May

மே 27

மே 27

நீ வெட்கப்படாத ஊழியக்காரனாயும் சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவனாயும் உன்னை தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படிக்கு ஜாக்கிரதையாயிரு (2.தீமோ.2:15).

ஒரு தரமுள்ள சிறந்த கட்டுரையை எழுதிவிட்டால் அதைப்பற்றி பெருமைகொள்வது இயல்பு. இது தவறல்ல. தன்னால் முடியாத ஒரு சிறந்த காரியத்தைச் செய்து முடித்துவிட்டதாக அதை எழுதியவனுக்கு ஒரு நிறைவு ஏற்படுவதுண்டு.

ஒரு கலைஞன் அல்லது வேலையாள் தன் வேலையில் கண்ணும் கருத்துமாக இருப்பதைப்போன்று நாமும் நமது வேதத்தைக் கருத்துடன் படிக்கவேண்டும். வேதாகமத்திலுள்ள சத்தியத்தையும், விசுவாசத்தையும், அலங்காரத்தையும், கடமை உணர்வினையும் நமக்குச் சொந்தமாக்கிக்கொள்ளவேண்டுமாயின் நாம்தான் அதிக முயற்சி எடுக்கவேண்டும். உழைப்பும், அறிவும், விடா முயற்சியும், முன்னேற்றமும் வேதத்தைப் படிக்க உதவும் கருவிகள். இதோடு நின்றுவிடாமல் கற்றதை வாழ்வில் செயல்படுத்த கீழ்ப்படிதல் மிகமிக அவசியம்.

நாம் வேலையில் கண்ணும் கருத்துமாக இருப்பதைக் கண்டு பிறர் நம்மைப் புகழும்போது நாம் மகிழ்ச்சியடைகிறோம். நாம் ஜாக்கிரதையுடன் வேதத்தைப் படித்ததற்கு உன்னதமான தேவனால் நியாயத்தீர்ப்பு நாளில் புகழந்து கூறப்படும்போது இதைக் காட்டிலும் எவ்வளவு அதிகமாய் மகிழ்ச்சியடைவோம் என்று சிந்தித்துப்பாருங்கள்! இப்பொழுது மட்டுமல்ல, எப்பொழுதும் வெட்கப்படவேண்டாம்!