June

யூன் 21

யூன் 21

அவருடைய வார்த்தையை விசுவாசியாமல்… முறுமுறுத்தார்கள் (சங்.106:24-25).

தரித்திர நிலையில் இருக்கும் சிலரைப்போன்று முறுமுறுக்கவேண்டாம். இஸ்ரவேலர் ஏன் முறுமுறுக்கவேண்டும்? அவர்களைப் பாதுகாக்க ஒவ்வொரு நாளும் மேகஸ்தம்பம் இருந்தது. அக்கினி ஸ்தம்பம் எதிரிகளைத் தடுத்து, இரவில் கூடாரங்களுக்கு ஒளியைக் கொடுத்துக்கொண்டும் இருந்தது. மோசே அவர்களை வழிநடத்தும் தலைவனாக இருந்தான். வானத்து மன்னா ஆகாரமாயும், கன்மலையின் தண்ணீர் பானமாகவும், கிழியாத உடைகளும் அவர்களுக்கு அருளப்பட்டடிருந்தது. இவ்வளவு வசதிகள் இருந்தும் அவர்கள் தங்கள் கூடாரங்களில் முறுமுறுத்தனர்!

அவர்கள் அவருடைய வார்த்தையை விசுவாசியாமல் இச்சிக்கப்படத்தக்க தேசத்தை அசட்டைபண்ணினார்கள் (வச.24). ஆகவேதான் முறுமுறுத்தனர். தேவன் அளித்த ஈவுகளின் நிறைவை உணராமலும், அவரது வாக்குத்தத்தங்களை நம்பாமலும் இருந்தனர்.

தங்கள் கூடாரங்களில் முறுமுறுத்தனர். அவன் மக்கள் வெளியில் கூடி முறுமுறுத்தனர். பெண்கள் மோசேயைப்பற்றி அயல் வீட்டாருடன் பின் கட்டில் புறணி பேசினர் வீட்டிலும் மறுமுறுப்பு தொடர்ந்தது. பிள்ளைகள் இதைக்கேட்டனர். இளம் உள்ளங்கள் கெடுக்கப்பட்டன. அவர்கள் தேவன நம்புவதை விட்டு அவிசுவாசத்தில் வளர்க்கப்பட்டனர். தேவனுடைய ஊழியரைக் குறித்துத் தவறாகப் பேசும்போது உங்கள் பிள்ளைகள் அவற்றைக் கேட்ட அனுமதிக்கிறீர்களா? முறுமுறுத்தல் தேவனை வேதனைப்படுத்துவதோடு நில்லாமல், இளம் தலைமுறையினரையும் கெடுத்துவிடுகிறது. அன்பும், மகிழ்ச்சியும் நிறைந்த காரியங்களைப்பற்றியே பேசும் குடும்பந்தான் பாக்கியமுள்ளதாக இருக்கும். குடும்பத்தில் பிறரைப்பற்றி புகழ்ந்து கூறவேண்டும். உன்னதமான தேவனைப்போற்றி புகழ்ந்து கனப்படுத்த வேண்டும்.

முறுமுறுத்தல் மாம்சத்துக்குரிய இயல்பு. இதனால் கொடுமையும், அதிருப்தியும்தான் பெருகும். ஆகவே இப்படிப்பட்ட உள்ளம் தேவனால் பிரகாசிக்கப்பட்டு, உபதேசத்தால் பண்பு நிறைந்ததாக உருவாக்கப்பட்டு, கிறிஸ்துவுக்குள் புது சிருஷ்டியாக மாறவேண்டும்.