August

ஓகஸ்ட் 2

ஓகஸ்ட் 2

ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள். பரலோகராஜ்யம் அவர்களுடையது (மத்.5:3).

ஆவியில் எளிமையுள்ள மக்கள் அனைவராலும் விரும்பப்படுவர். பொறாமையுள்ளவர்களைக் கண்டு மக்கள் பயப்படுவார்கள். வெறுப்பார்கள். இயேசு கூறுகிறார்: நீ (விருந்துக்கு) அழைக்கப்பட்டிருக்கும்போது, போய்த் தாழ்ந்த இடத்தில் உட்காரு. அப்பொழுது உன்னை அழைத்தவன் வந்து: சிநேகிதனே, உயர்ந்த இடத்தில் வாரும் என்று சொல்லும்போது, உன்னுடனேகூடப் பந்தியிருக்கிறவர்களுக்கு முன்பாக உனக்கு; கனமுண்டாகும் (லூக்.14:10).

தங்களை உயர்வாக நினைத்து, பெருமையாக நடந்து கொண்டவர்கள் தங்கள் மதிப்பை இழந்து மற்றவர்கள் முன்பு தாழ்த்தப்படும்போது, எவ்வளவு அவமானமடைவார்கள் என்பதை சற்று நினைத்துப் பாருங்கள். அதே வேளையில் எதிர்பாராத வகையில் உயர்ந்த இடத்தில் வைக்கப்படும் நிலைக்கு உயர்த்தப்பட்ட மக்கள் எவ்வளவாய் மகிழ்ச்சியடைவார்கள் என்றும் சிந்தித்துப்பாருங்கள். என்னுடைய நெடுங்கால அனுபவத்தில் கண்டு கொண்டவைகள் இவைதான். குறைவானவற்றை எதிர்பார்த்து வாழ்க்கின்றவர்கள் நிறைவாக நலமானவற்றைப் பெற்றனர். மரியாதையும், மதிப்பையும், பெயரையும், புகழையும் எதிர்பாராமல் பதவி உயர்வையும், பட்டங்களையும் துச்சமாக நினைத்து தேவனுக்கு ஊழியம் செய்து, மனிதருக்கு முன்பாக தங்கள் மதிப்பை உயர்த்திக்காட்டாமல் இருப்போர் சமுதாயத்தில் நல்ல மதிப்பைப் பெறுவர். பெருமைகொண்டு மக்களைத் தொடர்ந்து ஏமாற்ற முடியாது. அதனால் மகிழ்ச்சியையும் அடைய முடியாது. மக்கள் ஆவியில் எளிமையுள்ளவர்களைத்தான் விரும்புகின்றனர் என்பதைத் தௌ;ளத் தெளிவாக நம் வாழ்வில் காணமுடியும்.

தேவனும் தாழ்மையுள்ளவர்களைத்தான் விரும்புகிறார். ஆவியில் நொறுங்குண்டு, என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப் பார்ப்பேன் (ஏசாயா 66:2) என அவர் கூறியுள்ளார்.