August

ஓகஸ்ட் 1

ஓகஸ்ட் 1

அந்தப்படியே ஸ்திரீகளும்…. எல்லாவற்றிலேயும் உண்மையுள்ளவர்களுமாயிருக்கவேண்டும் (1.தீமோ.3:11).

இந்த வசனத்தையுடைய அதிகாரத்தைச் சபைகளில் தேர்தல் நடத்தும் வருடாந்தரக் கூட்டங்களின்போதும், அடிக்கடி கிறிஸ்தவக் குடும்பங்களிலும் வாசிக்கவேண்டும். சபையில் ஒரு பொறுப்பான, நம்பிக்கைக்குரிய இடத்தை மூப்ப னாகவோ, கண்காணியாகவோ பெறுவதும் குடும்பத்தில் கணவனுக்கு மனைவியாக இருப்பது ஒப்பிட்டுக் கூறத்தக்கப் பொறுப்பான பதவிகளாகும். அவனது தகுதிகளையெல்லாம் மனதில் தீர்மானித்ததினால் அவன் அவளைத் தனக்கு மனைவியாகத் தெரிந்துகொண்டான்.

ஒரு கணவன் தன் கடமையில் வெற்றி பெறுவதற்கும், தோல்வியடைவதற்கும் காரணமாக இருப்பவள் அவனது மனைவியேயாகும். மனைவியானவள் நல்லொழுக்கமுள்ளவளாயும் அவதூறு பண்ணாதவளாயும், தெளிந்த புத்தியுள்ள வளாயும், எல்லாவற்றிலேயும் உண்மையுள்ளவளுமாய் இருக்கவேண்டும். கணவனைத் தொடர்ந்து செல்வதும், குடும்பத்தையும், பிள்ளைகளையும் கவனிப்பதில் நிறைவடைவதும், குடும்ப வரவு செலவுகளைத் திட்டமிட்டு வருவதும், சிக்கனமாக இருப்பதும், கிறிஸ்தவர்களுக்கு உதவியாக இருந்து, ஆவிக்குரிய ஊழியங்களில் பங்கெடுத்து சிறுவர் ஊழியங்களையும், மிஷனறி ஊழியங்களையும் கைதாங்கும் பண்புள்ளவர்களாகவும் நடந்துகொள்வதுதான் அவளுக்கு மகிமையும் கீரீடமுமாகும்.

இப்படிப்பட்டவளையே நீதிமொழிகள் குணசாலியான ஸ்திரீயாகக் குறிப்பிட்டுக் கூறியுள்ளது. அவள், தன் வாயை ஞானம் விளங்கத் திறக்கிறாள். தயையுள்ள போதகம் அவள் நாவின்மேல் இருக்கிறது. அவள் சோம்பலின் அப்பத்தைப் புசியாமல், தன் வீட்டுக் காரியம் எப்படி நடக்கிறது என்று கண்ணோக்கமாயிருக்கிறாள். அவள் பிள்ளைகள் எழும்பி அவளைப் பாக்கியவதி என்கிறார்கள். அவள் புருஷனும் அவளைப் புகழுகிறான் (31:26-28).