January

ஐனவரி 31

நீ பயப்படாதே, இதோ, நான் உன்னைத் தூரத்திலும்… இரட்சிப்பேன் (எரேமி.30:10).

தேவன் நம்மைக் கடிந்துரைப்பது அவர் நமக்குக் கூறும் கடைசி எச்சரிப்பு அல்ல. தொடர்ந்து விக்கிரகாராதனையிலும், பாவத்திலும் வாழ்ந்து வந்த யூதர் இராஜ்யம் கல்தேயரரிடம் சிறைப்பட்டுப் போயிற்று. தேவன் பரிசுத்தராக இருப்பதினால் பாவத்திற்குத் தண்டனையளிக்கிறார். நியாயத்தீர்ப்பினால்தான் பாவி பக்குவப்படுத்தப்படுகிறான்.

சங்கீதக்காரன் தன் வேதனையில் கர்த்தாவே நீர் அக்கிரமங்களைக் கவனித்திருப்பீரானால், யார் நிலைநிற்பான், ஆண்டவரே உமக்குப் பயப்படும்படிக்கு உம்மிடத்தில் மன்னிப்பு உண்டு எனக் கதறுகிறான் (சங்.130:3-4).

தவறுகளுக்கு மன்னிப்பு உண்டு. பாவத்திற்கு இரட்சிப்பு உண்டு. தவறி விழுந்துவிட்டால் தூக்கி நிலைநிறுத்தப்படுவோம். இதையே மீண்டும் சங்கீதக்காரன், தேவனே சுத்த இருதயத்தை என்னில் சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும்… உமது இரட்சண்யத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தந்து, உற்சாகமான ஆவி என்னைத் தாங்கும்படி செய்யும் எனக் (சங்.51:10,12) கூறியுள்ளான்.

எரேமியா, தவறிப்போன தன் ஜனங்கள் மனந்திரும்பினால் தேவன் திரும்புவும் அவர்களை நிலைநிறுத்தி, சொந்த நாட்டிற்குக் கொண்டு வருவார் என்ற தேவனுடைய உதவியைப்பற்றி மிகுந்த உற்சாகமாகக் கூறுகிறார். தீர்க்தரிசியின் மூலம் தேவஆவியானவர் கூறிய வசனத்தைக் கொண்டு நாம் இருதயத்தை ஆராய்வோம். நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்கு கொடுக்கும்படிக்கு, நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்திற்கேதுவான நினைவுகளே (எரேமி.29:11).

பாபிலோனைப்போன்ற பாவத்தின்….. நீ கலங்காதே. இதோ நான் உன்னைத் தூரத்திலும்… சிறையிருப்பின் தேசத்திலுமிருந்து விடுவித்து இரட்சிப்பேன் (எரேமி.46)