July

யூலை 10

யூலை 10

என்னிமித்தம் உங்களை நித்தித்து… பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள். சந்தோஷப்பட்டுக், களிகூருங்கள் (மத்.5:11-12).

அசீரியாவின் பிரதிநிதிகள் எசேக்கியாவையும், அவனது ஆலோசகர்களையும் நிந்தித்து, இழிவுபடுத்திப் பேசினபோது அமைதியாயிருந்தனர். அவர்கள் இந்தக் காரியத்தைச் சர்வ வல்லவரிடம் ஜெபத்தின்மூலம் தெரிவித்தனர். இதனால் அசீரியர்கள் எருசலேமின்மேல் ஓர் அம்பையும் எய்யக்கூடாமற் போய்விட்டனர் (2.இராஜா.19:32).

பவுல் கூறுகிறார்: நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப் போகிறதில்லை. கலக்கமடைந்தும் மனமுறிவடைகிறதில்லை. துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை. கீழே தள்ளப்பட்டும் மடிந்துபோகிறதில்லை. கர்த்தராகிய இயேசுவினுடைய ஜீவனும் எங்கள் சரீரத்திலே விளங்கும்படிக்கு, இயேசுவின் மரணத்தை எப்பொழுதும் எங்கள் சரீரத்தில் சுமந்து திரிகிறோம் (2.கொரி.4:8-10).

ஒவ்வொரு துன்பத்திலும், பாடுகளின்போதும் நமக்கு அதைத் தாங்கும் வலிமையைத் தேவன் அருளுகிறார். இதற்கு நமது இரட்சகர் இயேசு சிறந்த எடுத்துக்காட்டு. பேதுரு அவரைப்பற்றி, அவர் வையப்படும்போது பதில் வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயத்தீர்ப்புச் செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார் (1.பேது.2:23) எனக் கூறுகிறார். எவ்வளவு பெரிதான கிருபை! மதகுருக்களால் வையப்பட்டார். அவர் பிசாசுகளின் பேரில் செலுத்தின அதிகாரத்தைக் கண்டு அவர்கள் திட்டினர். வையப்படும்போது பொறுமையுடன் இருந்தார். அதோடு விட்டு விடாமல் அவரைச் சிலுவையில் கொண்டுபோய் அறைந்து கொன்றனர். எப்போதும், அவரைத் தூஷித்து நிந்தித்தனர்.