January

ஐனவரி 30

பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது (எபி.10:36)

நமக்கு ஏற்படும் மனத்தளர்ச்சிகள் யாவும் தேவனுடையசித்தத்தின்படியே ஏற்படுகிறது. நம்முடைய ஜெபத்திற்குத் தேவனிடமிருந்து பதில் வரதாமதமானால் அதற்கு அவர் கொடுக்கமாட்டார் என்பது பொருளல்ல. கேட்கிற யாவற்றையும்பெறுவோம் என நாம் விசுவாசிப்பதில்லையே. தாமதத்தினால் நம்முடைய நம்பிக்கைகுறைந்துவிடும். தேவனுக்கென ஊழியம் செய்யும் ஆத்துமாவிற்கான பயிற்சி இதுதான்.ஓய்வில்லாத, அவசரமான காலம் இது. நமக்கு ஆயத்தம் செய்ய, நாம் உற்சாகத்துடன்,ஊக்கத்துடன், ஆர்வத்துடன், வலிமையுடன் இருப்பதாக உணருகிறோம். ஆனால் நமக்கு ஏற்படும்சோர்வு, பலவீனம், அசதி, பயனற்ற நிலை இவற்றிற்கு அடிப்படைக் காரணம் யாது என்றுஅறிந்துகொள்ள இயலவில்லை. இவை யாவும் நமக்கு பயனற்ற, அறிவற்ற திட்டங்களாகநோக்கங்களாகத் தோன்றலாம்.

தேவனுடைய பிள்ளைகள் பலர் தங்கள் வாழ்வில்பெற்ற தாமதமான ஆசீர்வாதங்களைப்பற்றி நாம் வேதம் முழுவதிலும் காணலாம். ஆபிரகாமுக்கு ஒருமகன் பிறப்பான் என்ற வாக்குத்தத்தம் கிடைத்த பின்பும் அவன் நெடுங்காலம்காத்திருந்தான். யோசேப்பும் எகிப்தில் கொடிய வேதனையுள்ள வருடங்களைக் கழித்தான்.அன்னாள் வெறுமையான வீட்டில் காத்திருந்தாள். ஆம், எல்லாவற்றிற்கும் மேலாக நம்ஆண்டவர் இயேசு கிறிஸ்து மௌனமாக நாசரேத்தூரின் தெருக்களின் தம் வாழ்நாளைக்கழிக்கவில்லையா?

இப்படிப்பட்ட தாமதமான அனுபவங்களை நீங்கள்சந்தித்ததுண்டா? உற்சாகத்திற்கு பதில் சோர்வும், பலத்திற்குப் பதில் பலவீனமும், பேசவேண்டியதற்குப் பதில் அமைதியும், உடல் நலத்திற்குப் பதில் வியாதியும், நட்புக்குப்பதிலாக நண்பர்களால் கைவிடப்பட்ட நிலையினையும் நீங்களே அனுபவித்ததில்லையா? தாமதமாகவருவதைப்பற்றி தயங்காதே. பரிசுத்தவான்களுக்குரிய பொறுமையை தரித்துக்கொள். நம் இரட்சகர்ஆவியாக நம்மோடிருக்கிறார். நமக்குத் தேவையானதை தம் காயப்பட்ட கரத்தால் கொடுக்கத்தயாராக இருக்கிறார். பொறுமையோடு காத்திருந்தவர்கள் அடைந்த ஆசீர்வாதங்களை உன்னால்அடையமுடியும். தாமதம் உன்னைப் பலப்படுத்தி, மெய்யான ஊழியத்திற்கென உன் பாதங்களைத்துரிதப்படுத்த தேவன் உதவி புரிவாராக.