January

ஐனவரி 25

நான் உம்முடைய கற்பனைகளையெல்லாம் கண்ணோக்கும்போது, வெட்கப்பட்டுப் போவதில்லை (சங்.119:6)

தேவனுடைய வார்த்தை உன்னைப் பாவத்தினின்றுவிலக்கும் அல்லது பாவம் உன்னை இந்தத் தேவனுடைய வார்த்தையிலிருந்து விலக்கும் என்றுபில்லி சண்டே என்பவர் தன் நண்பருடைய வேதாகமத்தின் முன் பக்கத்தில் எழுதிக்கொடுத்தார்.இதில் அவர் வேதாகமத்தைப்பற்றிய தெளிவான பவித்திரமான ஓர் உண்மையைவெளிப்படுத்தியுள்ளார்.

தேவனுடைய வார்த்தையை நம்புவதற்கு நாம்எப்பொழுதாகிலும் வெட்கப்பட்டதுண்டா? பத்துக் கட்டளைகளைப் பின் பற்றுவதற்கும் இயேசுவின்போதனைகளைக் கைக்கொண்டு, ஆவியில் எளிமையுள்ளவர்களாகவும், இருதயத்தில்சுத்தமுள்ளவர்களாகவும், சமாதானம் பண்ணுகிறவர்களாகவும் வாழ வெட்கமா? அவருடையநாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார் (யோ.1:12) என்றவாக்குறுதியை விசுவாசிக்க தயக்கமா? நம்முடைய சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப்பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்க (ரோ.12:1) வும் வெட்கப்படுகிறோமா?

பலியைக் காட்டிலும் கீழ்ப்படிதலே உத்தமம்என்கிறார் சாமுவேல். இதுவே எக்காலத்திற்கும் பொருத்தமானது. தினமும் வேதம் வாசித்து அதன்வெளிச்சத்திலே நடக்கவேண்டும். கடிந்துரைக்கும்போது செவி கொடுக்கவேண்டும். எந்தவாக்குத்தத்தத்தினையும் விசுவாசத்தோடு எற்றுக்கொள்ளவேண்டும். இப்படிச் செய்வதால் நாம்வெட்கப்பட்டுப் போவதில்லை. வாக்குத்தத்தங்களைக் கைப்பற்றி நடப்பதோடு,கடிந்துரைத்தலுக்கு செவிகொடுக்க வேண்டும். அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளும்போது நாம்உறுதியுடன் நிற்க முடியும்.