ஆறுதலுமற்ற ஏழ்மையையும் காண்பதரிது எனக் கூறியுள்ளார். கஷ்டமான சூழ்நிலை நமக்கு ஏற்படும்போது, எனக்கு ஏன் இவ்விதமான இக்கட்டு நேரிடவேண்டும்? ஏன் பிறருடைய குற்றச்சாட்டுகட்கு ஆளாகவேண்டும்? என்னைப்பற்றி ஏன் பொய்யாக கோள் சொல்லுகின்றனர்? எனக்கு ஏன் இந்த துன்பமும், தொல்லைகளும் வந்துள்ளன? என்றெல்லாம் பலவாறு கேட்கத் தோன்றும். இப்படிக் கேட்பதினால் ஏதாகிலும் நன்மை உண்டா?

இப்படிப்பட்ட அனுபவத்திற்குள் சென்ற தாவீதும், ஏழாம் சங்கீதத்தை எழுதியுள்ளார். என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன். என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் எல்லாருக்கும் என்னை விலக்கி இரட்சியும்… என் தேவனாகிய கர்த்தாவே, நான் இதைச் செய்ததும், என் கைகளில் நியாயக் கேடிருக்கிறதும், என்னோடே சமாதானமாயிருக்கிறவனுக்கு நான் தீமை செய்ததும், காரணமில்லாமல் எனக்குச் சத்துருவானவனை நான் கொள்ளையிட்டதும் உண்டானால், பகைஞன் என் ஆத்துமாவைத் தொடர்ந்து பிடித்து, என் பிராணனைத் தரையிலே தள்ளி மிதித்து, என் மகிமையைத் தூளிலே தாழ்த்தக்கடவன் (சங்.7:1,3-5).

நாமும்கூட தாவீதைப்போன்று தவறானவற்றைச் செய்திருந்தால் என்னை நீதியின்படி தண்டியும் என்று கேட்கிறவர்களாக இருக்கிறோம். தவறு செய்யும்போது தண்டித்து திருத்தப்படவேண்டும். ஆனால் நாம் யாருக்கும் தீங்கு செய்யாதிருக்கும்போது நமக்குத் துன்பமும், துக்கமும் வருமாயின் நாம் அதிசயிப்பது இயல்பே! இப்படிப்பட்ட ஆழ்ந்த அனுபவங்களைச் சகிப்பதற்கென வேதாகமத்தில் உள்ள கீழ்க்கண்ட வசனம் உதவும் என்று நம்புகிறேன். தேவன்மேல் பற்றுதலாயிருக்கிற மனச்சாட்சியினிமித்தம் ஒருவன் அநியாயமாய்ப் பாடுபட்டு உபத்திரவங்களைப் பொறுமையாய்ச் சகித்தால் அதுவே பிரீதியாயிருக்கும். நீங்கள் குற்றஞ்செய்து அடிக்கப்படும்போது, பொறுமையோடே சகித்தால், அதினால் என்ன கீர்த்தியுண்டு? நீங்கள் நன்மை செய்து பாடுபடும்போது பொறுமையோடே சகித்தால் அதவே தேவனுக்கு முன்பாக பிரீதியாயிருக்கும் (1.பேது.2:19-20).